திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 752 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 1 | பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே | பதவுரை Show / Hideபூநிலாய ஐந்துமாய், Poonilaaya Aindhumai - பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய் புனல் கண் நின்ற நான்குமாய், Punal Kan Nindra Naangumai - நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய் தீநிலாய மூன்றுமாய், Theenilaaya Moondrumai - தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய் சிறந்த கால் இரண்டுமாய், Sirandha Kaal Irandumai - சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய் மீநிலாய தொன்றுமாகி, Meenilaaya Thondrumagi - ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய் வேறு வேறு தன்மையாய், Veeru Veeru Thanmaiyaai - பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய் நீநிலாய வண்ண, Neenilaaya Vanna - கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும் நின்னை, Ninnai - சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும் யார் நினைக்க வல்லீரே, Yaar Ninaikka Valliire - ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர் |
| 753 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 2 | ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே | பதவுரை Show / Hideஆறும் ஆறும் ஆறு மாய, Aarum Aarum Aaru Maaya - முதல் ஆறு — அந்தணர்கள் ஆறு கர்மாக்களை —அத்யயனம் (தான் ஓதுதல்), அத்யாபனம் (ஓதுவித்தல்), யஜனம் (தான் வேள்வி செய்தல்), யஜனம் (பிறரை வேள்வி செய்வித்தல்), தானம் (தான் கொடுப்பது), ப்ரதிக்ரஹம் (பிறர் தருவதை வாங்கி கொள்ளுதல்) இந்த கருமங்களுக்கு அவன் நிர்வாஹகன். முதல் ஆறு, வேதமோதல் முதலான தொழில்களைச் சொல்வது. படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது, கொடுப்பது, பெறுவது என்று ஆறு செயல்கள் சொல்லப்படுகின்றன. அடுத்து ருது ஆறு — வசந்தம், க்ரீஷ்மம், வர்ஷ, சரத், ஹேமந்தம், சிசிரம் –இந்த ருதுக்களும் அவன் பிரவர்தகன். அவை கார்; கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியன. அடுத்த ஆறு யக்ஜம் –ஆக்ஞேயம், அக்நீஷோமீயம், வுபாம்சுயாஜம், ஐந்தரம், இரண்டு ஐந்த்ராஞ்ஞம் — ஆக்னேயம் முதலிய யாகங்கள். வேதம் ஓதல், வேள்வி வளர்த்தல், திருப்பலி கொடுத்தல், தானம் செய்தல் போன்று யாகங்கள் செய்பவர்கள் அனுஷ்டிக்கத் தக்க ஆறு செயல்கள். இவற்றில் முதல் மூன்றும் பவுர்ணமியில் செய்யப்படும் யாகங்கள் -பவுர்ணமாஸம் என்றும் அடுத்த மூன்றும் அமாவாசையில் செய்யப்படும் யாகங்கள் என்பதால் தர்சம் என்றும் இவை ஆறும் ஸ்வர்க்க பலத்துக்காக செய்யப்படுவதால் தர்ச பவுர்ணமாஸம் என்று ஒரே பெயராகச் சொல்லப்படும். இவனே சர்வ தேவதைகளுக்கும் சரீரியாய் இருந்து தானே சர்வ யஜ்ஞா போக்தாவாகிறான் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய், Oor Aindhum Aindhum Aindhumai - அடுத்து ஐந்து யஜ்ஞம் தேவ, பித்ரு, பூத, மனுஷ, ப்ரஹ்ம –பஞ்ச மஹா யக்ஜம் அருளுகிறார். பஞ்ச யஜ்ஞா போக்தாவும் இவனே. அடுத்த ஐந்து -பிராணன, அபான, வ்யான, வுதான, சமான. பஞ்ச ஆஹுதிகள். இவை ஐந்தும் அந்தர்யாமியான இவனுக்கு ஆராதனம். அடுத்த ஐந்து பஞ்ச அக்னிகள் –கார்ஹா பதியம், ஆஹஅவநீயம், தஷினாக்னி, சப்யம், ஆவசட்யம் …இவற்றை சரீரமாக கொண்டவன். ஏறு சீர் இரண்டுமாய், Eru Seer Irandumai - மிக்க அதிசயத்தை வுடைய ஞானம், விரக்தி இரண்டையும் தர வல்லவன். அவனை மட்டும் நோக்கும் ஞானமும், கடை அற பாசங்கள் விடுகை யாகிய வ்ரக்தியும் மால் பால் மணம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு கடையறப் பாசங்களைக் கை விட்டு ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு இவை இரண்டுமே முக்கியம் என்பதால் ஏறு சீர் -ஆகின்றன – மூன்றும், Moondrum - கீழ் சொன்ன ஞான விரக்திகள் பயனாக பெரும் பரபக்தி பரஞான, பரம பக்தி – அல்லது ஐஸ்வர்ய, கைவல்ய, பகவத் ப்ராப்திகளையும். அடுத்து "ஏழும்" என்று, Aduthu Ezham Endru - விவேகாதிகள் ஏழையும். விவேகம் (ஜாதி ஆஸ்ரய நிமித்த திஷ்ட தோஷங்கள் இல்லாத அன்ன சுத்தியால் உண்டாகும் காய சுத்தி), விமோஹம் (காமம், க்ரோதம் இல்லாமை), அப்யாசம்-(ஸூப ஆஸ்ரயமான வஸ்துவில் பலகாலம் பரிசீலனம் பண்ணுகை), க்ரியை-(பஞ்சம மஹா யஜ்ஜாதிகளை -நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானம்), கல்யாணம் -( சத்யம் ஆர்ஜவம் தயை அஹிம்சை பிறர் அபசாரங்களில் கண் வையாமை போன்றவை), அனவசடம் (சோக நிமித்தம் -மனசை மழுங்காது இருத்தல்), அனுடர்ஷம் (சந்தோஷத்தால் தலை கால் தெரியாமல் பொங்காது இருக்கை). எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மன தெளிவுக்கு இந்த விவேகாதி சப்தம் எல்லாம் தேவை – அடுத்த ஆறும், Adutha Aarum - ஞான பால ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் குணங்கள் இவற்றுக்கும் நிர்வாஹகன் அவன் எட்டும் " என்று –, Ettum Endru - அபஹத பாபமா -பாபம் சம்பந்தம் அற்றவன் -விஜரஹ -கிளத் தன்மை அற்று நித்ய யுவாவாய் இருப்பவன் விமிருத்யு மரணம் அற்றவன் -விசோக-சோகம் அற்றவன் – விஜிகத்சக பசி அற்றவன் -அபி பாஷா தாகம் அற்றவன் சத்ய காம சத்ய சங்கல்ப, ஆகிய எட்டு குணங்களும் தம்மைத் தொழும் அடியார்க்குத் தர வல்லவன் தம்மையே ஓக்க அருள் செய்யுமவன் அன்றோ வேறு வேறு ஞானமாகி, Veeru Veeru Gnaanamagi - வணங்கும் துறைகள் பல பல வாக்கி -கள்ள வேடத்தைக் கொண்டு போய் புறம் புக்க வாறும் என்று புத்த அவதாரமும் ஆனவனே மெய்யினோடு பொய்யுமாய், Meiyyinodu Poyyumai - மெய்யர்க்கு மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே பொய்யர்க்கே பொய்யனாகும். "புள் கொடி உடைய கோமான் போலே ஆஸ்திகர்களுக்கு தனது மெய்யான ரூபம் நாஸ்திகர்களுக்கு காட்டித் தராமலும் முமுஷுக்களுக்கு அவனையே தந்து -மற்றவர்களுக்கு சூத்திர பலமும் தந்து, தள்ளி நிற்பவன் ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே, Oorodu Osaiyaai Aindhumai Vaai Maayane - ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே நின்னை யார் நினைக்க வல்லரே – ஸ்பர்சம் சப்தம் மற்றும் ரூபம் ரசம் கந்தம் ஐந்தையும் அவனாவது உண்ணும் சோறும் பருகும் நீறும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -போலே. "கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம்கருவி. கண்ட. இன்பம் எம்பெருமான் தானே மெய்ப்பொருள் கண்டார்க்கு சர்வவித போக்யமும் அவனே ஆயர் ஏறே மெய் பொருள் கண்டார்க்கு –ஆய- மாய மாயனே -நம்மிடையே வந்து -திவ்ய மங்கள விக்ரஹத்தை சம்சாரி சஜாதீயமாக்கி வந்து பிறந்து அருளிய ஆச்சர்யம் |
| 754 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 3 | ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே | பதவுரை Show / Hideஐந்தும், Aindhum - ஆகாசாதி பூதங்கள் ஐந்தும் ஐந்தும், Aindhum - ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்தும் ஐந்தும், Aindhum - கருமேந்திரியங்கள் ஐந்தும் ஐந்தும், Aindhum - தந்மாத்ரைகள் ஐந்தும் மூன்றும், Moondrum - ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் என்ற மூன்றும் ஒன்றும், Ondrum - மநஸ்ஸாகிய ஒன்றும் ஆகி, Aagi - (ஆக இப்படிப்பட்ட இருபத்தினாலு தத்துவங்கட்கு) நிர்வாஹகனாய் அல்ல வற்றுளாயும் ஆய் நின்ற, Alla Vattrulayaum Aay Nindra - கீழ்ச்சொல்லப்பட்ட அசித்துப் போலன்றியே சேதநராயுள்ளவர்கட்கும் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கிற ஆதிதேவனே!, Aadhithevaney - முழு முதற்கடவுளே! அந்தரத்து அணைந்து! நின்று, Andharathu Anaindhu Nindru - பரமபதத்திலே பொருந்தி நின்று ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி, Aindhum Aindhum Aindhum Aagi - அப்ராக்ருத பஞ்சசக்திகளுக்கும் ஜ்ஞாநேதிரியங்களைந்துக்கும், கருமேந்திரியங்களைந்துக்கும் நிர்வாஹகனாய் ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை, Aindhum Aindhum Aay Ninnai - சப்தாதிபோக்யங்களைந்துமாய், போகஸ்தாகம், போகோபகரணம், வைகுந்தத்தமர் முனிவர் முக்தர் என்ற ஐந்து வகுப்புகட்கு நியாமகனுமா யெழுந்தருளியிருக்கிற உன்னை. யாவர் காண வல்லர், Yaavar Kaan Vallar - யார் அறியவல்லர்? (யாருமறியகில்லார்.) |
| 755 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 4 | மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தியாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே | பதவுரை Show / Hideமூன்று முப்பது, Moondru Muppathu - முப்பத்து மூன்று ஹல்லெழுத்துகட்கும் ஆறினொரு ஒரு ஐந்தும் ஐந்தும், Aarinaroru Oru Aindhum Aindhum - பதினாறு அச்செழுத்துகட்கும் ஐந்து, Aindhu - ளகாராதி பஞ்சாக்ஷரங்கட்கும் ஆய், Aay - நிர்வாஹகனாய் மூன்று மூர்த்தி ஆகி, Moondru Moorthi Aagi - ருக்கு, யஜுஸ், ஸரமம் னஎ“கிற வேதத்ரய ஸ்வரூபியாய் மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய், Moondru Moondru Moondru Moondrum Aay - த்வாதசாக்ஷரீ ப்ரதி பாத்யனாய் மூன்று தோன்று சோதி ஆய், Moondru Thondru Sothi Aay - மூன்று ட்அஷரமாகிய ப்ரணவத்திலே விளங்கும் ஜ்யோதிரிமயனாய் துளக்கம் இல் விளக்கம் ஆய், Thulakkam Il Vilakkam Aay - என்று மழிவற்ற விளக்காகிய அகாரத்துக்கு வாச்யனாய் எம் ஈசனே, Em Eesane - எமக்கு நிருபாதிக சேஷியாயிருப்பவனே! என்று, Endru - (என் காரியங்களையெல்லாம் நீயே உன் தலைச்சுமையாக) ஏறிட்டுக்கொண்டு என் ஆவியுள், En Aaviyul - என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே புகுந்தது, Pugundhadhu - புகுந்திருப்பது என் கொல்?, En Kol - என்ன நீர்மை! |
| 756 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 5 | நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே | பதவுரை Show / Hideநின்று, Ninru - ஸ்தாவரமாயும் இயங்கும், Iyankum - ஜங்கமமாயுமிருக்கிற ஒன்று அலா ருக்கள் தோறும், Onru Ala Rukkal Thorum - பலவகையான சரீரங்கள் தோறும் ஆவி ஆய், Aavi Aay - ஆத்மாவாய் ஒன்றி, Onri - பொருந்தி உள் கலந்து நின்ற, Ul Kalandu Ninra - பரிஸமாப்ய வர்த்தியாநின்ற நின்ன, Ninna - உன்னுடைய தன்மை, Thanmai - ஸ்வபாவம் இன்னது என்று, Innadhu Endru - இத்தகையதென்று என்றும், Endrum - எக்காலத்திலும் யார்க்கும், Yaarkkum - எப்படிப்பட்ட ஞானிகட்கும் எண் இறந்த, En Irandha - சிந்திக்க முடியாதிருக்கிற ஆதியாய், Aadhiyai - ஆதிகாரணபூதனனான எனம்பெருமானே! (நீ) அன்று, Andru - முற்காலத்திலே நின் உந்திவாய், Nin Undivai - உனது திருநாபியில் நான் முகன், Naan Mughan - சதுர்முகப்ரஹ்மாவை பயந்த, Payandha - படைத்த ஆதிதேவன் அல்லையே, Aadhithevan Allaiye - முழு முதற் கடவுளல்லையோர். |
| 757 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 6 | நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே | பதவுரை Show / Hideநாகம் ஏந்தும் ஆக, Naagam Aendhum Aaga - திரு அனந்தவாழ்வானாலே தரிக்கப் பட்ட திருமேனியை யுடைய எம்பெருமானே நாகம் ஏந்து மேரு வெற்பை, Naagam Aendu Meru Verpai - ஸ்வர்க்க லோகத்தை தரிக்கிற மேரு பர்வதத்தையும் நாகம் ஏந்து மண்ணினை, Naagam Aendu Manninai - திருவனந்தாழ்வான்-அல்லது திக்கஜங்களால் தரிக்கப்பட்ட பூமியையும் நாகம், Naagam - சர்ப்பத்துக்கும் யானைக்கும் – மாகம், Maakham - பரம பதத்தையும் மாகம் ஏந்து வார் புனல், Maakham Aendu Vaar Punal - ஆகாசத்தால் தரிக்கப்பட்ட கங்கையையும் மாகம் ஏந்து மங்குல், Maakham Aendu Mangul - ஆகாசத்தால் தரிக்கப்பட்ட மேக மண்டலத்தையும் தீ ஓர், Thee Oru - ஓர் தீ -வைச்வானர அக்னியையும் வாயு ஐந்து, Vaayu Ainthu - பஞ்ச வ்ருத்தி பிராணங்களையும் அமைந்து காத்து, Amaindhu Kaathu - பொருந்தி ரஷித்து அருளி ஏகம் ஏந்தி நின்ற நீர்மை, Egam Aendi Nindra Neermai - எல்லாவற்றையும் ஒரு வஸ்துவே தரித்துக் கொண்டு நிற்கிறது என்று நின் கணேயியன்றதே, Nin Kaneyiyandrathe - உன்னிடத்தில் தான் இருக்கின்றது – முதலடியின் முதலிலுள்ள நாகம், Muthaladiyin Muthalilulla Naagam - நாசா” என்ற வடசொல்லிகாரம். ***- ***- என்பது ச்ருதி. அதற்கு மேல் நாகம், Adharku Mel Naagam - நாஹா என்ற வடசொல் விகாரம். அந்த பதத்திற்கு ஸர்ப்பமென்றும், யானையென்றும் இரண்டு பொருள்களுண்டு . இரண்டு பொருளும் இங்கு ஏற்கும். பூமியானது ஆதிசேஷனாலும், திக்கஜங்களாலும் தாங்கப்படுவதால். இரண்டாவடியிலுள்ள நாகமும், Bhoomiyanathu Aadhiseshanalum Thikkajangalalum Thaangappaduvadhal Irandavadiyilulla Naagamum - நாஹா என்ற வடசொல் விகரம் (“நாகமேந்துமாகன்” என்பதன் அண்மைவிளி.) முதல் மாகம், Muthal Maakham - பரமாகாசவாசகம். இரண்டாவது மாகம், Irandavathu Maakham - ப்ரஸித்தாகாசவாசகம். மூன்றாமடியிலுள்ள மாகமும், Moondramadiyilulla Maakamum - ஹோவா. என்ற வடசொல் விகாரமே. ஏகமேந்தி நின்ற நீர்மை, Egam Aendi Nindra Neermai - “***- ***- ” என்றிவை முலான வேதாந்த வாக்கியங்களில் ஓதப்பட்டுள்ள அர்த்தம் உன் பக்கலில்தான் பொருந்தியிரா நின்றதென்றபடி. ஏகம், Egam - வன்கம். நின் கண்= கண், Nin Kan Kan - எழலுருபு. |
| 758 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 7 | ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே | பதவுரை Show / Hideஒன்று இணர்டு மூர்த்தி ஆய், Onru Inartu Murtthi Ay - ப்ரதாநமான ஒரு மூர்த்தியும் அப்ரதாநமான இரண்டு மூர்த்தியுமாய் உறக்கமோடு உணர்ச்சி ஆய், Urakkamotu Unarcci Ay - அஜ்ஞாநத்துக்கும் ஸத்ஜ்ஞானத்துக்கும் நியாமகனாய் ஒன்று இரண்டு காலம் ஆகி, Onru Intu Kalam Aki - மூன்று காலங்களுக்கும் நிர்வாஹனாய் வேலை ஞாம் ஆயினாய், Velai Nam Ayinay - கடல்சூழ்ந்த பூமண்டலத்துக்கு ப்ரவத்தகனாய் ஒன்று இரண்டு தீயும் ஆகி, Onru Intu Tiyum Aki - மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹனாய் ஆயன் ஆய, Ayan Ay - கோபாலஸஜாதீயனாய் அவதரித்த மாயனே!, Mayane - ஆச்சர்யபூதனான எம்பெருமானே! ஒன்று இரண்டு கண்ணினாலும், Onru Intu Kanninalum - முக்கண்ணனான சிவபிரானும் உன்னை, Unnai - உன்னை ஏந்த வல்லனே, Enda Vallane - துதிக்க வல்லவனே! |
