திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 643 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
643நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 7
பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
பதவுரை Show / Hide
பொருத்தம் உடைய நம்பியை, Porutham Udaya Nambiyai - பொருத்தமுடைய ஸ்வாமியாய்
புறம் போல் உள்ளும் கரியானை, Puram Pol Ullum Kariyaanai - உடம்பு போலே உள்ளமும் கறுத்திரா நின்றவனாய்
கருத்தை பிழைத்து நின்ற, Karuthai Pizhaithu Nindra - நான் எண்ணும் எண்ணத்தைத் தப்பி நிற்பவனாய்
அக் கரு மா முகிலை, ak karu maa mukilai - கறுத்துப் பெருத்த முகில் போன்றவனான அக் கண்ணபிரானை
கண்டீரே?, Kandire? - கண்டீரே?
அருத்தி, Aruthi - விரும்பப் பெறுகின்ற
தாரா கணங்களால், Thaaraa Kanangalal - நக்ஷத்ர ஸமூஹங்களாலே
ஆர பெருகு, Aara Perugu - மிகவும் நிறைந்திருந்துள்ள
வானம் போல், vanam pol - ஆகாசம் போல்
வானம் போல் விருத்தம் பெரிது ஆய், Virutham Peridhu Aay - பெருங்கூட்டமாய்
வருவானை, varuvanai - எழுந்தருளா நின்ற அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே