திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 753 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 2 | ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே | பதவுரை Show / Hideஆறும் ஆறும் ஆறு மாய, Aarum Aarum Aaru Maaya - முதல் ஆறு — அந்தணர்கள் ஆறு கர்மாக்களை —அத்யயனம் (தான் ஓதுதல்), அத்யாபனம் (ஓதுவித்தல்), யஜனம் (தான் வேள்வி செய்தல்), யஜனம் (பிறரை வேள்வி செய்வித்தல்), தானம் (தான் கொடுப்பது), ப்ரதிக்ரஹம் (பிறர் தருவதை வாங்கி கொள்ளுதல்) இந்த கருமங்களுக்கு அவன் நிர்வாஹகன். முதல் ஆறு, வேதமோதல் முதலான தொழில்களைச் சொல்வது. படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது, கொடுப்பது, பெறுவது என்று ஆறு செயல்கள் சொல்லப்படுகின்றன. அடுத்து ருது ஆறு — வசந்தம், க்ரீஷ்மம், வர்ஷ, சரத், ஹேமந்தம், சிசிரம் –இந்த ருதுக்களும் அவன் பிரவர்தகன். அவை கார்; கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியன. அடுத்த ஆறு யக்ஜம் –ஆக்ஞேயம், அக்நீஷோமீயம், வுபாம்சுயாஜம், ஐந்தரம், இரண்டு ஐந்த்ராஞ்ஞம் — ஆக்னேயம் முதலிய யாகங்கள். வேதம் ஓதல், வேள்வி வளர்த்தல், திருப்பலி கொடுத்தல், தானம் செய்தல் போன்று யாகங்கள் செய்பவர்கள் அனுஷ்டிக்கத் தக்க ஆறு செயல்கள். இவற்றில் முதல் மூன்றும் பவுர்ணமியில் செய்யப்படும் யாகங்கள் -பவுர்ணமாஸம் என்றும் அடுத்த மூன்றும் அமாவாசையில் செய்யப்படும் யாகங்கள் என்பதால் தர்சம் என்றும் இவை ஆறும் ஸ்வர்க்க பலத்துக்காக செய்யப்படுவதால் தர்ச பவுர்ணமாஸம் என்று ஒரே பெயராகச் சொல்லப்படும். இவனே சர்வ தேவதைகளுக்கும் சரீரியாய் இருந்து தானே சர்வ யஜ்ஞா போக்தாவாகிறான் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய், Oor Aindhum Aindhum Aindhumai - அடுத்து ஐந்து யஜ்ஞம் தேவ, பித்ரு, பூத, மனுஷ, ப்ரஹ்ம –பஞ்ச மஹா யக்ஜம் அருளுகிறார். பஞ்ச யஜ்ஞா போக்தாவும் இவனே. அடுத்த ஐந்து -பிராணன, அபான, வ்யான, வுதான, சமான. பஞ்ச ஆஹுதிகள். இவை ஐந்தும் அந்தர்யாமியான இவனுக்கு ஆராதனம். அடுத்த ஐந்து பஞ்ச அக்னிகள் –கார்ஹா பதியம், ஆஹஅவநீயம், தஷினாக்னி, சப்யம், ஆவசட்யம் …இவற்றை சரீரமாக கொண்டவன். ஏறு சீர் இரண்டுமாய், Eru Seer Irandumai - மிக்க அதிசயத்தை வுடைய ஞானம், விரக்தி இரண்டையும் தர வல்லவன். அவனை மட்டும் நோக்கும் ஞானமும், கடை அற பாசங்கள் விடுகை யாகிய வ்ரக்தியும் மால் பால் மணம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு கடையறப் பாசங்களைக் கை விட்டு ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு இவை இரண்டுமே முக்கியம் என்பதால் ஏறு சீர் -ஆகின்றன – மூன்றும், Moondrum - கீழ் சொன்ன ஞான விரக்திகள் பயனாக பெரும் பரபக்தி