| 759 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 8 | ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே | பதவுரை Show / Hideஆதி ஆன கால, Ati An Kala - ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனானவனே!. ஆதி ஆன, Ati An - ஜக்த்ஸ்ருஷ்டி முதலினவற்றுக்குக் கர்த்தாக்களான வானவர்க்கும், Vanavarkkum - (பிரமன் முதலிய) தேவதைகட்கும். அண்டம் ஆய அப்புறத்து ஆகி ஆன வானவர்க்கும், Antam Ay Appurattu Aki An Vanavarkkum - அண்டமென்று பெயர் பெற்ற அப்பரமபதத்திலுள்ள ப்ரதாநகர்களான நித்யஸூரிகளுக்கும் ஆதி ஆன, Ati An - நிர்வாஹகனான ஆதி, Ati - அதிபதி நீ, Ni - நீயாகிறாய்; ஆதி ஆன, Ati An - ஜகத்துக்குக் கடவர்களாக ஏற்பட்டிருக்கிற வானம் வாணர், Vanam Vanar - (பிரமன் முதலிய) மேலுலகத்தவர்களினுடைய அந்த காலம், Anta Kalam - முடிவு காலத்தை நீ உரைத்தி, Ni Uraitti - நீ அருளிச்செய்ய நின்றாய். ஆதி காலம ஆன நின்னை, Ati Kalam An Ninnai - ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனான உன்னை. யாவர் காணவல்லர், Yaavar Kaanavallar - பரிச்சேதிக்க வல்லார் யார்? |
| 760 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 9 | தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே | பதவுரை Show / Hideதாது உலாவு, Thaadu Ulaavu - தாதுகள் உலாவுகின்ற கொன்றை மாலை, Konrai Maalai - கொன்னைப்பூ மாலையையும் துன்னு செம் சடை, Thunnu Sem Sadai - நெருங்கிய சிவந்த சடையையுடைய சிவன், Sivan - ருத்ரன் நீதியால், Neethiyaal - முறைமைப்படி வணங்கு, Vanangu - வணங்கப்பெற்ற பாத, Paadha - திருவடிகளையுடையவனே! நின்மலா!, Ninmalaa - நிர்மலஸ்வரூபியே! நிலாய சீர்வேதம் வாணர், Nilaaya Seerveedham Vaanar - நிரம்பிய குணங்களையுடைய வைதிகர்களென்ன கீதம், Geetham - வேள்வியார் நீதி ஆன கேள்வி யார், Neethi Aana Kelpvi Yaar - சிரமப்படி ச்ரவண மநநங்களை ச் செய்கிற மஹான்களென்ன (இவர்கள்) நீதியால், Neethiyaal - சாஸ்த்ரவிதிப்படி வணங்கு நின்ற நீர்மை, Vanangu Nindra Neermai - வணங்குகைக்கு உரிய தன்மை. நின் கண்ணே நின்றது, Nin Kannae Nindrathu - உன் பக்கலில்தான் உள்ளது. |
| 761 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 10 | தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே | பதவுரை Show / Hideதன்னுள்ளே திரைத்து, Thannulle Thiraithu - தன்னிலே கிளர்ந்து எழும், Ezhum - பரவுகின்ற தரங்கம், Tharangam - அலைகளையுடைத்தாய் வெண்தடம், Venthadam - வெளுத்த ப்ரதேசங்களையுடைத்தான கடல், Kadal - கடலானது தன்னுள்ளே திரைத்து எழுந்து, Thannulle Thiraithu Ezunthu - தனக்குள்ளே கிளர்துலாவி அடங்குகின்ற தன்மைபோல், Adanginru Thanmaipol - (மறுபடியும்) சாந்தமாவதுபோல. நிற்பவும், Nirbavum - ஸ்தாவரஜங்கமரூபமான ப்ரபஞ்சமெல்லாம் நின்னுள்ளே, Ninnulle - உன் ஸ்வரூபத்துக்குள்ளே பிறந்து, Pirandhu - உத்பந்தமாய் இறந்து, Irandhu - லாபமடைந்து நின்னுள்ளே அடக்குகின்ற நீர்மை, Ninnulle Adakkinru Neermai - (இப்படி) உன் ஸ்வரூபத்துக்குள்ளேயே ஒடுங்கிப்பொருகைக்கு உரிய தன்மை நின் கண்ணே நின்றது, Nin Kannae Nindrathu - உன் பக்கலில் தான் உள்ளது. |
| 762 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 11 | சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே | பதவுரை Show / Hideசொல்லினால், Sollinaal - வேதாந்த சாஸ்த்ர முகத்தாலே தொடர்ச்சி நீ, Thodarcci Nee - (ஏகாந்திகளுக்கு) உறவை உண்டு பண்ணுமவன் நீ; சொலப்படும் பொருளும் நீ, Solappadum Porulum Nee - (சில புராணாதிகளில் ஆச்ரயணீயராகச்) சொல்லப்படுகிற தேவாதி பதார்த்தங்களுக்கு அந்ராத்மா நீ; சொல்லரினால் சொல்லப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால், Sollarinaal Sollappadadhu Thondruginra Sothi Nee Sollinaal - நீ காட்டிக்கொடுத்த வேதத்திற் சொல்லியபடி படைக்க, Padaikka - (உலகங்களை) உண்டாக்குவதற்காக நீ படைக்க வந்து தோன்றினார், Nee Padaikka Vandu Thondrinaar - உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டு வந்து பிறந்தவர்களான ப்ரஹ்மாதிகன் சொல்லினால், Sollinaal - சப்தங்களைக் கொண்டு சுருங்க, Surunga - சுருக்கமாவாவது நின் குணங்கள், Nin Gunangal - உனது கல்யாண குணங்களை சொல்லவல்லரே., Sollavallarai - வர்ணிக்க சக்தர்களோ? (அல்லர்.) |
| 763 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 12 | உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே | பதவுரை Show / Hideஉலகு தன்னை, Ulaku Thannai - லோகங்களை நீ படைத்தி, Nee Padaiththi - நீ ஸ்ருஷ்டியாகின்றாய்; உள் ஒடுக்கி வைத்தி, Ul Odduki Vaiththi - (நித்யஸநமித்திகாதி ப்ரளயாபத்துக்களிலே அவ்வுலகங்களைத்) திருவயிற்றினுள்ளே ஒடுங்கவைத்து நீயே நோக்கா நின்றாய். மீண்டு, Meendu - அதுமன்றியில் உலகு தன்னே, Ulaku Thanne - இவ்வுலகத்தினுள்ளே பிறத்தி, Piraththi - வந்து அவதரியா நின்றாய்; ஓர் இடத்தை அல்லை, Oru Idaththai Allai - ஓரிடத்தை இருப்பிடமாகவுடையை என்று நிர்ணயிக்க முடியாதவனாயிரா நின்றாய்; உலகு, Ulaku - ப்ரபஞ்சம் முழுதும் நின்னொடு ஒன்றி நிற்க, Ninnodu Onri Nirka - (சரீரியான) உன்னோடு (சரீரமாய்) அணைந்து நிற்க வேறு நிற்றி, Veeru Nittir - அஸாதாரண விக்ரஹகத்தோடு கூடி வ்யாவ்ருத்தனாயிரா நின்றாய்; உலகில், Ulagil - லோகத்திலே குழல் உள்ள நின்னை, Kuzhal Ulla Ninnai - ஆச்சரியமான படிகளையுடைய உன்னை யாவலர் உள்ள வல்லவர், Yaavalar Ulla Vallar - அறியவல்லாரார்? |
| 764 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 13 | இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே | பதவுரை Show / Hideஇன்னை என்று, Innai Endru - ‘நீ இப்படிப்பட்டவன்’ என்று சொல்லலாவது, Sollalavathu - சொல்லக்கூடியது யாதும் இல்லை, Yaadum Illai - ஒரு படியுமில்லை; உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர், Un Pinakku Unarnth Pettriyor - உன்னுடைய அவதாராதி விஷயங்களில் ஆச்ரிதர்க்கும் அநாச்சரிதர்க்கு முள்ள விவாதத்தை அறிந்திருக்கும் மஹான்கள் (உன்னை) ஆதியும், Aadhiyum - (விக்ரக்ஷபரிக்ரக்ஷம் பண்ணினதற்குக்கு) காரணத்தையும் நீர்மையால் நினைக்கில் (அல்லது), Neermaiyaal Ninaikkil Allathu - உன்னுடைய கிருபையினாலே நீ அறிவிக்க இறியுமதெழிய இட்டிடை பின்னை கேள்வன் என்பர் நின்னை, Ittidai Pinnai Kelvvan Enbar Ninnai - நுண்ணிய இடையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு வல்லபனானகக் கூறுவர்கள்; உன்னுடைய பின்னை ஆய கோல மோடு, Pinnai Aaya Kola Modu - ஸர்வவிலக்ஷணமான திவ்விய மங்கள விக்ரக்ஷத்தையும் பேரும் ஊரும், Perum Oorum - திருநாமங்களையும் திவ்யஸ்தானங்களையும் ஆர் நினைக்க வல்லர், Aar Ninaikka Vallar - (மற்றைப்படி) அறிய வல்லாரார்? |
| 765 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 14 | தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்ன தென்ன வல்லமல்ல வாகிலும்
சாம வேத கீதனாய சக்ர பாணி அல்லையே | பதவுரை Show / Hideதூய்மை யோகம் ஆயினாய், Thuymai Yogam Aayinai - ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே! துழாய் அலங்கல் மழையாய், Thuzhai Alangkal Mazhaiyai - திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே! ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ!, Aamai Aagi Aazh Kadal Thuyindra Aadhitheva - கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே! நின் நாமதேயம், Nin Naamathayam - உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள் இன்னது என்ன, Innadhu Enna - இன்னின்னவை யென்று சொல்ல வல்லம் அல்ல ஆகிலும், Vallam Alla Aagilum - யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும் சாம வேத கீதன் ஆய, Saama Veda Geethan Aaya - ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான சக்ர பாணி அல்லையே, Sakra Paani Allaiye - கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்) |
| 766 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 15 | அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வ மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே | பதவுரை Show / Hideஅங்கம் ஆறும், Angam Aarum - சீக்ஷை முதலிய ஆறு அங்கங்களென்ன வேதம்நான்கும், Vedhamnankum - (அங்கியான) நான்கு வேதங்களென்ன (இவற்றுக்கு) ஆகி நின்று, Aagi Nindru - ப்ரவர்த்தகனாய் வேதங்களினுள்ளே தங்குகின்ற தன்மையாய், Thangugindra Thanmaiyaai - ஸுப்ரதிஷ்டிதமாயுள்ள ஸ்வரு பஸ்வாபங்களையுடையவனே! தடம்கடல், Thadhamkadal - மஹா ஸமுத்திரத்திலே பணம் தலை செம் கண் நாக அணை, Panam Thalai Sem Kan Naaga Anai - படங்களின் தலையிலே சிவந்த கண்களை யுடையனான தீருவனந்தாழ்வானாகிற அணையிலே கிடந்த, Kidandha - கண்வளர்ந்தருளுகிற மல்குசெல்வம் சீரினாய், Malkuselvam Seerinaai - நிறைந்த செல்வத்தையும் குணங்களையுடையவனே! சஙக வண்ணம் அன்னமேனி, Sangaka Vannam Annamaeni - சங்கினுடைய வர்ணம் போன்ற திருமேனியையுடையனாய் (கிருதயுகத்தில் திருவவதரித்து) சாரங்கபாணி அல்லையே, Saarangapaani Allaiye - (த்ரேதாயுகத்தில் இக்ஷ்வாகு குலத்திலே) கையும் வில்லுமாய் வந்து பிறந்தவன் நீயேயன்றோ? |
| 767 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 16 | தலைக் கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே | பதவுரை Show / Hideதலைக்கணம், Thalaikkanam - முதன்மைபெற்ற தேவகணமென்ன துகள், Thugal - க்ஷுத்ரமான ஸதாவரகணமென்ன குழம்பு சாதி, Kuzhambu Saadhi - மிச்ரயோனிகளான மநுஷ்ய திர்யக்ஜாதிகளென்ன இவற்றிலே சோதி, Sothi - அப்ராக்ருதமான தேஜஸ்ஸோடே கூட தோற்றம் ஆய், Thotram Aay - திருவவதரித்து நிலைக்கணகங்கள் காண, Nilai Kaanakangal Kaan - (தேவாதிகள் மாத்திரமே யன்றியே) ஸ்தாவரங்களும் (உன்னை) அனுபவிக்கும்படி வந்து நிற்றி, Vandhu Nitrri - வந்து நிற்கிறாயாகிலும் ஏலும் நீடு இரும் கலை கணங்கள், Aelum Needu Irum Kalai Kaanangal - நித்தியமாய் விரிந்தவையான வேதசாஸ்திர ஸமூஹங்கள் சொல் பொருளினால், Sol Porulinal - அபிதாநவ்ருத்தியாலும் கருத்தினால், Karuthinal - தாம்பர்ய வ்ருத்தியாலும் நினைக்க ஒணா, Ninaikka Onna - (உன் பெருமைகளை) நினைக்கவும் மாட்டாமல் மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி, Malai Kaanangal Pol Unarndhum Maatchi - பர்வத ஸமூஹஙக்ள்போல் அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலக்ஷண்யமானது நின் தன் மாட்சியே, Nin Than Maatchiye - உன்னுடைய வைலக்ஷண்ய மென்னுமித்தனை |
| 768 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 17 | ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே | பதவுரை Show / Hideஆதி தேவனே, Aadhi Devaney - ஸர்வகாரண பூதனான பெருமாளே! ஏகமூர்த்தி ஆய், Ekamurthi Aay - (பரமபதநிலயனான) பரவாஸு தேவமூர்த்தியாய் மூன்று மூர்த்தி ஆய், Moondru Moorthi Aay - ஸங்கர்ஷண, ப்ரத்யம்ந, அநிருத்தர்களாகிற மூன்று மூர்த்தியாய் முதலாயிரம், Muthalayiram - திருச்சந்த விருத்தம் நாலு மூர்த்தி ஆய், Naalu Moorthi Aay - ப்ரதாநம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய் நன்மை சேர் போகம் மூர்த்தி ஆய், Nanmai Ser Pogam Moorthi Aay - விலக்ஷணமாய்ப் போகத்தக்கு அர்ஹமான மூர்த்தியாய் புண்ணியத்தின் மூர்த்தி ஆய், Punniyaththin Moorthi Aay - புண்யமே வடிவுகொண்டதொரு மூர்த்தியாய் எண் இல் மூர்த்தி ஆய், En Il Moorthi Aay - (இப்படி) எண்ணிறந்த (பல பல) மூர்த்தியாய் நலம் கடல், Nalam Kadal - நல்ல திருப்பாற்கடலில் நாகம் மூர்த்தி சயனம் ஆய் கிடந்து, Naagam Moorthi Sayanam Aay Kidandhu - திருவனந்தாழ்வானுடைய திருமேனியைப் படுக்கையாக வுடையவனாய்க் கண் வளர்ந்தருளி மேல், Mel - அதுக்குமேலே ஆக மூர்த்தி ஆய வண்ணம், Aaga Moorthy Aaya Vannam - அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சரவதாரமாய் அவதரித்த தன்மை என் கொல், En Kol - என்னாயிருந்தது. |
| 769 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 18 | விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந் தழல்
விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப்
படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே | பதவுரை Show / Hideவேலை வண்ணனே, Vela Vannane - கருங்கடல் வண்ணனான எம்பெருமானே! விடத்த, Vidath - விஷத்தையுடைத்தான ஒரு ஆயிரம் வாய், Oru Aayiram Vaai - ஓராயிரம் வாய்களினின்றும் இரு ஆயிரம் கண், Iru Aayiram Kan - ஈராயிரம் கண்களினின்றும் வெம் தழல், Vem Thazhal - வெவ்விய தழலை விடுத்து, Viduthu - புறப்படவிட்டுக்கொண்டு, வீழ்வு இலாத போகம், Veelvu Iladha Pogam - ஒரு காலும் விச்சேதமில்லாத பகவநறுபவத்தையுடையனாய் மிக்க சோதி, Mikka Sothi - மிகுந்த ஜ்யோதிஸ்ஸையுடையனாய் விதானம் ஆய், Vidhanam Aay - மேற்கட்டிபோன்ற படங்களினுடைய மேல், Mel - மேற்புறத்திலே தொக்க, Thokka - திரள்திரளாயிருக்கிற சீர், Seer - அழகை தொடுத்து, Thoduthu - தொடுத்து பௌவம் நீர், Pauvam Neer - ஸமுத்ரஜலத்திலே படுத்த, Padutha - படுக்கையாக அமைந்த அரா அணை பாயல் பள்ளி கொள்ளது, Ara Anai Paayal Palli Kollathu - திருவனந்தாழ்வானாகிய சயகத்திலே பள்ளிகொண்டருளும் தன்னை என் சொல், En Sol - எத்திறம்! |
| 770 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 19 | புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே | பதவுரை Show / Hideமின்கொள் நேதமியாய், Minkol Nethamiyai - தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே! புள் அது ஆகி, Pul Athu Aagi - ஹம்ஸரூபியாய் அவதரித்து வேதம் நான்கும், Vedham Nankum - நான்கு வேதங்களையும் ஓதினாய், Othinai - உபதேசித்தருளினாய், அது அன்றியும், Adhu Anriyum - அதுவுமல்லாமல், புள்ளின் வாய் பிளந்து, Pullin Vaai Pilandhu - (உன்னை விழுங்குவதாக வாயைத் திறந்துகொண்டு வந்த) பகாஸுரனுடைய வாயைக் கிழித்து (அவனை முடித்து விட்டு) புள்கொடி பிடித்த பின்னரும், Pul Kodi Piditha Pinnarum - பெரிய திருவடியை த்வஜமாகப் பிடித்ததுமல்லாமல் புள்ளை, Pullai - அப்பெரிய திருவடியை ஊர்தி, Oorthi - வரஹநமாகக்கொண்டு செல்லா நின்றாய் ஆதலால், Aadhalal - இப்படி பலவகையான ரக்ஷணோபாயங்களைச் செய்தருளா நிற்கச் செய்தேயும் கடல், Kadal - திருப்பாற்கடலிலே புள்ளின் பகை மெய், Pullin Pagai Mey - கருடஜாதிக்குப் பகையென்று தோற்றும்படியான திருவளர் தாழ்வானுடைய திருமேனியிலே கிடத்தல், Kidaththal - பள்ளிகொள்வதை காதலித்தது, Kaadhaliththathu - விரும்பிப்போவதாகிய என்கொல், Enkol - என்ன திருவுள்ளத்தாலே? |
