| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 7 | திருப்பல்லாண்டு || 7 | தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே | தீயில், Theeyil - அக்னி/ஸூரியன் முதலிய பொருள்களைக் காட்டிலும் பொலிகின்ற, Polikindra - மிகவும் விளங்குகிற செம்சுடர், Semsudar - சிவந்த ஒளியை உடையவனாய் ஆழி, Aazhi - வட்டமாக திகழ், Thigazh - பிரகாசிக்கிற திருச் சக்கரத்தின் கோயில், Thiru Chakkarathin Koyil - ஸ்ரீஸுதர்சநாழ்வானுடைய இருப்பிடத் தின் பொறியாலே, Poriyale - சிந்தத்தாலே ஒற்றுண்டு நின்று, Ottrundu Nindru - அடையாளம் செய்யப்பட்டவராய் நின்று குடிகுடி, Kudikudi - தலைமுறை தலைமுறையாக ஆட்செய்கின்றோம், Aatcheikinrom - அடிமை செய்வதற்காக வந்தோம் மாயப் பொரு படை, Maaya Poru Padai - வஞ்சனையாகப் போர் செய்யும் ஸேனையை உடைய வாணனை, Vaananai - பாணாஸுரனுடைய ஆயிரம் தோளும், Ayiram Tholum - ஆயிரம் தோள்களிலிருந்தும் பொழி குருதி பாய, Pozhi Kuruthi Paaya - பொழியாநின்றுள்ள ரத்த வெள்ளம் பாயும்படியாக சுழற்றிய, Suzhatriya - சுழற்றப்பெற்ற ஆழி, Aazhi - திருவாழி யாழ்வானை வல்லானுக்கு, Vallaanukku - ஏந்தி நிற்க வல்லவனுக்கு பல்லாண்டு கூறுதுமே, Pallaandu Koordhume - திருப்பல்லாண்டு பாடுகிறோம் |