பரஞான, பரம பக்தி – அல்லது ஐஸ்வர்ய, கைவல்ய, பகவத் ப்ராப்திகளையும். அடுத்து "ஏழும்" என்று, Aduthu Ezham Endru - விவேகாதிகள் ஏழையும். விவேகம் (ஜாதி ஆஸ்ரய நிமித்த திஷ்ட தோஷங்கள் இல்லாத அன்ன சுத்தியால் உண்டாகும் காய சுத்தி), விமோஹம் (காமம், க்ரோதம் இல்லாமை), அப்யாசம்-(ஸூப ஆஸ்ரயமான வஸ்துவில் பலகாலம் பரிசீலனம் பண்ணுகை), க்ரியை-(பஞ்சம மஹா யஜ்ஜாதிகளை -நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானம்), கல்யாணம் -( சத்யம் ஆர்ஜவம் தயை அஹிம்சை பிறர் அபசாரங்களில் கண் வையாமை போன்றவை), அனவசடம் (சோக நிமித்தம் -மனசை மழுங்காது இருத்தல்), அனுடர்ஷம் (சந்தோஷத்தால் தலை கால் தெரியாமல் பொங்காது இருக்கை). எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மன தெளிவுக்கு இந்த விவேகாதி சப்தம் எல்லாம் தேவை – அடுத்த ஆறும், Adutha Aarum - ஞான பால ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் குணங்கள் இவற்றுக்கும் நிர்வாஹகன் அவன் எட்டும் " என்று –, Ettum Endru - அபஹத பாபமா -பாபம் சம்பந்தம் அற்றவன் -விஜரஹ -கிளத் தன்மை அற்று நித்ய யுவாவாய் இருப்பவன் விமிருத்யு மரணம் அற்றவன் -விசோக-சோகம் அற்றவன் – விஜிகத்சக பசி அற்றவன் -அபி பாஷா தாகம் அற்றவன் சத்ய காம சத்ய சங்கல்ப, ஆகிய எட்டு குணங்களும் தம்மைத் தொழும் அடியார்க்குத் தர வல்லவன் தம்மையே ஓக்க அருள் செய்யுமவன் அன்றோ வேறு வேறு ஞானமாகி, Veeru Veeru Gnaanamagi - வணங்கும் துறைகள் பல பல வாக்கி -கள்ள வேடத்தைக் கொண்டு போய் புறம் புக்க வாறும் என்று புத்த அவதாரமும் ஆனவனே மெய்யினோடு பொய்யுமாய், Meiyyinodu Poyyumai - மெய்யர்க்கு மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே பொய்யர்க்கே பொய்யனாகும். "புள் கொடி உடைய கோமான் போலே ஆஸ்திகர்களுக்கு தனது மெய்யான ரூபம் நாஸ்திகர்களுக்கு காட்டித் தராமலும் முமுஷுக்களுக்கு அவனையே தந்து -மற்றவர்களுக்கு சூத்திர பலமும் தந்து, தள்ளி நிற்பவன் ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே, Oorodu Osaiyaai Aindhumai Vaai Maayane - ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே நின்னை யார் நினைக்க வல்லரே – ஸ்பர்சம் சப்தம் மற்றும் ரூபம் ரசம் கந்தம் ஐந்தையும் அவனாவது உண்ணும் சோறும் பருகும் நீறும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -போலே. "கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம்கருவி. கண்ட. இன்பம் எம்பெருமான் தானே மெய்ப்பொருள் கண்டார்க்கு சர்வவித போக்யமும் அவனே ஆயர் ஏறே மெய் பொருள் கண்டார்க்கு –ஆய- மாய மாயனே -நம்மிடையே வந்து -திவ்ய மங்கள விக்ரஹத்தை சம்சாரி சஜாதீயமாக்கி வந்து பிறந்து அருளிய ஆச்சர்யம் |