| 771 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 20 | கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே | பதவுரை Show / Hideமுன், Mun - அநாதிகாலமாக. வேலைநீர், Velaineer - ஸமுத்ரஜலத்திலே கூசம் ஒன்றும் இன்றி, Koosam Ondrum Inri - சிறிதும் கூசாதே மாசுணம், Masunam - திருவனந்தாழ்வானை படுத்து, Paduthu - படுக்கையாக விரித்து பேச நின்று தேவர் வந்து பாடக் கிடந்ததும், Pesa Nindru Thevar Vandu Paadak Kidandhadum - ஸ்தோத்தரம் பண்ணுவதற்கென்று அமைந்த ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பாடும்படி சமநித்தருளினபடியையும் அன்று, Andru - தேவர்களுக்காகக் கடல் கடைந்த அக்காலத்தில் பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா (என்று) ஏச நீ கிடந்த ஆறும், Paasam Nindra Neeril Vaalum Aamaiana Keshavaa Enru Aesa Nee Kidandha Aarum - “வருண பாசங்கள் கிடக்கிற கடலிலேவாழ்கின்ற ஆமையென்னும் க்ஷுத்ர ஜந்துவாகப் பிறந்த கேசவனே!” என்று (அவிவேகிகள்) ஏசும்படி கிடந்தபடியையும் தேற, Theera - அடியேன் நன்குதெரிந்து கொள்ளும்படி கூறு, Kooru - (எனக்கு) அருளிச் செய்யவேணும். |
| 772 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 21 | அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே | பதவுரை Show / Hideகுரங்கை, Kurangai - வானரப்படைகளை ஆள் உகந்த எந்தை !, Aal Ugandha Endhai - உகந்த ஆட்கொண்ட நாயனே! அரங்கனே, Aranganey - ஸ்ரீஅரங்கநாதனே! அன்று, Andru - (துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினாலே தேவர்கள் செல்வமிழந்து வருந்தி உன்னைச் சரணம் பற்றி நின்ற) அன்று தரங்கம் நீர் கலங்க, Tharangam Neer Kalanga - அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும் மா நிலம் குலங்க, Maa Nilam Kulanga - பெரிய பூமியானது குலுங்கவும் மாகணம் நெருங்க கலாய், Makanam Nerunga Kalai - வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி நீ கடைந்த, Nee Kadaindha - (கடலை) நீ கடைந்தருளின காலத்திலே நின்ற, Nindra - அருகே நின்று கொண்டிருந்த சூரர், Soorar - மிக்க பராக்ரமசாலிகளென்று பேர்பெற்ற தேவாஸுர ப்ரப்ருதிகள். என் செய்தார், En Seithaar - என்ன காரியம் செய்தார்கள் இது, Idhu - இவ்விஷயத்தை வேறு, Veru - விசேஷித்து தேற, Theera - நான் தெரிந்து கொள்ளும்படி கூறு, Kooru - அருளிச் செய்யவேணும். |
| 773 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 22 | பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே | பதவுரை Show / Hideபண்டும் இன்றும் மேலும் ஆய், Pandhum Indrum Maelum Aayi - மூன்று காலங்களிலும் கைவிடாதே நின்று ரக்ஷித்தருளுமவனாகையாலே ஞானம் எழும், Gnanam Ezhum - உலகங்களையெல்லாம் மண்டி உண்டு, Mandi Undu - (ப்ரளய வெள்ளம் கொள்ளாதபடி) விரும்பி அமுது செய்து ஓய் பாலன் ஆகி, Oy Palan Aagi - ஒப்பற்ற சிறு குழந்தையாய் ஆலிலை துயின்ற, Aalilai Thuyindra - ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின ஆதிதேவனே !, Aadithevaney - மூல புருஷனே! வண்டு, Vandu - வண்டுகளானவை கிண்டு, Kintu - (மதுவுக்காக வந்து) குடையும்படியான தண்துழாய் அலங்கலாய், Thanthuzhai Alanghalai - குளிர்ந்ததிருத்துழாய் மாலையை அணிந்தவனே! சீர் கலந்த புண்டரீக பாவை சேரும்மார்ப!, Seer Kalanda Pundareeka Paavai Serummaarpa - அழகு சேர்ந்த தாமரை மலரிற்பிறந்த பெரிய பிராட்டியார் வந்து புணரும்படியான திருமார்பையுடையவனே! பூமி நாதனே!, Bhoomi Naadhane - பூமிப்பிராட்டிக்கு நாதனே! (என்று ஈடுபடுகிறார்.) |
| 774 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 23 | வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊனிறத் துகிர்த் தல மழுத்தினாய் உலாய சீர்
நானிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கி
பால் நிறக் கடல் கிடந்த பத்ம நாபன் அல்லையே | பதவுரை Show / Hideவால் திறந்து, Vaal Thirandhu - வெளுத்த நிறத்தையுடைய ஓர் சீயம் ஆய், Oru Seeyam Aayi - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாயவதரித்து வளைந்த வாள் வயிற்றினன், Valainda Vaal Vayittrinann - வளைந்தும் ஒளிபெற்றுமிருக்கிற பற்களையுடையனான இரணியனுடைய ஊன் நிறத்து, Oon Nirathu - சரீரத்தில் மர்ம ஸ்தானத்திலே உதிர் தலம் அழுத்தினாய், Uthir Thalam Azhuthinai - கை நகங்களை அழுத்தினவனே! உலாய சீர், Ulaaya Seer - உலகமெங்கும் உலாவுகின்ற சீர்மையையுடைய கால் நிறத்த வேதம், Kaal Niraththa Vedham - உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம்,ப்ரசயம் எனகிற நால்வகை ஸ்வரங்களையுடைய வேதங்களை நாவர், Naavar - நாவிலே உடையவர்கள் (ச்ரோத்ரியர்கள்) நல்ல யோதினால், Nalla Yothinaal - விலக்ஷணமான உபாயத்தினாலே வணங்கு, Vanangu - வணங்குவதற்கு இடமான பால்நிறக் கடல், Paalnirak Kadal - திருப்பாற் கடலிலே கிடந்த, Kidandha - பள்ளிகொண்டருளின பற்பநரபன் அல்லையே, Parpanarapan Allaiye - பத்மநாபன் நீயேயன்றோ |
| 775 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 24 | கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர்
மங்கை மன்னு வாழு மார்ப வாழி மேனி மாயனே | பதவுரை Show / Hideகங்கை நீர், Gangai Neer - கங்கா தீர்த்தத்தை பயந்த, Payandha - உண்டாக்கின பாத பங்கயத்து எம் அண்ணலே, Paadha Pankayaththu Em Annale - தீருவடித் தாமரையையுடைய எம்பெருமானே! அம் கை, Am Kai - அழகிய திருக்கையிலே ஆழி சங்கு தண்டும் வில்லும் வாளும், Aazhi Sanghu Thandum Villum Vaalum - பஞ்சாயுதாழ்வாரக்ளை ஏந்தினாய் !, Aendhinai - ஏந்திக் கொண்டிருப்பவனே! சிங்கம் ஆய, Singam Aaya - நரஸிம்ம மூர்த்தியாயவதரித்த தேவ தேவ!, Deva Deva - தேவாதி தேவனே; தென் உலாவும் மெல்மலர் மங்கை, Then Ulaavum Melmalar Mangai - தேன் பொருந்திய ஸுகுமாரமான தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டி மன்னிவாழும் மார்ப, Mannivaazhum Maarba - (அப்பூவை விட்டு வந்து) பொருந்தி வாழும்படியான திருமார்பையுடையவனே! ஆழி மேனி, Aazhi Meeni - கடல் போன்ற திருமேனியையுடைய மாயனே, Maayaney - ஆச்சர்ய பூதனே! (என்று ஈடுபடுகிறார்.) |
| 776 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 25 | வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே | பதவுரை Show / Hideவரத்தினில், Varathinil - (பிரமன் கொடுத்த) வரத்திலே சிரத்தை மிக்க, Sirathai Mikka - அதிகமான நம்பிக்கையுடையவனாய் வாள் எயிறு, Vaal Eiyiru - வாள் போன்ற (பயங்கராமன) கோரப்பற்களையுடையவனான மற்றவன், Mattravan - ஆச்ரித சத்ருவான இரணியனுடைய உரத்தினில், Urathinil - மார்விலே கரத்தை வைத்து, Karathai Vaiththu - திருக்கைகளை வைத்து உகிர்த்தலத்தை, Ukirthalathai - நகரங்களை ஊன்றினாய், Oondrinai - அழுத்திக் கொன்றாய்; நீ, Ni - இப்படிப்பட்ட நீ இரத்தி, Irathi - (ஒரு ஸயம் மாவலியிடத்தே சென்று) யாசிக்கிறாய்; இது என்ன பொய், Idhu Enna Poi - இது என்ன இந்திரஜாலம்! இரந்த மண், Iranda Mann - யாசித்துப்பெற்ற உலகத்தை வயிற்றுளே கரத்தி, Vayittrule Karathi - (ஒரு கால்) திருவயிற்றுக்குள்ளே ஒளித்து வைக்கிறாய்; உன் கருத்தை, Un Karuththai - (இப்படியெல்லாம், செய்கிற) உன்னுடைய கருத்தை யாவர் காண வல்லர், Yaavar Kaan Vallar - யார்கண்டறிவல்லார்! (யாருமில்லை.) |
| 777 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 26 | ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப்
பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே | பதவுரை Show / Hideஆணினோடு பெண்ணும் ஆகி, Aaninodu Pennum Aagi - புருஷஜாதி, ஸ்த்ரீஜாதி என்ற இரண்டு சாதிக்கும் ப்ரவர்த்தகனாய் அல்லவோடு நல்ல ஆய், Allavodu Nalla Aay - மேற்சொன்ன இரண்டு ஜாதியிலும் சேராத நபும்ஸக பதார்த்தங்களென்ன இம்மூன்று வகுபபிலும் சிறந்தவையென்ன இவற்றுக்கெல்லாம் நிர்வாஹகனாய் ஊணொடு ஓசை கூறும் ஆகி, Oonodu Osai Koorum Aagi - ரஸம், சப்தம், ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நியாமகனாய் என்று அலாத மாயை ஆய், Endru Aladha Maayai Aay - உலகிலுள்ள எல்லாப் பொருளாகவும் பரிணமிக்கின்ற ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனாய் பூணி பேணும், Pooni Paenum - பசுக்களை மேய்கிக்கிற ஆயன் ஆகி, Aayan Aagi - இடையனாய் பொய்யினோடு மெய்யும் ஆய், Poyyinodu Meyyum Aay - பொய்யரான துர்யோதநரதிகன் பக்கலிலே பொய்யனாய் மெய்யரான பாண்டவர் பக்கலிலே மெய்யனாய் காணிப்பேணும் மாணி ஆய், Kaanippeanum Maani Aay - (மூவடி) நிலத்தை ஆசைப்பட்ட பிரமசாரியாகி கரந்து சென்ற கள்வனே!, Karandhu Senra Kalvane - (மஹாபலியின் யாக பூமியிலே) க்ருத்ரிமமாக எழுந்தருளின் மாயனே! உன்னை யார் மதிக்கவல்லர்!, Unnai Yaar Mathikkavallar - உன்னை அளவிடக்கூடியவர்கள் யார்? |
| 778 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 27 | விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே | பதவுரை Show / Hideவிண் கடந்த சோதியாய், Vin Kadandha Sothiyai - விபுவான மூலப்ரக்ருதி உனக்குள்ளேயாம்படி அதனை அதிக்ரமித்த ஸ்வாம்ப்ரகாசனே! விளங்கு, Vilangu - ஸ்வயம்ப்ரகாசனான ஞானம், Gnanam - ஜீவாத்மாவை மூர்த்தியாய், Moorthiyai - சரீரமாக வுடையவனே! பண்கடந்த தேசம் மேவு, Pankadandha Desam Mevu - வேதங்களாலும் அளவிட முடியாத பரமபதத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய் பாவநாச நாதனே!, Pavanasa Nadane - ஹேயப்ரத்யநீகனான ஸர்வேச்வரனே! எண் கடந்த யோகினோடு, En Kadandha Yoginodu - எண்ணமுடியாத ஆச்சர்ய சக்தியோடு கூடினவனாய்க் கொண்டு மாணி ஆய், Maani Aay - வாமனாய் இரந்து சென்று, Irandhu Sendru - (மூவடிமண் வேணுமென்று) யாசித்துச் சென்று மண் கடந்த வண்ணம், Man Kadandha Vannam - பூமியை யளந்துகொண்ட விதத்தையும் நின்னை, Ninnai - உன்னையும் ஆர் மதிக்க வல்லர், Aar Mathikka Vallar - அளவிடக்கூடியவர்கள் யார்? |
| 779 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 28 | படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே | பதவுரை Show / Hideபௌவம் நீர், Pauvam Neer - (அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை படைத்து, Padaiththu - ஸ்ருஷ்டித்து படைத்த, Padaitha - (பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட பார், Paar - பூமியை இடந்து, Idandhu - (ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து அளந்து, Alandhu - (த்ரிவிக்ரமனாய்) அளந்து உண்டு, Undu - (ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி உமிழ்ந்து, Umizhndhu - (ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும். பௌவம் நீர், Pauvam Neer - (இலங்கைக்கு அழகான) கடலை அடைத்து, Adaiththu - ஸேதுகட்டித் தூர்த்து. முன் அதில் கிடந்து, Mun Athil Kidandhu - முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி கடைந்த, Kadaindha - (ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின பெற்றிபோய்!, Petri Poy - (இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே! மிடைத்த, Midaiththu - செருக்கி வந்த மாலி, Maali - மாலி என்றகிற ராக்ஷஸனென்ன விலங்கு மான் மாலி, Vilangu Maan Maali - அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள் காலன் ஊர் புக, Kaalan Oor Puga - யமலோகம் போய்ச் சேரும்படியாக படைக்கலம் விடுத்த, Padaikalam Vidutha - ஆயுதங்களை ப்ரயோகித்தருளின பல் படை தடகை மாயனே!, Pal Padai Thadakai Maayane - பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது) |
| 780 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 29 | பரத்திலும் பரத்தையாதி பௌவ நீர் அணைக் கிடந்தது
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி யாயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே | பதவுரை Show / Hideநாத, Naadha - ஸ்வாமிந்! ஞானம் மூர்த்தி ஆயினாய், Gyaanam Moorthi Aayinai - ஜ்ஞாநஸ்வருபியானவனே! பரத்திலும் பரத்தை ஆகி, Paraththilum Paraththai Aagi - பராத்பரனாயிராநின்றாய். ஒருத்தி தன்னை, Oruvthi Thannai - ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை உரத்தில், Urathil - திருமார்பிலே வைத்து, Vaiththu - பிரியாமல் அணையவைத்து உகந்து, Uganthu - மகிழ்ந்து பௌவம் நீர் அணை கிடந்து, Pauvam Neer Anai Kidandhu - திருவாற்கடலாகிய சயநத்திலே கண்வளர்ந்தருளி அது அன்றியும், Adhu Anriyum - இப்படிகளாலே ஆச்ரிரக்ஷணம் செய்வது மல்லாமல் நரத்திலும், Naraththilum - ஹேயமான மானிட சாதியிலும் பிறத்தி, Piraththi - வந்து பிறக்கின்றாய்; நினாது தன்மை, Ninaadhu Thanmai - உன்னுடைய அநுக்ரஹ ஸ்வபாவத்தை ஒருத்தரும், Oruvtharum - யாராகிலும் இன்னது என்ன வல்லரே?, Innadhu Enna Vallarai - இப்படிப்பட்டதென்று பரிச்சேததிக்க ஸமர்த்தர்களோ? (யாருமில்லை.) |
| 781 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 30 | வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே | பதவுரை Show / Hideவானகமும், Vaanagaththum - வானுலகத்திலுள்ளளாரயும் மண்ணகமும், Mannagaththum - மண்ணுலகத்திலுள்ளாரையும் ஏழ் வெற்பும், Ezhu Verppum - ஸப்தகுலபர்வதங்களையும் ஏழ் கடல்களும், Ezhu Kadalgalum - ஸப்தஸாகரங்களையும் போனகம் செய்து, Ponagam Seidhu - அமுது செய்து ஆல் இலை துயின்ற, Aal Ilai Thuyinra - ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின் புண்டரீகனே!, Pundareekane - தாமரை போன்ற அவயவங்களையுடைய பெருமானே! தேன் செய் அகம், Then Sei Akam - தேன் நிறைந்த உட்புறத்தை யுடைத்தாய் தண், Than - குளிர்ந்ததாய் நறு, Naru - பரிமளிதமான மலர் துழாய், Malar Thuzhai - திருத்துழாயை கல் மாலையாய்!, Kal Maalaiyaai - நல்லமாலையாக அணிந்தவனே! (நீ) கூன், Koon - (கூனியினுடைய) கூனானது அகம் புக, Aham Puga - உள்ளே யொடுங்கும்படி தெறித்த, Theriththa - விட்டெறிந்த கொற்றம் வில்லி அல்லையே, Kotrham Villi Allaiye - வெற்றி வில்லை யுடையவனான்றோ |
| 782 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 31 | கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே | பதவுரை Show / Hideகாலநேமி காலனே!, Kaalanemi Kaalane - காலநேமியென்னும் அஸுரனதுக்கு யமனானவனே! கணக்கு இலாத கீர்த்தியாய், Kanakku Ilaadha Keerthiyaai - எண்ணிறந்த புகழையுடையவனே! பண்டு, Pandhu - முன்பொருகால் (ப்ரளய காலத்திலே) ஞாலம் எழும் உண்டு, Njaalam Ezhum Undu - ஏழுலகங்களையும் அமுது செய்து பாட்டு, Paatu - மின்னறதெயிற்றரக்கன் வீழ ஓர் பாலன் ஆய, Oru Palaan Aaya - ஒரு சிறுகுழந்தைவடிவமெடுத்த பண்பனே!, Panbanne - ஆச்சர்யபூதனே வேலைவேவ, Velaiveva - கடல்நீர் வெந்து போம்படி வில்வளைத்த, Vilvalaittha - வில்லை வளைத்த. வெல் சினத்த வீர!, Vel Sinaththa Veera - எதிரிகளை வென்றேவிடும்படியான சீற்றத்தையுடைய வீரனே! நின்பாலர் ஆய பக்தர் சித்தம், Ninpaalar Aaya Bhakthar Siththam - உன்பக்கல் அன்பு பூண்டவர்களின் சித்தத்தின்படி முத்தி செய்யும், Muththi Seyyum - (அவர்கட்கு) மோக்ஷம் தந்தருள்கிற மூர்த்தியே!, Moorththiye - ஸ்வாமியே! |
| 783 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 32 | குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே | பதவுரை Show / Hideகுரங்கு இனம் படைகொடு, Kurangu Inam Padaikodu - வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு குரை கடலின் மீது போய், Kurai Kadalin Meedhu Poi - கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி அங்கு, Angu - அவ்விலங்கையிலுள்ள அரக்கர், Arakkar - ராவணாதி ராக்ஷஸர்கள் அரங்க, Aranga - அழியும்படி வெம் சரம், Vem Saram - தீக்ஷ்ணமான அம்புகளை துரந்த, Durandha - அவர்கள் மேல் பிரயோகித்த ஆதி, Ati - வீரர்களில் தலைவன் நீ, Ni - (எம்பெருமானே;) நீயே காண்க; இரக்க, Irakka - நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க மண்கொடுத்தவற்கு, Mankoduththavarku - உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு இருக்க, Irukka - குடியிருப்பதற்கு ஒன்றும் இன்றியே, Ondrum Indriye - ஒருசாண்நிலமும் மிகாதபடி பரக்க வைத்து, Parakka Vaiththu - (திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து அளந்து கொண்ட, Alandhu Konda - (மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட பற்பபரதன் அல்லையே, Parappabharathan Allaiye - தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண். |
| 784 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 33 | மின் நிறத்து எயிறு அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே | பதவுரை Show / Hideமின் நிறத்து எயிறு அரக்கன், Min Niraththu Eyyiru Arakkan - மின்னல் நிறத்தையொத்த பற்களையுடையனான இராவணன் வீழ, Veela - மாளும்படி வெம் சரம், Vem Saram - கொடிய அம்புகளை துரந்து, Durandhu - அவன் மேல் பிரயோகித்து (அவனை முடித்தருளி) பின்னவற்கு, Pinnavarku - அவனது தம்பியான விபீடணனுக்கு அருள் புரிந்து, Arul Purinthu - க்ருபை செய்தருளி அரசு அளித்த, Arasu Aliththa - பட்டாபிஷேகம் செய்து வைத்த பெற்றியோய்!, Pettriyoyi - பெருமானே! நல் சிறத்து, Nal Sirathu - நல்ல நிறத்தையுடையவளாய் ஓர் இன் சொல், Oru In Sol - ஒப்பற்ற மதுரமான வாக்கையுடையவளாய் ஏழை, Ezhaik - உன்பக்கல் சாபல்யமுடையவளான பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு கேள்வி, Kelvi - நாயகனானவனே! மன்னு சீர், Mannu Seer - நித்யளித்த கல்யாண குணங்களையுடையனாய் பொன் நிறந்த வண்ணன் ஆய, Pon Nirandha Vannan Aaya - பொன்போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனான புண்டரீகன் அல்லையே, Pundareekan Allaiye - புண்டரீகாக்ஷனென்பவன் நீயே காண் |
| 785 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 34 | ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே | பதவுரை Show / Hideஆதி ஆதி ஆதி நீ, Aadhi Aadhi Aadhi Nee - மூன்று விதமான காரணமும் நீயே யாகிறாய்: ஒரு அண்டம் ஆதி, Oru Andam Aadhi - அண்டத்துக்குட்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமாகிறாய்; ஆதலால், Aadhalal - இப்படியிருக்கையாலே சோதியாத சோதி நீ, Sodhiyadha Sothi Nee - பரீக்ஷிக்கவேண்டாத பரம்பொருள் நீ நீயேயாகிறாய்; அது உண்மையில், Adhu Unmaiyil - அந்த சோதியானது ப்ரமாணஸித்தாமகையாலே விளங்கினாய், Vilanginai - (வேறொன்றாலன்றிக்கே) தானாகவே நீ விளங்குகின்றாய்; வேதம் ஆகி, Vedham Aagi - வேதங்கட்கு நிர்வாஹகனாய் வேள்வி ஆகி, Velvi Aagi - யஜ்ஞ்களாலே ஆராத்யனாய் விண்ணினோடு மண்ணும் ஆய், Vinninodu Mannum Aay - உபய விபூதிக்கும் நியாமகனாய் ஆதி ஆகி, Aadhi Aagi - இப்படி ஸர்வகாரண பூதனாயிருந்து வைத்த ஆயன் ஆய மாயம், Aayan Aaya Maayam - இடையனாய்ப் பிறந்தாமயம் என்ன மாயம், Enna Maayam - என்ன ஆச்சரியமோதான். |
| 786 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 35 | அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே | பதவுரை Show / Hideஎன் இசனே, En Isane - எம்பெருமானே! (தேவரீர்) ஆழியார் தம் பிரானும் ஆகி, Aazhiyaar Tham Piraanum Aagi - திருவாழியாழ்வானையுடைய பரமபுருஷனாயிருந்து வைத்து அம்பு உலாவும் மீனும் ஆகி, Ambu Ulaavum Meenum Aagi - ஜலத்தில் உலாவுகின்ற மீனாகியும் ஆமை ஆகி, Aamai Aagi - ஆமையாகியும் (அவதரித்து) மிக்கது, Mikkathu - அதிசயத்தை அடைந்தருளிற்று அன்பு மிக்கது, Anbu Mikkathu - மிகுந்த அன்பையும் காட்டியருளிற்று; அன்றியும், Anriyum - இதற்கு மேலும் கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை ஆய், Kombu Araavu Nunmarungul Aayar Maathar Pillai Aayi - வஞ்சிக்கொம்பு போலும் அரவு போலும் நுட்பமான இடையையுடைய இடைப் பெண்ணுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து எம்பிரானும் ஆய வண்ணம் என் கொல், Embiraanum Aaya Vannam En Kol - எம்பிரானுமாக நின்ற நிலையும் என்ன அற்புதம்!. |
| 787 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 36 | ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்
சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்
தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ | பதவுரை Show / Hideஆடகந்தபூண் முலை, Aadakandhapoon Mulai - ஸ்வர்ணமயமான ஆபரணங்களையணிந்த ஸ்தமங்களையுடையளான அசோதை ஆய்ச்சி பிள்ளை ஆய், Asothai Aaychi Pillai Aayi - யசோதையென்னும் கோபிகைக்கு புத்திரனாய்ப் பிறந்தருளி சாடு உதைத்து, Saadu Uthaithu - சகடாசுரனைத் திருவடிகளால் உதைத் தொழித்து ஓர் புள்ளது அவி கள்ள தாயபேய் மகள், Oru Pulludhu Avi Kalla Thaayapey Maigal - சிறு குழந்தைகளை அனுங்கப் பண்ணுவதொரு பறவையின் வடிவுகொண்டு வந்தருத்ரிம மாதாவாகிய பூதனையானவள் வீட, Veeda - நீ உயிர்விட்டு மாளும்படி வைத்த, Vaitha - உன் திருப்வளத்திலே வைத்த வெய்ய கொங்கை, Veyya Kongai - (விஷம் தீற்றின) கொடிய முலையிலுள்ள ஐய பால், Aiyya Paal - ஸூக்ஷ்மமான பாலை அமுதுசெய்து, Amudhu Seithu - உறிஞ்சியுண்டு ஆடகம் கை மாதர், Aadagam Kai Maathar - பொன்வளைகள் அணிந்த கைகளையுடைய ஸ்த்ரீகளினுடைய வாய் அமுதம் உண்டது, Vaai Amudham Undadhu - அதரத்திலுள் அமுதத்தைப் பருகினது என்கொல், Enkol - என்ன வித்தகம்! |
| 788 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 37 | காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா | பதவுரை Show / Hideகாய்ந்த, Kaayndha - காய்கள் நிறைந்ததும் நீள், Neel - உயர்த்தியையுடையதுமான விளங்கனி, Vilangani - (அஸுராவிஷ்டமான) விளாமரத்தின் கனிகளை உதிர்த்து, Uthirthu - உதிரச்செய்து (அவ்வசுரனைக் கொன்று) எதிர்த்த பூ குருந்தம், Edhirtha Poo Kuruntham - எதிரிட்ட வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்து சாய்த்து, Saaythu - முடித்து மா பிளந்த, Maa Pilantha - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்த கைத் தலத்த, Kaid Thalaththa - திருக்கைகளையுடைய கண்ணன் என்பர், Kannan Enbar - கண்ணன் என்று (உன்னை அறிவுடையார்) சொல்லுவார்கள். ஆய்ச்சி பாலை, Aaychchi Paalai - யசோதைப் பிராட்டியினுடைய முலைப்பாலை உண்டு, Undu - அமுது செய்து வெண்ணெய் உண்டு, Vennaiy Undu - நவநீதத்தை அமுத செய்து பேய்ச்சிபாலை உண்டு, Peychchipaalai Undu - பூசதனையினுடைய முலைப்பாலை உண்டு பின், Pin - கல்ப்பத்தின் முடிவில் மண்ணை, Mannai - பூமியை உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்து பண்டு, Pandhu - கல்பத்தின் ஆதியிலே ஓர் ஏனம் ஆய, Oor Aenam Aaya - ஒப்பற்ற வராஹருபியாய் அவதரித்த வாமனா, Vaamana - வாமந மூர்த்தியே! |
| 789 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 38 | கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே | பதவுரை Show / Hideகடம் கலந்த, Kadham Kalantha - மதஜலத்தால் வ்யாப்தமான வன் கரி, Van Kari - வலிய (குவலயாபீடமென்ற) யானையினுடைய மருப்பு, Maruppu - கொம்பை ஒசித்து, Osiththu - முறித்தெறிந்து ஓர் பொய்கை வாய், Oor Poykai Vaai - ஓர் மடுவின் துறையிலே விடம் கலந்த பாம்பின் மேல், Vidam Kalantha Paambin Mel - விஷமனான காளியநாகத்தின் மேல் நடம் பயின்ற, Nadam Payindra - நர்ததனம் செய்தருளின குடம் கலந்த கூத்தன் ஆய, Kudam Kalanda Koothan Aaya - குடக்கூத்தாடின கொண்டல் வண்ண!, Kondal Vanna - காளமேகம் போன்ற கண்ணபிரானே! தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப, Than Thuzhai Vadham Kalanda Maalai Maarba - குளிர்ந்த திருத்துழாய் வடத்தோடு கூடன மாலையை அணிந்த திருமார்பையுடையவனே! காலநேமி காலனே!, Kaalanemi Kaalane - காலநேமியென்னும் அசுரனுக்கு ம்ருத்யுவானவனே! (என்று ஈடுபடுகிறார்.) |
| 790 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 39 | வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே | பதவுரை Show / Hideவெற்பு எடுத்து, Verpu Eduthu - மந்தர பர்வதத்தைக்கொண்டு வேலை நீர், Velai Neer - கடல் நீரை கலக்கினாய், Kalakkinaai - கலங்கச் செய்தாய் அது அன்றியும், Adhu Anriyum - அதுவு மல்லாமல் வெற்பு எடுத்து, Verpu Eduthu - மலைகளைக்கொண்டு வேலை நீர், Velai Neer - (தெற்குக்) கடலிலே வரம்பு கட்டி, Varambu Katti - திருவணையைக்கட்டி வேலைசூழ், Velaisool - கடலாலே (அகழாகச்) சூழப்பட்டதாயும் வெற்பு எடுத்த இஞ்சி சூழ், Verpu Edutha Inji Soozh - மலையான மதினாலே சூழப்பட்டதாயுமுள்ள இலங்கை, Ilankai - லங்கையினுடைய கட்டு, Kattu - அரணை அழித்த, Azitha - அழியச் செய்த நீ, Ni - தேவரீர் வெற்பு எடுத்து, Verpu Eduthu - கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்து மாரி காத்த, Maari Kaatha - மழையைத் தடுத்த மேகம் வண்ணன் அல்லையே, Megam Vannan Allaiye - காளமேக நிபச்யாமரன்றோ! |
| 791 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 40 | ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே | பதவுரை Show / Hideஆனை காத்து, Aanaik Kaathu - கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி அது அன்றி, Adhu Andri - அவ்வளவேயல்லாமல் ஆயர்பிள்ளை ஆய், Aayirpillai Aay - கோபாலகுமாரனாகி ஓர் ஆனை கொன்று, Oru Aanaik Konru - குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று ஆனை, Aanaik - பசுக்களை மேய்த்தி, Meiythi - மேய்த்தருளா நின்றாய்; ஆ நெய், A Ney - பசுக்களின் நெய்யை. உண்டி, Undi - அமுது செய்யா நின்றாய்; அன்று, Andru - இந்திரன் விடாமழை பெய்வித்தகாலத்தில் குன்றம் ஒன்றினால், Kunram Ondrinaal - கோவர்த்தநமென்ற ஒரு மலையைக் கொண்டு ஆனைக் காட்டு, Aanaik Kaatu - பசுக்களை ரக்ஷித்து மை அரி கண் மாதரார் திறந்து, Mai Ari Kan Matharaar Thirandhu - மையணிந்து செவ்வரி படர்ந்த கண்ணையுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக அன்று, Andru - அக்காலத்திலே முன்சென்று, Munsendru - அவளெதிரே நின்று என்ன மரயம், Enna Marayam - என்ன ஆச்சரியம்! |
| 792 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 41 | ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே | பதவுரை Show / Hideமாய !, Maaya - ஆச்சரியபூதனே. (நீ) அயன் ஆகி, Ayan Aagi - இடப்பிள்ளையாய்ப் பிறந்து ஆயர் மங்கை, Aayar Mangai - இடைப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினுடைய வேய தோள், Veya Thol - வேய்போன்ற தோள்களை அம்பரத்தோடு இம்பராய், Ambaraththodu Imbarai - மேலுலகத்தவர்களும் இவ்வுலகத்தவர்களுமா யுள்ளவர்களில் யாவர், Yaavar - யார்தான் நின்னை ஆயவல்லர், Ninnai Aayavallar - உன் ஸ்வரூபத்தை ஆராய்ந்து அறியவல்லர்? (யாரும் அறிய கில்லார்.) மாயம் மாயை கொல்!, Maayam Maayai Kol - (இப்படி அறியமாட்டாதது) பிரகிருதியைப் பற்றின அஜ்ஞாகத்தலல்ல. (ஸர்வஜ்ஞராயிருந்தாலும் உன் ஸ்வரூபம் அறியமுடியாததே.) அது அன்றி, Adhu Andri - அது அப்படியிருக்கட்டும்; நீ, Ni - ஸர்வசக்தனான நீ வகுத்தலும், Vaguththalum - (உன்னை வணங்கி வழிபடுவதற்கு உறுப்பாகக் கரணகளே பராதிகளை) உபகரித்திருக்கச் செய்தேயும். மாய, Maaya - (சேதகர்கள் அவற்றைக்கொண்டு நல்வழியில் புகாமல்) மாய்ந்துபோக மாயம் ஆக்கினாய், Maayam Aakkinai - (இவரக்ளை ஸம்ஹரிப்பதே க்ஷேமமென்று) ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்; உன் மாயம் முற்றும், Un Maayam Muttrum - உன்னுடைய ஸங்கல்பமெல்லாம் மாயமே, Maayame - ஆச்சரியமாயிருக்கின்றன. |
| 793 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 42 | வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே | பதவுரை Show / Hideகூசம் இன்றியே சென்று ஏறு அடர்ந்த ஈச, Koosam Indriye Sendru Eru Adarntha Eesa - கூசாமல் சென்று (நப்பின்னைப் பிராட்டிக்காக) எருதுகளை வலியடக்கின பெருமானை! வேறு, Veru - வேறாக இசைக்க, Isaiyakka - ஸம்ஹாரத்தொழிலுக்குத் தகுதியான செக்கர் மேனி, Chekkar Meeni - சிவந்த உடலையுடையனாய் நீறு அணிந்த, Neeru Anindha - பஸ்தாரியாய் புண் சடை கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த, Poon Sadai Keeru Thingal Vaiththavan Kai Vaithth - ஹேயாமன ஜடையிலே சந்திரகலையை வைத்துக் கொண்டிருப்பவனான ருத்திரன் கை வைத்த, Kai Vaithth - தன்கையில் வைத்துக் கொண்டிருந்த வல் கபால் மிசை, Val Kapal Misai - வலிதான கபாலத்தை ஊறுசெம் குருதியால், Ooruchem Kuruthiyal - உள் திருமேனியிலே ஊறா நின்றுள்ள சிவந்த ரத்தத்தாலே நிறைந்த காரணம்தனை, Niraindha Kaaranamthaanai - நிறைந்த காரணத்தை பேசு, Pesu - அருளிச் செய்யவேணும். பாட்டு, Paatu - பாலினீர்மை |
| 794 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 43 | வெஞ்சினத்த வேழ வெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே | பதவுரை Show / Hideவெம்சினந்த, Vemsinanth - உக்ரமான கோபத்தையுடைய வேழம், Vezham - குவலயாபீட மென்னும் யானை யினுடைய வெண் மருப்பு, Ven Maruppu - வெண்ணிறமான தந்தத்தை ஒசித்து, Osiththu - ஒடித்து (அந்த யானையை முடித்து) உருத்த, Uruththa - கோபிஷ்டனாயும் மா, Maa - பல்ஷ்டனாயுமிருந்த கஞ்சனை, Kanjanai - கம்ஸனை கடிந்து, Kadinthu - வதைசெய்து வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி, Vanjanaththu Vanda Paeychchi Aavi - வஞ்சனையால் வந்த பூதனையின் உயிரை பாலுன் வாங்கினாய், Paalun Vaanginai - முலைப்பாலுண்கிற பாவனையினால் ஆகர்ஜித்தவனே! மண் அளந்து கொண்ட காலனே!, Man Alandhu Konda Kaalane - (த்ரிவிக்ரமனாய்) பூமியெல்லாமளந்துகொண்ட திருவடியையுடையவனே! நீ. அஞ்சனந்த வண்ணன் ஆய, Anjanandha Vannaan Aaya - மைபோன்ற காந்தியையுடையனான ஆதிதேவன் அல்லையே, Aadhithevan Allaiye - ஆதிபுருஷனன்றோ? |
| 795 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 44 | பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாம்
மாலின் நீர்மை வையகம் மறைத்ததென்ன நீர்மையே | பதவுரை Show / Hideபாலின் நீர்மை, Paalin Neermai - பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன செம்பொன் நீர்மை, Sembon Neermai - சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன பாசியின் பசும்புறம் போலும் நீர்மை, Paasiyin Pasumpuram Polum Neermai - பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் நீலம் நீர்மை, Porpu Uday Thadathu Vandu Vindu Ulaam Neelam Neermai - அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன. என்று இவை நிறைந்த, Endru Ivai Niraintha - என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற காலம் நான்கும் ஆம் மாவின் நீர்மை, Kaalam Naankum Aam Maavin Neermai - நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை வையகம், Vaiyagam - இவ்வுலகத்திலுள்ளவர்கள் மறைத்தது, Maraiththathu - திரஸ்கரித்தது என்ன நீர்மை, Enna Neermai - என்ன ஸ்வபாவம்! |
| 796 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 45 | மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே | பதவுரை Show / Hideஅனந்தன் மேல் கிடந்த, Ananthan Mel Kidandha - திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருள்கின்ற எம் புண்ணியா, Em Punniya - எங்களுடைய ஸுக்ருத ஸ்வரூபியான எம்பெருமானே! புனம் துழாய் அலங்கல், Punam Thuzhai Alankal - தன்னிலத்திலே வளர்ந்த திருத்துழாயாலே செய்யப்பட்ட மாலையையுடைய அம் புனிதனே, Am Punitane - பரமபாவகனே! மண் உளாய், Man Ulaai - லீலாவிபூதியில் அவதரித்திரா நின்றாய்; விண் உளாய், Vin Ulaai - பரமபதத்தில் எழுந்தருளியிரா நின்றாய்; மண்ணுள் மயஙகி நின்று எண்ணும் எண் அகப்படாய், Mannul Mayangki Nindru Ennum En Akappadaai - இந்நிலத்திலே விபரீதஜ்ஞாநிகளாயிருக்கிற ஸம்ஸாரிகளுடைய எண்ணங்களுக்கு விஷயமாகாதிருக்கிறாய்; நின் தமர், Nin Thamar - உன்னுடையவர்களான அநந்ய ப்ரயோஜநர்களுக்கு கண்ணுளாய், Kannulai - சக்ஷுர்விஷயமாகாநின்றாய்; சேயை, Seyai - (மற்றையோர்க்கு) தூரஸ்தனாயிரா நின்றாய்; என்ன மாயை, Enna Maayai - இது என்ன ஆச்சரியம்! |
| 797 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 46 | தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே | பதவுரை Show / Hideதோடு பெற்ற, Thodu Petra - இதழ்களையுடைய தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாயினாலாகிய அலங்கல், Alangal - மாலையானது ஆடு, Aadu - விளங்கப்பெற்ற சென்னியாய், Sennyai - திருமுடியையுடைவனே! கோடு, Kodu - ஸ்ரீபாஞ்சஜக்யாழ்வானை பற்றி, Patri - தரித்து ஆழி, Aazhi - திருவாழியாழ்வானை ஏந்தி, Aendhi - ஏந்திக்கொண்டு அம் சிறைபுள், Am Siraipul - அழகிய சிறகையுடைய பெரிய திருவடியை ஊர்தி, Oorthi - வாஹகமாக நடந்தாநின்றார்; நாடு பெற்ற நன்மை, Naadu Petra Nanmai - மற்ற பேர்கள் பெற்ற நன்மையை கண்ணம் இல்லையேனும், Kannam Illaiyenum - நான் பெற்றிலேனாகிலும் காயினேன், Kaayinen - நீசனான அடியேன் வீடுபெற்று, Veedupetru - மோக்ஷத்தைப் பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்கும் ஆ, Irappodum Pirappu Arukkum Aa - இறப்பதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தைத் தொலைக்கும் வகையை சொல், Sol - அருளிச் செய்யவேணும். |
| 798 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 47 | காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே | பதவுரை Show / Hideகாரொடு ஒத்த மேனி, Kaarodu Oththa Meni - காளமேகத்தோடு ஒத்த திருமேனியையுடையனாய் நங்கள் கண்ண, Nangal Kanna - எங்களுக்கு அநுபால்யனான கண்ணனே! விண்ணின் நாதனே, Vinnin Nadane - நித்யஸூரிகட்குத் தலைவனே! நீர் இடத்து, Neer Idathu - (நீதி) திருப்பாற்கடலிலே அரா அணை, Ara Anai - திருவனந்தாழ்வான் ஆகிறபடுக்கையிலே கிடத்தி, Kidathi - பள்ளிகொண்டருளா நின்றாய் என்பர், Enbar - என்று (ஞானிகள்) சொல்லுவார்கள் அன்றியும், Anriyum - அது தவிரவும் (நீ) ஓர் இடத்தை அல்லை, Oru Idaththai Allai - ஓரிடத்தை இருப்பிடமாகவுடையையல்லை. எல்லை இல்லை, Ellai Illai - (நீ உறையுமிடங்கட்கு) எல்லை இல்லை. என்பர், Enbar - என்றும் சொல்லுவார்கள் ஆதலால், Aadhalal - இப்படி உன் இருப்பிடம் ஸுல பமல்லாமையாலே காயினேன், Kaayinen - மிகவும் நீசனாகிய அடியேன். சேர்வு இடத்தை தெரிந்து, Servu Idathai Therinthu - ஆச்ரயிப்பதற்கு உரியஸ்தலத்தை (இன்னதென்று) தெரிந்துகொண்டு இறைஞ்சும் ஆ, Iraichum Aa - ஆச்ரயிக்கலாம்படியை சொல், Sol - அருளிச் செய்யவேணும். |
| 799 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 48 | குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே | பதவுரை Show / Hideகுன்றில் நின்று, Kunril Nindru - திருவேங்கடமலையில் நின்றும் வான் இருந்து, Vaan Irundhu - பரமபதத்தில் வீற்றிருந்தும் நீள் கடல் கிடந்து, Neel Kadal Kidandhu - பெரிதான திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளியும் மண் ஒன்று சென்று, Man Onru Sendru - இப்பூமண்டலத்தை ஒருகால் (த்ரிவிக்ரமனாய்) வியாபித்தும் ஒன்று அதை உண்டு, Onru Athai Undu - மற்றொருகால் அப்பூமியை விழுங்கியும் ஒன்று அது பன்றி ஆய் இடந்து, Onru Athu Panri Aay Idandhu - மற்றொருகால் அப்பூமியை வராஹருபியாய் இடந்தும் கன்று சென்ற நாள் அவற்றுள், Kandru Senra Naal Avattrul - கன்றாய் சென்ற நாட்களிலே நல் உயிர் படைத்து, Nal Uyir Padaithu - நல்ல உயிரான மனிதர்களை ஸ்ருஷ்டித்தும் அன்று, Andru - அப்போது அவர்க்கு, Avarkku - அந்த மனிதர்கட்கு தேவு, Devu - (தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி ஆச்ரயிக்கத்தக்க) தேவதைகளை அமைத்து, Amaiththu - ஏற்படுத்தியும் (இப்படிகளாலே) அளித்த, Alitha - நன்மை செய்தருளின ஆதிதேவன் இல்லையே, Aadithevan Illaiye - பரமபுருஷன் நீயேகாண். பாட்டு, Paatu - மன்னுமாமலர் |
| 800 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 49 | கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே | பதவுரை Show / Hideகொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன், Kondai Konda Kothai Meedhu Thenulaavu Kooni Koon - உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர், Undai Konda Arangavotti Yun Magizhndha Naadhanur - நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே, Nandai Undu Naaraiper Vaalaip Paaya Neelame - அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே, Andai Konda Kendaimeyum Am Than Neer Arangame - |
| 801 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 50 | வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே | பதவுரை Show / Hideவெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள், Ven Thiraik Karum Kadal Sivandhu Veva Munnooru Naal - திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர், Thin Thiral Silaiykkai Vaali Vitta Veerar Cherumoore - எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர், En Thisaik Kanangalum Irainji Yaadum Theertha Neer - வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே, Vandu Iraitha Solai Veli Mannu Seer Arangame - |
| 802 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 51 | சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே | பதவுரை Show / Hideசரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன், Sarangalai Thurandhu Vil Valaiththu Ilangai Mannavan - சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம், Siralgal Paththaruththu Uthirththu Selvar Mannu Ponnidam - பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல், Parandhu Ponnirandhu Nundhi Vandhalaikkum Vaar Punal - அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே, Arangam Enbar Naanmugath Thayan Panindha Koyilile - |
| 803 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 52 | பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே | பதவுரை Show / Hideபொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப், Pothrai Yuttra Muttal Yaanai Poar Edhirndhu Vandhadhaip - பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர், Patri Utrra Mattradhan Maruppu Osiththa Paakanur - சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார், Sitreiyitru Muttal Moongil Moondru Thandar Ondrinaar - அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே, Atra Paththar Sutrri Vazhume Am Than Neer Arangame - |
| 804 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 53 | மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே | பதவுரை Show / Hideமோடியோடு, Modiyodu - காளியும் இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான், Ilachchai Aaya Saapam Eydhi Mukkanan - வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் மக்களோடு, Makkalodu - ஸ்வஜனங்களோடு கூடு, Koodu - திரண்ட சேனை, Senai - ஸேனையை கொண்டு, Kondhu - அழைத்துக்கொண்டு வெம் சமத்து, Vem Samathu - பயங்கரமான போர்க்களத்திலிருந்து மண்டி ஓட, Mandi Oda - வேகமாக ஓடிப்போன வளவிலே வாணன், Vaanan - பாணாஸுரனது ஆயிரம் கரம், Aayiram Karam - ஆயிரம் கைகளை கழித்த, Kazhitha - அறித்தொழித்த ஆதி மால், Aadhi Maal - பரமபுருஷனுடைய பீடுகோயில், Peedukoyil - பெருமைதங்கிய கோயில் நீர் கூடு, Neer Koodu - காவேரியோடு கூடின அரங்கம் என்றபோது, Arangam Endra Podhu - திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம் |
| 805 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 54 | இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே | பதவுரை Show / Hideஇலை தலை, Ilai Thalai - இலைபோன்ற நுனியையுடைய சரம், Saram - அம்புகளை துரந்து, Durandhu - பிரயோகித்து இலங்கை, Ilankai - எல்லையினுடைய கட்டு, Kattu - அரண்களை அழித்தவன், Azhiththavan - அழியச்செய்த இராமபிரான்; மலைத்தலை, Malai Thalai - (ஸஹ்யமென்னும்) மலையிலே பிறந்து, Pirandhu - பிறந்து இழிந்து, Izhindhu - அங்கு நின்றும் ப்ரவஹித்து வந்து, Vandhu - நெடுக ஓடிவந்து சந்தனம், Sandhanam - சந்தன மரங்களை நுந்து, Nundhu - (போர்த்துத்) தள்ளாநின்றதாயும், குலைத்து, Kulaittu - (குங்குமப்படர்கொடியை சிதிலப்படுத்தி அலைத்து, Alaiththu - அலசி இறுத்து, Iruththu - முறிக்க எறிந்த, Erindha - (அக்கொடிகள் தம்மிலிருந்து) வெளிப்படுத்தின குங்குமம் குழம்பினோடு, Kungumam Kuzhambinodu - குங்குமத் துகள்களினாலாய குழம்புடனேகூட அலைத்து ஒழுகு காவிரி, Alaiththu Ozhugu Kaaviri - அலைமோதிக்கொண்டு பெருகா நின்றதாயுமுள்ள திருக்காவேரியுடைய அரங்கம், Arangam - கோயிலிலே மேய, Meya - எழுந்தருளியிருக்கிற அண்ணன், Annan - ஸ்வாமியாவர். |
| 806 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 55 | மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே | பதவுரை Show / Hideமா மலர் மன்னு கிழத்தி, Maa Malar Mannu Kizhaththi - சிறந்த தாமரைப்பூவில் பொருந்திய பிராட்டுக்கும் வையம் மங்கை, Vaiyam Mangai - ஸ்ரீபூமிப்பிராட்டிக்கும் மைந்தன் ஆய், Maindhan Aayi - (விரும்பத்தக்க) யுவாவாய், பின்னும், Pinnum - மேலும் ஆயர் பின்னை, Aayar Pinnai - (கோபாலரான ஸ்ரீகும்பருடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய தோள், Thol - தோளோடே மணம் புணர்ந்து, Manam Punarndhu - ஸம்ச்லேஷித்து (விளங்குமவனாய்) அது அன்றியும், Adhu Anriyum - அதுக்கு மேலும் உன்ன பாதம், Unna Paatham - உன்னுடைய திருவடிகளை என்ன சிந்தை, Enna Sindhai - என்னுடைய நெஞ்சினுள்ளே மன்னை வைத்து, Mannai Vaiththu - பொருந்தவைத்து கல்கினாய், Kalginai - அருள்செய்த பெருமானே! பொன்னி சூழ் அரங்கம் மேய, Ponni Soozh Arangam Meya - (நீ) காவிரி சூழ்ந்த கோயிலிலே எழுந்திருளியிருக்கிற புண்டரீகன் அல்லையே, Pundareekan Allaiye - தாமரைபோன்ற அவயங்களையுடைய தேவனன்றோ. |
| 807 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 56 | இலங்கை மன்னன் ஐந் தொடு ஐந்து பைந்தலை நிலத் துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே | பதவுரை Show / Hideஅன்று, Andru - முற்காலத்தில் இலங்கை மன்னன், Ilankai Mannan - இராவணனுடைய ஐந்தொடு ஐந்து, Aindodu Aindhu - பத்தாகிய பை தலை, Pai Thalai - வலிய தலைகள் நீலத்து உலக, Neelathu Ulaga - பூமியிலே விழுந்தொழியவும் கலங்க, Kalanga - (அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும் சென்று, Sendru - இலங்கையிற் புகுந்து கொன்று, Konru - (அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து வென்றி கொண்ட, Vendri Konda - விஜயம் பெற்ற வீரனே, Veerane - மஹாவீரனே! விலக்கு நூலர், Vilakku Noolar - உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும் வேதம் நாவர், Vedham Navar - வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும் நீதி ஆன கேள்வி யார், Neethi Aana Kelpvi Yaar - (நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள். வலம் கொள, Valam Kola - வழிபாடுகள் செய்யும்படியாக குடந்தையுள், Kudandhaiyul - திருக்குடந்தையிலே கிடந்த, Kidandha - திருக்கண் வளர்ந்தருளா நின்ற மாலும் அல்லையே, Maalum Allaiye - ஸர்வேச்வரனும் நீயன்றோ |
| 808 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 57 | சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே | பதவுரை Show / Hideசங்கு தங்கு முன் கை நங்கை, Sangu Thangu Mun Kai Nangai - (நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய கொங்கை, Kongai - திருமுலைத்தடத்திலே தங்கல் உற்றவன், Thangal Utravan - விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய) அங்கம், Angam - சரீரமானது மங்க, Manga - மாளவேணுமென்று அன்று சென்று, Andru Senru - முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி அடர்ந்து, Adarnthu - அவ்வூரை ஆக்ரமித்து எறிந்த, Erindha - (அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய். ஆழியான், Azhiyan - கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான் கொஞ்கு தங்குவார் குழல், Konju Thanguvar Kuzhal - நீண்ட கூந்தலையுடையவர்களான மடந்தையார், Madandaiyar - திவ்யஸுந்தரிகள் குடந்தை, Kudanthai - அவகாஹிக்கப்பெற்ற நீர், Neer - தீர்த்தமானது பொங்கு, Pongu - வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற தண் குடந்தையுள், Than Kudanthaiyul - குளிர்ந்த திருக்குடந்தையிலே கிடந்த, Kidandha - பள்ளிகொண்டிராநின்ற புண்டரீகன், Pundareekan - ஸுந்தராங்கன். |
| 809 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 58 | மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே | பதவுரை Show / Hideமரம் கெட கடந்து, Maram Keda Kadandhu - யமனார்ஜுந ஸ்ருக்ஷங்கள் முடியும்படி கடைகற்று. மத்த யானை அடர்ந்து, Matha Yaanai Adarnthu - (குவலயாபீடமென்னும்) கொழுத்த யானையை மத மொழித்து மத்தகத்து, Mathagathu - (அவ்வானையின்) தலைமேல் உரம்கெட புடைத்து, Uramkeda Pudaitthu - (அதன்) வலிமான ப்ரஹாரங்கள் கொடுத்து ஓர்கொம்பு ஒசித்த உத்தமர், Oorkombu Osiththa Uththamar - (அதன்) தந்தத்தை முறித்தெறிந்த பரமபுருஷனே! துரங்கம், Thurangam - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனுடைய வாய்பிளந்து, Vaipilandu - வாயைப்பிளந்து (அவனையொழித்த பெருமானே) மண் அளந்த பாத!, Man Alandha Paath - உலகங்களை யளந்து கொண்ட திருவடிகளையுடையோனே! (நீ.) வேதியர் வசம் கொள, Vediyar Vasam Kol - வைதியர்கள் தங்கள் தங்களுடைய விருப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு |
| 810 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 59 | சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே | பதவுரை Show / Hideசாலிவேலி, Saliveli - செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய தண் வயல் தடம் கிடங்கு, Than Vayal Thadam Kidangu - குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன தண், Than - குளிர்ந்ததான குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே கோவலா, Kovalai - க்ருஷ்ணனே! காலநேமி, Kalanemi - காலநேமியென்ன வக்கரன், Vakkaran - தந்தவக்ரனென்ன பூபொழில் கோலம் நீடு மாடம், Poopozhil Kolam Needu Maadam - புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய் கரன் முரன், Karan Muran - கொடியவனான முரனென்ன இவர்களுடைய சிரம் அவை, Siram Avai - தலைகளானவை காலனோடு கூட, Kalanodu Kooda - யமலோகம் போய்ச் சேரும்படியாக வில்குனித்த, Vilkuniththa - வில்லை வளைத்த வில் கை, Vil Kai - அழகிய திருக்கையையுடைய வீரனே, Veerane - தனி வீரனே! (என்று ஏத்துகிறார்) |
| 811 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 60 | செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே | பதவுரை Show / Hideசெழும் கொழும் பெரும்பணி, Sezhum Kozhum Perumpani - இடைவிடாதே தாரைகளாய் விழுகிற கனத்த மூடுபனியானது. பொழிந்திட, Pozhindida - பொழிந்தவளவிலே உயர்ந்த வேய் விழுந்து, Uyarntha Vei Vizhunthu - முன்பு ஓங்கியிருந்த மூங்கிற்பணைகள் (அப்பணியின் கனத்தாலே) தரையிலே சாய்ந்து உலர்ந்து எழுந்து, Ularndhu Ezhunthu - (பிறகு ஸூர்யகிரணங்களாலே அப்பனி) உலர்ந்த பின்பு எழுந்து, Ezhunthu - (அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி விண் புடைக்கும், Vin Pudaiyum - விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய வேங்கடத்துள், Vengadaththul - திருவேங்கடமலையிலே நின்று, Ninru - நின்றருளி தேன், Then - வண்டுகளானவை எழுந்து இருந்து பொருந்து, Ezhunthu Irundhu Porundhu - மேலே கிளம்புவதும் கீழே படிந்திருப்பதுமான நிலைமைகளோ பொருந்தியிருக்கப் பெற்ற பூ பொழில், Poo Pozhil - புஷ்பங்கள் நிறைந்த சோலைகள் தழை கொழும், Thazhai Kozhum - தழைத்தோங்கா நிற்கப்பெற்றதாய் செழும்கடல், Sezhumkadal - செழுமை தங்கிய தடாகங்களையுடைத்தான் குடந்தையுள், Kudandhaiyul - திருக்குடந்தையிலே கிடந்த, Kidandha - திருக்கண்வளர்ந்தருளா நின்ற மால் அல்லையே, Maal Allaiye - பெருமாள் நீயிறே. |
| 812 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 61 | நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே | பதவுரை Show / Hideவிலங்கு, Vilangu - நீர் பெருகவொண்ணாதபடி தடையாயிருக்கிற மால் வரை, Maal Varai - பெருப்பெருத்த மலைகளையும் கரம், Karam - பாலைநிலம் முதலிய அருவழிகளையும் கடந்த, Kadandha - (வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற கால் பரந்த, Kaal Parandha - விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய காவிரி, Kaaviri - திருக்காவேரி நதியினுடைய கூரை, Kooraik - கூரைமீது குடந்தையும், Kudandhaiyum - திருக்குடந்தையிலே கிடந்த ஆறு, Kidandha Aaru - திருக்கண் வளர்ந்தருளுகிறபடியானது நடந்த கால்கள் நொந்தவோ, Nadandha Kaalgal Nondhavo - உலகளந்த திருவடிகள் நொந்ததனாலோ? (உலகளந்த வீடாய் தீரவோ?) ஞாலம், Njaalam - பூமிப்பிராட்டியானவள் நடுங்க, Nadunga - (பாதாளத்திலே உருமாய்ந்து நம்மை யெடுக்க வல்லார் ஆருமில்லையே’ என்று) நடுங்கிக் கிடந்த காலத்து) ஏனம் ஆய், Enam Aay - மஹாவராஹமூர்த்தியாகி இடந்த, Idandha - அப்பூமியை அண்டபித்தியில் நின்றும் விடுவித்து உத்தரிப்பித்த மெய், Mei - திருமேனி குலுங்கவோ?, Kulungavo - ச்ரமப்பட்டதனாலோ? (ஏனமாய் உலகிடந்த விடாய்தீரவோ?) கோனே, Kone - கோவனே! எழுந்திருந்து போ, Ezhunthirundhu Po - (எந்தவிடாய் தீரக் கிடக்கிறாயென்பதை) எழுந்திருந்து அருளீச்செய்க; வாழி, Vaazhi - இக்கிடையழகு என்றும் வாழ்க. |
| 813 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 62 | கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே | பதவுரை Show / Hideகரண்டம் ஆடு பொய்கையுள், Karandam Aadu Poigaiyul - நீர்க்காக்கைகள் உலாவுகின்ற பொய்கையிலே கரு பனை பெரு பழம், Karup Panai Peru Pazham - கரிய பெரிய பனம்பழங்களானவை புரண்டு வீழ, Purandu Veezh - விழுந்துபுரள (அவற்றைக் கண்டு நீர்க்காக்கைகளாக ப்ரமித்து அஞ்சின) வாளை, Vaalai - மீன்கள் பாய், Paai - துள்ளியோடி யொனிக்கின்ற குறுங்குடி, Kurungkudi - திருக்குறுக்குடியிலே எழுந்தருளியிருக்கிற நெடுந்தகாய், Nedunthakai - மஹாதுபாவனே! திரண்ட தோள், Thiranda Thol - திரண்டதோள்களையுடையவனான இரணியன், Iraniyan - ஹிரண்யனுடைய சினம்கொள் ஆகம் ஒன்றை, Sinamkol Aagam Ondrai - மாத்ஸர்யம் விளங்குகிற கடுமையின் அத்விதீயமான சரீரத்தை இரண்டு கூறு செய்து, Irandu Koordu Seidhu - இருபிளவாகப் பிளந்து உகந்த, Ugantha - மகிழ்ந்த சிங்கம் என்பது, Singam Enbathu - நரஸிம்ஹ மூர்த்தியென்று சொல்வது உன்னையே, Unnaiye - உன்னையோ? (ஸுகுமாரனானவுன்னை முரட்டுச் சிங்கமென்னத்தகுமோ?.) |
| 814 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 63 | நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே | பதவுரை Show / Hideநன்று இருந்து, Nandru Irundhu - (யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து யோகம் நீதி, Yogam Neethi - யோகமாகியு உபாயத்தை நண்ணுவார்கள், Nannuvargal - ஸாதிக்கின்ற யோகிகளுடைய சிந்தையுள், Sindhaiyul - ஹ்ருதயத்தினுள்ளே சென்று இருந்து, Senru Irundhu - ப்ரவேசித்திருந்து ஊரகத்தும், Ooragaththum - திருவூரகத்திலும் வெஃகனை, Veghkanai - திருவெஃகாவிலும் தீ வினைகள் தீர்த்த, Thee Vinaigal Theertha - (அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின தேவ தேவனே!, Deva Devaney - தேவாதி தேவனே! குன்று இருந்த நீடு மாடம், Kundru Irundha Needu Maadam - மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய பாடகத்தும், Paadakaththum - திருப்பாடகத்திலும் இருந்து நின்று கிடந்தது, Irundhu Nindru Kidandhadhu - (க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது என்ன நீர்மை, Enna Neermai - என்ன ஸௌஹார்த்தமோ! |
| 815 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 64 | நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே | பதவுரை Show / Hideஎந்தை, Endhai - எம்பெருமான் ஊரகத்து, Ooragaththu - திருவூரகத்திலே நின்றது, Nindrathu - நின்றருளினதும் பாடகத்து, Paadakaththu - திருப்பாடகத்திலே இருந்தது, Irundhadhu - வீற்றிருந்ததும் வெஃகனை, Veghkanai - திருவெஃகாவில் கிடந்தது, Kidandhadhu - திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்) என் இலாத முன் எலாம், En Ilaadha Mun Elam - நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து அன்று, Andru - அப்போது நான் பிறந்திலேன், Naan Piranthilein - நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை பிறந்தபின், Piranthapin - அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு) மறந்திலேன், Marandhilein - மறக்கவில்லை நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே, Nindrathum Irundhathum Kidandhathum En Nenjule - ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர். |
| 816 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 65 | நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே | பதவுரை Show / Hideஅற்புதன், Arputhan - (ஞானம் சக்தி முதலியவற்றால் ஆச்சரியபூதனும் அனந்த சயனன், Anantha Chayanan - அரவணைமேற் பள்ளி கொள்பவனும் ஆதிபூதன், Aadhipoothan - ஜகத்காரணபூதனும் மாதவன், Maadhavan - ச்ரியாபதியுமான பெருமான் ஓர் வெற்பு அகதது நிற்பதும் வீண், Oru Verppu Agathathu Nirpadum Veen - விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நின்றருள்வதும் பரமாகாசமென்னும் திருநாட்டிலே இரும்பும், Irumbum - வீற்றிருப்பதும் நல் பெருதிரை கடலுள் கிடப்பதும், Nal Peruthirai Kadalul Kidappadum - நல்ல பெரிய அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சாய்ந்தருள்வதும், நான் இலாத முள் எலாம் :, Naan Ilaadha Mul Elam - நான் முறையறியாதே அனத்தாய்க் கிடந்த காலத்திலேயாம்; (இப்பொழுதோவென்றால்) |
| 817 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 66 | இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே | பதவுரை Show / Hideநின்று சாதல், Ninru Saadal - சிலகாலமிருந்து செத்துப் போவதோ அன்றி, Andri - இவ்விரண்டத்தொன்று தவிர யாரும், Yaarum - மேன்மக்களான ப்ரஹ்மாதிகளும் வையகத்து, Vaiyagaththu - இந்நிலத்திலே ஒன்றி நின்று, Onri Ninru - சிரஞ்சீவியாயிருந்து வாழ்தல் இன்மை கண்டும், Vaazhdhal Inmai Kandum - வாழ முடியாதென்பதை ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும் நீசர், Neesar - அறிவில்லாதவர்கள் அன்று பார் அளந்தபாதபோதை உன்னிசென்று, Andru Paar Alandhapathapothai Unnisendru - முன்பு பூமி முழுவதையும் அளந்தருளின பாதாரவிந்தத்தைச் சிந்தித்து சென்று, Sendru - அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று வானின்மேல் சென்று, Vaaninmel Sendru - பரமபதத்தேறப் புகுந்து தேவர் ஆய் இருக்கிலாத வண்ணம் என் கோல், Thevar Aay Irukkilaadha Vannam En Kol - நித்யஸூரிகளோடொக்க இராதது ஏனோ? |
| 818 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 67 | சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி யுய்மினோ | பதவுரை Show / Hideசண்டன் மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று, Sandan Mandalaththinoodu Sendru Veedu Pettru - ஸூர்யமண்டல மத்யமார்க்கத்தாலே போய் வீடு பெற்று, Veedu Pettru - பரமபதத்தை அடைந்து (அவ்விடத்தில்) மேல்வீடு இலாத, Melveedu Ilaadha - பக்தியின் பயனான கைங்கர்ய காதல் இன்பம், Kaadhal Inbam - ஸுகத்தை நித்தியமாகப் பெற நாளும் கண்டு, Naalum Kandu - விருப்பமுடையவர்களே! எய்துவீர், Eyduveer - (முமுக்ஷுக்களே) புண்டரீக பாதன், Pundareeka Paadhan - தாமரைபோன்ற திருவடிகளையுடைனான பெருமானுடைய புண்ய கீர்த்தி, Punya Keerthi - பரிசுத்தமான திருப்புகழ்களை நும் செவி, Num Sevi - உங்களுடைய காதுகளிலே மடுத்து, Madhuthu - தேக்கி உண்டு, Undu - அநுபவித்து. நும் உறு வினை துயரும் நீங்கி உய்ம்மின், Num Uru Vinai Thuyarum Neengi Uymmin - உங்களுடைய ப்ரபல பாபங்களின் பலனை துக்கங்களின் நின்றும் நீக்கி உஜ்ஜிவித்துப்போங்கோள். |
| 819 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 68 | முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ | பதவுரை Show / Hideமூத்திறந்து, Mooththirandhu - மூன்று வகைப்பட்ட (ஸாத்வீக, ராஜஸ, தாமஸங்களான) பல்களுக்குள்ளே இரண்டில், Irandil - (ஸாத்விகமொழிந்த) மற்றையிரண்டு பலன்களில் ஒன்றும், Ondrum - விருப்பமுடையரான நீசர்கள், Neesargal - நீசரான மனிசர்கள் அதில் இட்டு, Adhil Ittu - அந்த லோகத்திலே அந்தக் கரும பலன்களையொழித்து இறந்து, Irandhu - அவற்றை யநுபவிப்பதற்காகப் பூண்டுகொண்ட சரீரத்தை முடித்து போந்து, Pondhu - (மறுபடியும் கர்ப்பவான வழியாலே) பூலோகத்தில் வந்து மத்தர் ஆய், Maththar Aay - “தேஹமே ஆத்மா” என்கிற ப்ரமத்தையுடையராய் மயங்குகின்றது, Mayangugindrathu - மோஹித்துப்போவார்கள்; (அப்படிப்பட்டவர்கட்கு) உய்வது ஓர் உபாயம், Uyvadhu Oor Ubaayam - உஜ்ஜீவ்நோபாயம் எத்திறத்தும் இல்லை, Eththiraththum Illai - எவ்வழியாலுமில்லை, (மேலேறுவதும் கீழிறங்குவதுமாய்த் திரித்லொழிய நிலைநின்ற புருஷார்த்தம்பெற விரகில்லை) உய்குறில், Uykuril - (உங்களுக்கு) உஜ்ஜீவிக்க விருப்பமுண்டாகில் கொத்து இறுத்த, Koththu Iruththa - கொத்துக்கொத்தாகச் செறிந்த தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையனான நம் மாலை, Nam Maalai - பரமபுருஷனை வாழ்த்தி, Vazhthi - துகித்து வாழ்வின், Vazhvin - உஜ்ஜீவித்துப் போங்கோள். |
| 820 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 69 | காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே | பதவுரை Show / Hideகாணிலும், Kaanilum - கண்டாலும் உரு போலார், Uru Polaar - விகாரமான உருவத்தையுடையராயும் செவிக்கு இனாத கீர்த்தியார், Sevikku Inadha Keerthiyar - காதுக்குக் கடூரமான சரித்திரங்களையுடையராயும் பேணிலும், Penilum - (இப்படிப்பட்ட விகாரமான உருவத்தையும் ஹேமயமான சரிதையையும், கவனியாமல்) ஆச்ரயித்தாலும் வரம் தர, Varam Thara - (ஆச்ரயித்தவர்கட்கு) இஷ்டத்தைக் கொடுக்க மிடுக்கு இலாத, Midukku Iladha - சக்தியற்றவர்களாயுமுள்ள தேவரை, Devarai - தேவதைகளை ஆணம் என்று, Aanam Endru - சரணமென்றுகொண்டு அடைந்து வாழும், Adaindhu Vazhume - அவற்றையடைந்து கெட்டுப்போகிற ஆதர்கள், Aadhargal - குருடர்களே! என் ஆதிபால், En Aathipaal - ஸர்வகாரணபூதனான எம்பெருமானிடத்து பேணி, Peni - வழிபாடுகளைச் செய்து நும், Num - உங்களுடைய பிறப்பு எனும், Pirappu Ennum - ஸம்ஸாரமாகிற பிணக்கு, Pinakku - பெரும்புதரை அறுக்க கிற்றிரே, Arukka Kitrire - அறுத்தொழிக்க வல்லீர்களே? |
| 821 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 70 | குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே | பதவுரை Show / Hideகுந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள், Kundhamodu Kulam Velkgal Thomarangal Thandu Vaal - ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட) பந்தம் ஆன தேவர்கள், Pandham Aana Devargal - கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள் பரந்து, Parandhu - (பல திக்குகளிலும்) சிதறிப் போய் வானகம் உற, Vaanagam Ura - தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர வந்த வாணன், Vandha Vaanan - (பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய ஈர் ஐநூறு தோள்களை, Eer Ainooru Tholgalai - ஆயிரந்தோள்களை துணிந்த நாள், Thunindha Naal - அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்) அந்த அந்த அகுலம், Andha Andha Akulam - வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை அமரரே அறிவர், Amararai Arivar - (நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.) |
| 822 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 71 | வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே | பதவுரை Show / Hideவண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால், Vandu Ulaavu Kothai Maathar Kaaranathinaal - (மகரந்தத்திற்காக) வண்டுகள் உலாவப்பெற்ற பூமாலையை அணிந்திருந்த உஷையின் நிமித்தமாக வெகுண்டு, Vegundu - கோபங்கொண்டு இண்ட, Inda - செறித்துவந்த வாணன், Vaanan - பாணாகரனுடைய ஈர் ஐ நூறு தோள்களை, Eer Ainooru Tholgalai - ஆயிரந்தோள்களை துணித்தநாள், Thuniththa Naal - கழித்தபோது முண்டன் நீறன், Mundhan Neeran - மொட்டைத்தலையனாய் நீறு பூசினவனான ருத்திரனும் மக்கள், Makkal - அவனுடைய குமாரர்களும் வெப்பு, Veppu - ஜ்வரதேவதையும் மோடி, Modi - பிடாரியும் அங்கி, Angi - அக்நி தேவதையும் (மற்றுமுள்ளவர்களும்) ஓடிட, Oadida - (பாணாசுரனை வஞ்சித்துவிட்டு. தங்களுயிரைக் காத்துக் கொள்ள) ஓடிப்போன வளவிலே கண்டு, Kandu - பார்த்து நாணி, Naani - (இந்த முதுகுகாட்டிப் பயல்களோடு போர் செய்யவா நாம் வந்தோமென்று) வெட்கப்பட்டு வாணனுக்கு, Vaananukku - பாணாகரன் விஷயத்தில் இரங்கினான், Iranginaan - கிருபைபண்ணினவன் எம்மாயனே, Emmaayaney - ஆச்சரிய சக்தியுக்தனான எம்பெருமானேயாவன். (‘எம் ஆயனே’ என்று பிரிக்கவுமாம். ஆயன் கண்ணபிரான்.) |
| 823 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 72 | போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே | பதவுரை Show / Hideபோதில் மங்கை, Pothil Mangai - பூமகளான லக்ஷிமியும் பூதலம் கிழத்தி, Poothalam Kizhaththi - பூமிப்பிராட்டியும் தேவி, Devi - தேவிமாராவர்; அன்றியும், Anriyum - மேலும் போது தங்குநான் முகன், Pothu Thangunaan Mughan - பூவிலே பொருந்திருப்பவனான பிரமன் அவன் மகன், Avan Magan - பேரனாயிரா நின்றான்; என்று, Endru - இவ்வண்ணமாக வேதம்நூல், Vedhamnool - வேத சாஸ்த்ரம் ஓதுகின்றது, Odhugindrathu - உரைப்பதானது உண்மை, Unmai - ஸத்யம் மகன், Magan - புத்திரனாயிரா நின்றான்; சொலில், Soliil - மேலும் சொல்லப்புக்கால் மாது தங்கு கூறன், Maathu Thangu Kooraan - ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய் ஏறு அது ஊர்தி, Aeru Adhu Oorthi - எருதை வாஹனமாக வுடையனான சிவன் மற்று, Mattru - இங்ஙனன்றிக்கே அல்லது, Allathu - இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை) உரைக்கில், Uraikkil - (சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில் இல்லை, Illai - அது அஸத்யம் |
| 824 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 73 | மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன்னோர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே | பதவுரை Show / Hideமுன் ஓர் நாள், Mun Oor Naal - முன்னொரு காலத்திலே மரம் பொத, Maram Potha - ஸம்பஸாலவ்ருஹங்கள் துளைபடும்படியாக சரம் துரந்து, Saram Thurandhu - அம்பைப் பிரயோகித்து (அதற்குப் பிறகு) வாலி வீழ, Vaali Veezha - வாலியானவன் முடியும்படியும் உரம் பொத, Uram Potha - அவனது மார்பிலே பொத்தும் படியும் சரம் துரந்த, Saram Thurandha - பாணத்தைப் பிரயோகித்த உம்பர் ஆளி எம் பிரான், Umbar Aali Em Piraan - தேவாதி தேவனான எம்பெருமான் வரம் குறிப்பில், Varam Kurippil - (தன்னுடைய) சிறந்த திருவுள்ளத்திலே வைத்தவர்க்கு அலாது, Vaithavarkku Aladhu - யாரை விஷயீகரிக்கிறானோ அவர்கட்குத் தவிர; வானம் ஆளினும், Vaanam Aalinum - மேலுலகங்கட்கு அதிபதிகளாயிருந்தாலும் யார்க்கும், Yaarkkum - மற்றவர்கட்கும் நிரம்பு நீடு போகம், Nirambu Needu Pogam - சாச்வதமாய்ப் பர்பூர்ணமான கைங்கர்யஸுகம் எத்திறத்தும், Eththiraththum - எவ்வழியாலும் இல்லை, Illai - கிடைக்கமாட்டாது. |
| 825 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 74 | அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே | பதவுரை Show / Hideமுதலாயிரம், Muthalayiram - திருச்சந்தவிருத்தம் வாமணன், Vaamanan - உலகளந்த பெருயாமனுடைய அடி இணை, Adi Inai - அடியிணைகளை அறிந்து அறிந்து, Arindhu Arindhu - உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து கொண்டு வணங்கினால், Vananginaal - நமஸ்கரித்தால் செறிந்து எழுந்த ஞானமொழி, Serindhu Ezhuntha Gnanamozhi - பரம ச்லாக்யமாகக் கிளர்ந்த ஞானமும் செல்வமும், Selvammum - பக்தியாகிற செல்வமும் செறித்திடும், Serithidum - பரிபூர்ணமாக விளையும் மறிந்து எழுந்த, Marindhu Ezhuntha - பரம்பிக்கிளர்ந்த; தென் திரையுள், Then Thiraiyul - தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலிலே மன்னு, Mannu - நிதய்வாஸம் செய்தருள்கின்ற மாலை, Maalai - ஸர்வேச்வரனை வாழ்தினால், Vaazhdhinaal - ஸங்கீரத்தகம் பண்ணினால் எழுந்த தீவினைகள், Ezhuntha Theevinaigal - ஆத்மஸ்வரூபத்திலே வளர்ந்து கிடக்கிற கொடு வினைகள் பற்று அறுதல், Patru Aruthal - வாஸனையும் மிகாதபடி நசித்துப்போதல் பன்மையே, Panmaiye - இயற்கையேயாம் (அநாயானமாக நசிக்குமென்கை.) |
| 826 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 75 | ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே | பதவுரை Show / Hideஒன்றி நின்று, Onri Ninru - மனம் சலியாமல் நிலைத்து நின்ற நல் தவம், Nal Thavam - விலக்ஷணமான தபஸ்ஸை (அதாவது கர்மயோகத்தை) ஊழி ஊழிதோறு எலாம் செய்து, Oozhi Oozhithoru Elam Seidhu - பலபல ஜந்மபரம்பரைகளிலே அநுஷ்டித்து அவன் குணங்கள், Avan Gunangal - அப்பெருமானுடைய திருக்குணங்களை நின்று நின்று உள்ளி, Ninru Ninru Ulli - ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுஸந்தித்து உள்ளம் தூயர் ஆய், Ullam Thuyar Aay - கல்மஷமற்ற நெஞ்சை யுடையராய் சென்று சென்று, Sendru Sendru - மேல்மேல் படிகளிலே ஏறி (ச்ரவணம் மநநம் நிதித்யாஸதம் என்கிற பர்வங்களிற் சென்று) உம்பர் உம்பர் உம்பர் ஆய் அன்றி தேவதேவர், Umbar Umbar Umbar Aay Andri Deevadevar - பரபக்தி யுக்தராய் பரஜ்ஞாந யுத்தராய் பரம பக்தியுந்தராய் இப்படி யெல்லா மானால்லது தேவதேவர், Deevadevar - (மற்றபடி) தேவதேவராயிருந்தாலும் எங்கள் செம் கண் மாலை, Engal Sem Kan Maalai - செந்தாமரைக் கண்ணாலே எம்மை விஷயீகரித்தருளும் பெருமானை யாவர் காணவல்லர், Yaavar Kaanavallar - யார் காணக்கூடியவர்கள். |
| 827 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 76 | புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே | பதவுரை Show / Hideபுல், Pul - க்ஷுத்ரங்களான புலன் வழி, Pulan Vazhi - சப்தாதிவிஷயங்களிலே இந்திரியங்கள் ஓடுவதற்குரிய வழியை அடைத்து, Adaiththu - அடைத்து அரக்கு இலச்சினை செய்து, Arakku Ilachchinai Seidhu - (விஷயமார்ந்த த்வாரத்திலே) அரக்கு முத்திரையிட்டு நன் புலன் வழி திறந்து, Nan Pulan Vazhi Thirandhu - ஸத்விஷய மார்க்கத்தைத் திறந்து விட்டு ஞானம், Gnanam - ஞானமாகிய நல்சுடர், Nalsudar - விலக்ஷமான ப்ரபையை கொளீ இ, Kolii I - கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து) என்பு இல், Enbu Il - எலும்பு வீடாகிய சரீரம் என்கி, Enki - சிதிலமாகி நெஞ்சு உருகி, Nenju Urugi - நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்) உள் கனிந்து, Ul Kaninthu - நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்) உன் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி, Un Kaninthu Ezhunthathu Oor Anbil Andri - பரிபக்குவமாய்க் கிளர்ந்த யிலக்ஷணமானதொரு ப்ரேம முண்டானலல்லது ஆழியானை, Aazhiyaanai - திருவாழியைக் கையிலேந்தின பெருமானை |
| 828 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 77 | எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே | பதவுரை Show / Hideஎட்டும் எட்டும் எட்டும் ஆய், Ettum Ettum Ettum Aayi - இருபத்தினான்கு தத்துவங்களுக்கு நிர்வாஹகனாயும் ஓர் ஏழும் ஏழும் ஆய், Oor Eezhum Eezhum Aayi - ஸப்தத்வீபங்களுக்கும் ஸ்பத குலபர்வதங்களுக்கும் ஸ்பத ஸாகரங்களுக்கும் நிர்வாஹகனாவும் எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற, Ettum Moondrum Ondrum Aagi Nindra - த்வாரதசாதித்யர்களுக்கு அந்த ராத்மாவாயுமிருக்கிற ஆதி தேவனை, Aadhi Devanai - பரமபுருஷனை எட்டியைப் போதமோடு இரஞ்சி நின்று, Ettiyapp Podhamodu Iranchi Nindru - ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணி அவள் பெயர் எட்டு எழுத்தும், Aval Peyar Ettu Ezhuthum - அவ்வெம்பெருமானுக்கு வாசகமான திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை ஓதுவார்கள், Othuvargal - அநுஸந்திக்குமவர்கள் வானம் ஆன வல்லர், Vaanam Aana Vallar - பரமபதத்தை ஆளவல்லவர்களாவர் |
| 829 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 78 | சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே | பதவுரை Show / Hideநீர், Neer - திருப்பாற்கடலிலே அரா அணை, Ara Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே கிடந்த, Kidandha - கண் வளர்ந்தருள்கிற நின்மலன், Ninmalan - அகில ஹேயப்ரத்யநீகனான எம்பெருமானுடைய நலம் கழல், Nalam Kazhal - நன்மைபொருந்திய திருவடிகளை ஆர்வமோடு, Aarvamodu - அன்புடன் இறைஞ்சி நின்று, Irainji Nindru - அச்ரயித்து சோர்வு இல்லாத காதலால், Soarvu Illadha Kaadhalal - விஷயாந்தரப்பற்றினால் தளராத காதலோடு துடக்கு அது மனத்தர் ஆய், Thudakku Adhu Manaththar Aay - விச்சேதமில்லாமல் ஏகாந்ரமான மனமுடையவர்களாய் வாரம் ஆக, Vaaram Aaga - இதுவே நமக்குத் தஞ்சம் என்கிற அத்யவஸாயத்தோடு ஓதுவார்கள், Othuvargal - அநுஸந்திக்குமவர்கள் வானம் ஆன, Vaanam Aana - பரமபதத்தை ஆள்வதற்கு வல்லர், Vallar - ஸமர்த்தராவர். |
| 830 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 79 | பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே | பதவுரை Show / Hideபத்தினோடு பத்தும் ஆய், Paththinoadu Paththum Aay - பத்து திக்குகளுக்கும் பத்து திக்பாலகர்களுக்கும் அந்தர்யா மியாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பது ஆய், Oru Ezhinodu Oru Onbathu Aay - ஸப்தஸ்வரங்களென்ன நவநாட்ய ரஸங்களென்ன இவற்றுக்குப் ப்ரவர்த்தகனாய் பத்து நூல் திசை கண் நின்ற, Paththu Nool Thisai Kan Nindra - பதினான்கு வகைப்பட்ட நாடு, Naadu - லோகங்களிலுள்ளவர்கள் பெற்ற, Petra - பெறக்கூடிய நன்மை ஆய், Nanmai Aay - நன்மைக்காக பத்தின் ஆய தோற்றமோடு, Paththin Aaya Thotramodu - தசாவதாரங்களோடு (ஆவிர்ப்பவித்து) ஆற்றல்மிக்க, Aatralmikka - பொறுமையினாலே பூர்ணனான ஓர் ஆதி பால், Oru Aadhi Paal - எம்பெருமான் விஷயத்திலே பக்தர் ஆமவர்க்கு அலாது, Bhakthar Aamavarkku Aladhu - க்தியுடையவராயிருப்பவர்களுக்கன்றி (மற்றையோர்க்கு) மூர்த்தி, Moorthy - மோக்ஷபுருஷார்த்தம் முற்றல் ஆகுமே, Muttral Aagume - பரிபக்வமாகுமோ? |
| 831 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 80 | வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே | பதவுரை Show / Hideவாசி ஆகி, Vaasi Aagi - (கோவேறு) கழுதையின் வடிவங்கொண்டு நேசம் இன்றி வந்து, Nesam Inri Vandu - பக்தியற்றவனாய் வந்து எதிந்த, Edhintha - எதிரிட்ட தேனுகன், Thenughan - தேநுகாஸுரனை நாசம் ஆகி நான் உலப்ப, Nasam Aagi Naan Ulappa - ஆயுள் ஸுமாண்டு அழிந்து போம்படியாக மேல் நிமிர்ந்த தோளின், Mel Nimirtha Tholin - உயர்த்தூக்கப்பட்ட தோளாலே நன்மை சேர் பணங்கனிக்கு வீசி, Nanmai Ser Pananganikku Veeci - அழகிய பணம்பழங்களின் மேலே தூக்கியெறிந்து இல்லை ஆக்கினாய் கழற்கு, Illai Aakkinai Kazharku - (அவ்வசுரனை) ஒழித்தருளின தேவரீருடைய திருவடிகளுக்கு ஆசை ஆமவர்க்கு அலால், Aasai Aamavarkku Alal - நேசிக்குவமர்களுக்கன்றி மற்றையோர்க்கு அமரர் ஆகல், Amarar Aagal - நித்யஸூரிகளோடு ஒப்படைத்தல் ஆகுமே, Agume - கூடுமோ? |
| 832 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 81 | கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ | பதவுரை Show / Hideகடைந்த, Kadaindha - (கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட பால் கடல், Paal Kadal - திருப்பாற்கடலிலே கிடந்து, Kidandhu - கண்வளர்ந்தருளியும் காலநேமியை, Kaalanemiyai - காலநேமியென்னுமசுரனை கடிந்து, Kadinthu - ஒழித்தருளியும் உடைந்த, Udaindha - நடுங்கிக் கிடந்த உதவ, Udhava - உபகாரம் செய்ய இராமன் ஆய் வந்து, Iraman Aayi Vandu - இராமபிரானாய் வந்து தோன்றி மிடத்தை, Midathai - ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த ஏழ் மரங்களும், Ezha Marangalum - ஸப்தஸால வ்ருக்ஷங்களையும் அடங்க, Adanga - ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும் எய்து, Eythu - பாணத்தாலே துளைபடுத்தி வேங்கடம் அடைந்த, Vengadam Adaindha - திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான மால, Maal - எம்பெருமானுடைய பாதமே, Paadame - திருவடிகளையே நாளும், Naalum - நாள்தோறும் அடைந்து, Adaindhu - ஆச்ரயித்து உய்ம்மின், Uymin - உஜ்ஜிவியுங்கள் |
| 833 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 82 | எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே | பதவுரை Show / Hideஎத்திறத்தும் ஒத்து நின்று, Eththiraththum Othu Nindru - எந்த ஜாதியில் அவதரித்தாலும் ஸஜாதீயன் என்ற காரணத்தால் சேதநா சேதநங்களோடு ஒத்திருக்கச் செய்தேயும் உயர்ந்து உயர்ந்த பெற்றியோய், Uyarnthu Uyarntha Pettriyoy - (குணவிசேஷத்தால்) மேன்மேலுமுயர்ந்த ப்ரபாவத்தையுடையோனே! மூத்திறத்து மூரி நீர், Mooththiraththu Moori Neer - திருப்பாற்கடலிலே அரா அணை துயின்ற, Ara Anai Thuyinra - சேஷசயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற நின், Nin - தேவரீர் விஷயத்திலே பத்து உறுத்த சிந்தையோடு நின்று, Paththu Uruththa Sindhaiyodu Nindru - பக்தி அழுந்தின நெஞ்சோடு கூடியிருந்து பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம், Paasam Vittavarkku Eththiraththum Inbam - விஷயாந்தரப் பற்றுக்களை விட்டவர்கட்கு ஸர்வவித ஸுகமும் இங்கும், Ingum - இவ்வுலகத்திலும் அங்கம், Angam - அவ்வுலகத்திலும் ஆகும், Aagum - எளிதாம். பாட்டு, Paatu - பின்பிறக்கவைத்தனன் கொல். |
| 834 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 83 | மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே | பதவுரை Show / Hideமட்டு உணவு, Mattu Unavu - தேன் நித்யாயிருக்கபெற்ற தண், Than - குளிர்ந்த துழாய், Thuzhai - திருத்துழாயினால் தொடுக்கப்பட்ட அலங்கலாய், Alankalai - திருமாலையை அணிந்துள்ளவனே! புலன் கழல் விட்டு, Pulan Kazhal Vittu - (உன்னுடைய) விலக்ஷணமான திருவடிகளை (இந்நிலத்திலேயே அநுபவிப்பதை) விட்டு விண்ணில் ஏறி, Vinnil Eri - பரமபதத்திற் சென்று வீழ்வு இலாத போகம் கண்ணிலும், Veelvul Ilaadha Pogam Kannilum - அழிவில்லாதொரு போகத்தை அடையப்பெற்றாலும். (அது கிடக்கட்டும்) எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால், Ettinodu Irandu Enum Kayittrinai - பத்து என்கிற பக்தியாகிற பாசத்தினாலே மனம் தனை, Manam Thanai - மநஸ்ஸை கட்டி, Katti - கட்டுப்படுத்தி வீடு இலாது, Veedu Iladhu - விச்சேதமில்லாபடி வைத்த, Vaitha - அமைக்கப்பட்ட காதல், Kaadhal - ப்ரேமத்தினாலுண்டாகக் கூடிய இன்பம் ஆகுமே, Inbam Aagume - ஆநந்தத்தை ஒக்குமோ அப்பரமபதாநுபவம்! |
| 835 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 84 | பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு
அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் யாழியான்
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே | பதவுரை Show / Hideஆழியான், Azhiyan - சக்ரஹஸ்தனான எம்பெருமான் பின் பிறந்த வைத்தனன் கொல், Pin Pirandha Vaiththanankol - நான் இன்னும் சில பிறவிகள் பிறக்கும்படியாகத் திருவுளம் பற்றி யிருக்கிறானோ! அன்றி, Andri - அல்லது தன் கழற்கு, Than Kazharku - தன் திருவடிகளிலே நின்று, Ninru - நிலைத்துநின்று அன்பு உறைக்க வைத்து, Anbu Uraikka Vaiththu - (எனக்கு) அன்பு ஊர்ஜிதமாம்படியாக ஸங்கல்பித்து அந்நாள் அறிந்தனன் சொல், Annai Arindhanan Sol - பரமபதத்திலே சென்று அநுபவிக்குமொரு நாளைத்திருவுள்ளம் பற்றியிருக்கிறானோ! தன் திறந்து, Than Thirandhu - தன் விஷயத்திலே ஓர் அன்பு இலா, Oru Anbu Ila - சிறிதும் அன்பு இல்லாதவனும் அறிவு இலாத, Arivu Iladha - விவேகமில்லாதவனும் நாயினேன், Naayinenn - நீசனுமாகிய என் திறத்தில், En Thirathil - என் விஷயத்திலே எம்பிரான், Embiraan - எம்பெருமான் குறிப்பில் வைத்தது, Kurippil Vaiththathu - திருவுள்ளம்பற்றி விருப்பதானது என் சொல், En Sol - எதுவோ (அறியேன்) |
| 836 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 85 | நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே | பதவுரை Show / Hideநஞ்சு அரா அணை, Nanju Ara Anai - (ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே கிடந்த, Kidandha - திருக்கண் வளர்ந்தருள்கிற நாத, Naadha - ஸ்வேச்வரனே! பாத போதினில், Paadha Podhinil - (உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே வைத்த, Vaitha - (இப்போது) வைக்கப்பட்டுள்ள சிந்தை, Sindhai - மகஸ்ஸை வாங்குவித்து, Vaanguviththu - அதில் நின்றும் திருப்பி நீங்குவிக்க, Neenguvikka - வேறு விஷயங்களில் போக்க நீ, Ni - ஸ்வதந்த்ரனான நீ இனம், Inam - இன்னமும் மெய்த்தன், Meiththan - மெய்யாகவே வல்லை ஆதல், Vallai Aathal - ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை அறிந்தனன், Arindhanan - அறிந்திருக்கிறேன் மாயனே!, Mayane - ஆச்சரியசக்தியுக்தனே! என்னை, Ennai - அடியேனை நின் மாயமே உய்ந்து, Nin Maayame Uyndhu - உன்னுடைய மாயச்செயலையே கடத்தி மயக்கினில், Mayakkinil - ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து) மயக்கல், Mayakkal - மயக்கவேண்டா |
| 837 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 86 | சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கை வாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே | பதவுரை Show / Hideசாடு நாடு பாதனே, Saadu Naadu Paadhane - சகடாஸுரனை உதைத்தொழித்த திருவடியையுடையவனே! சலம் கலந்த பொய்கை வாய், Salam Kalanda Poigai Vaai - (விஷமே அதிகமாகி அத்துடன் சிறிது) ஜலமும் கலந்திருக்கப்பெற்ற ஒரு மடுவிலே ஆடு அரவின், Aadu Aravin - (செருக்கினால் படமெடுத்து) ஆடிக்கொண்டிருந்த காளியநாகத்தினுடைய வன்பிடர், Vanpidar - வலியதான பிடரியிலே நடம் பயின்ற, Nadam Payindra - நர்த்தனம் செய்த நாதனே!, Nadhane - ஸ்வாமியே கோடு நீடு கைய, Koodu Needu Kaiya - ஸ்ரீபாஞ்சஜந்யத்தினால் நித்ராஸங்க்குதாமன திருக்கையையுடையவனே! கண்ணனே, Kannane - கண்ணபிரானே! செய்ய பாதம், Seyya Paatham - (உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை நாளும், Naalum - நாள்தோறும் உன்னினால், Unninhaal - அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது மெய், Mei - மெய்யாகவே வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல், Veedan Aaga Seyadha Vannam En Kol - (அடியேனை) முத்தனாக்காதது ஏனோ! |
| 838 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 87 | நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே | பதவுரை Show / Hideநெற்றிபெற்ற கண்ணன், Netripetra Kannan - நெற்றியிலே கண்ணைப் பெற்றவனான சிவனும்: விண்ணின் நாதன், Vinnin Nadhan - தேவேந்திரனும் போதின் மேல் நல் தவத்து நாதன், Pothin Mel Nal Thavathu Nadhan - தாமரைப்பூவிலே பிறந்த நல்ல தபாஸனான நான்முகக் கடவுளும் மற்றும் உள்ள வானவர், Mattrum Ulla Vaanavar - மற்றுமுண்டான பல தேவதைகளும் கற்ற வெற்றியால், Katra Vetriyal - தாங்கள் தாங்கள் அப்பயணித்துள்ள முறைமைக் கிணங்க வணங்குபாத!, Vanangupadha - வந்து வணங்கப்பெற்ற திருவடிகளை யுடையவனே! நாத!, Nadha - நாயகனே! வேத!, Veda - வேதப்ரதிபாத்யனே! உரைக்கில், Uraikkil - (என் அத்யவஸாயத்தைச்) சொல்லப்புக்கால் (சொல்லுகிறேன் கேளாய்.) நின் பற்று அலால், Nin Patru Alal - உன்னையே ஆச்ரயமாகக் கொண்டிருப்பது தவிர மற்றது ஓர் பற்று, Mattrathu Oru Patru - வேறொர் ஆச்ரயத்தை உற்றிலேன், Utrilein - நான் நெஞ்சாலும் ஸ்பர்சிக்கவில்லை. |
| 839 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 88 | வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அரவு அளாய்
அள்ளலாய் கடைந்த வன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை யன்றி மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே | பதவுரை Show / Hideவெள்ளை வேலை, Vellai Velai - வெண்கடலாகிய திருப்பாற்கடலிலே வெற்பு, Verpu - மந்தரமலையை நாட்டி, Naatti - நட்டு வேள் எயிறு அரர், Vel Eiyiru Arar - வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை அளாய், Alai - (கடைகயிறாகச்) சுற்றி அள்ளல் ஆ, Allal Aa - அலைகள் செறியும்படி கடைந்தஅன்று, Kadaindhanru - (கடலைக்) கடைந்தருளின காலத்தில் அருவரைக்கு, Aruvarikku - தாங்க முடியாததான அம்மலைக்கு ஓர் ஆமை நெய், Oru Amai Ney - (தாரகமான) ஒரு ஆமையாகி வானவர்களுக்கு, Vaanavargalukkum - தேவதைகளுக்கு உள்ள நோய்கள் தீர் மருந்து, Ulla Noykal Theer Marundhu - ஏற்பட்டிருந்த நோய்களைத் தீர்க்கவல்ல மருந்தாகிய அம்ருதத்தை அளித்த, Alitha - (கடலிற் கடைந்தெடுத்து) அருளின எம் வள்ளலாரை, Em Vallaralarai - உதாரனான எம்பெருமானை அன்றி, Andri - யன்றி மற்று ஓர் தெய்வம், Mattru Or Deivam - வேறொரு தேவதையை நான் மதிப்பவனே, Naan Mathippavane - நான் (ஒருபொருளாக) மதிப்பனோ! |
| 840 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 89 | பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே | பதவுரை Show / Hideமுன், Mun - முற்காலத்தில் பார் மிகுந்த பரம், Paar Mikuntha Param - பூமியிலே அதிமாகவுண்டான சுமையாகிய துஷ்டவர்க்கத்தை ஒழிச்சுவான், Ozhichchuvaan - ஒழிப்பதற்காக அருச்சுனன் தேர் மிகுத்து, Aruchchunan Ther Mikuththu - அர்ஜுனனுடைய தேரை நன்றாக நடத்தி மாயம், Maayam - (பகலை இரவாக்குகை முதலான) ஆச்சரியச் செயல்களை ஆக்கி நின்று, Aakki Nindru - உண்டாக்கி கொன்று, Konru - (எதிரிகளைக்) கொன்று வெள்ளிசேர் மாரதர்க்கு, Velliseer Maaratharkku - ஐயம்பெறுவதாக நினைத்திருந்த மஹாரதர்களான துர்யோதநாதிகளுக்கு வான் கொடுத்து, Vaan Koduthu - வீரஸ்வர்க்கத்தைக் கொடுத்து வையம், Vaiyam - பூமண்டலத்தை ஐவர் பாலது ஆம், Aivar Paalathu Aam - பஞ்சபாண்டவர்களுடையதாக அக்குவித்த சீர் மிகுந்த, Seer Mikuntha - புகழ் மிகுந்த நின் அலால், Nin Alaal - உன்னைத்தவிர ஓர் தெய்வம், Or Deivam - மற்றொரு தெய்வத்தை நான் மதிப்பனே, Naan Mathippane - நான் ஆதரிப்பேனோ! |
| 841 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 90 | குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே | பதவுரை Show / Hideபுனித, Punitha - பரிசுத்தமான எம் ஈசனே, Em Eesane - எம்பெருமானே! குலங்கள் ஆய ஈர் இரண்டில், Kulangal Aaya Eer Irandil - (ப்ராஹங்மணாதி) நான்கு வர்ணங்களுக்குள் பிறந்திலேன், Pirandhileen - நான் பிறக்கவில்லை கலங்கள் ஆய நல்கலைகள் காலிலும், Kalangal Aaya Nalkalaigal Kaalilum - (சேதநர்க்கு) நன்மையைக் காட்டுவதான நல்ல நான்கு வேதங்களிலும் நவின்றிலேன், Navinrilen - பயிற்சி செய்யவில்லை; புலன்கள் ஐந்தும், Pulangkal Aindhum - பஞ்சேந்திரியங்களையும் வென்றிலேன், Vendrilen - ஜயிக்கவில்லை. பொறியிலேன், Poriyilen - பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு) நின், Nin - உன்னுடைய இலங்கு பாதம் அன்றி, Ilangu Paatham Andri - ஒளிமிக்க திருவடிகளைத் தவிர மற்று ஓர் பற்று இலேன், Mattru Oru Patru Ilen - வேறொரு ஆச்ரயத்தை யுடையேனல்லேன் |
| 842 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 91 | பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே | பதவுரை Show / Hideபண் உலாவும் மென்மொழி, Pan Ulaavum Menmozhi - (குறிஞ்சி காந்தாரம் காமரம் முதலிய) ராகங்கள் விளங்குகின்ற இனிய பேச்சை யுடையவளும் படை தடம்கணாள் பொருட்டு, Padai Thadamkanal Poruttu - வாள் போன்று பெரிய கண்களையுடையவளுமான பிராட்டிக்காக எண் இலா அரக்கரை, En Ilaa Arakkarai - கணக்கிலாத ராக்ஷஸரை நெருப்பினால், Neruppinal - அம்புகளின் தீயினால் நெருக்கினாய், Nerukkinaai - தொலைத்தருளினவனே! கண் அலால், Kan Alaal - (எனக்கு நீ) நிர்வாஹகனேயொழிய ஓர் கண் இலேன், Oru Kan Ilen - வேறொரு நிர்வாஹகனே காணுடையேனல்லேன்; கலந்த சுற்றும்மற்று இலேன், Kalanda Suttum Mattru Ilen - நெஞ்சு பொருந்தின உறவும் வேறில்லை; எண் இலாத மாய!, En Ilaadha Maaya - அநந்தமான ஆச்சரிய சக்தியையுடையவனே! நின்னை, Ninnai - உன்னை என்றும், Endrum - எக்காலத்திலும் என்னுள் நீக்கல், Ennul Neekkal - என்னைவிட்டுப் ப்ரிக்கவே கூடாது. |
| 843 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 92 | விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே | பதவுரை Show / Hideவேலை நீர், Velai Neer - ஜலதத்துவமாகிய கடலை படைத்து, Padaiththu - (முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும் அடைத்து, Adaiththu - (ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்; அதில் கிடந்து, Adhil Kidandhu - (தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும் முன், Mun - முன்னொருகாலத்திலே கநைடபுது, Kanaitaputhu - (தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்) ஏழ்விடை குலங்கள், Ezhuvidai Kulangal - நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும் அடர்ந்து, Adarnthu - கொழுப்படக்கி வென்றிவேல் மண்மாதரர், Vendiveel Manmatharar - ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய கடி கலந்த, Kadi Kalanda - பரிமளம் மிக்க திருத்தோளோடே புணர்ந்த, Punarndha - ஸம்ச்லேஷித்த காலி ஆய, Kaali Aaya - கோபாலகிருஷ்ணனே! நின் தனக்கு, Nin Thanakku - உன் பக்கலிலே அடைக்கலம் புகுந்த என்னை, Adaikalam Pugundha Ennai - சரணம் புகுந்த என்னை நோக்கி அஞ்சல் என்ன வேண்டும், Anjal Enna Vendum - “பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும். |
| 844 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 93 | சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே | பதவுரை Show / Hideகரும்பு இருந்த கட்டியே, Karumbu Irundha Kattiye - கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே! கடல் கிடந்த கண்ணனே, Kadal Kidandha Kannane - திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே! இரும்பு, Irumbu - இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள் அரங்க, Aranga - அழியும்படி வெம்சரம், Vemsaram - தீக்ஷ்ணமான அம்புகளை துரந்த, Durandha - பிரயோகித்த வில், Vil - ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே! இராமனே, Iramane - இராமபிரானே! அரங்கம் வாணனே, Arangam Vaanane - கோயிலில் வாழ்பவனே கரும்பு, Karumbu - வண்டுகளானவை அரங்கு, Arangu - படிந்திருக்கபெற்ற தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் துதைத்து, Thuthaithu - நெருங்கி அலர்ந்த, Alarntha - விசுஸித்திருக்கப்பெற்ற பாதமே, Paadame - (உனது) திருவடிகளையே விரும்பி நின்று, Virumbi Nindru - ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு இறைஞ்சு வேற்கு, Irainthu Vearku - தொழுகின்ற அடியேன் பக்கல் இரங்கு, Irangu - க்ருபைபண்ணியருள். |
| 845 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 94 | ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே | பதவுரை Show / Hideஇராமனே, Iramane - இராமபிரானே! ஊனில் மேய ஆவி நீ, Oonil Meya Aavi Nee - சரீரத்திலே பொருந்தியிருக்கின்ற பிராணன் நீயிட்ட வழக்கு உற்றமோடு உணர்ச்சி நீ, Utramoadu Unarchi Nee - ஜ்ஞாநமும் அஜ்ஞானமும் நீ விட்ட வழக்கு. ஆனில் மேய ஐந்தும் நீ, Aanil Meya Aindhum Nee - பசுக்களிடத்து உண்டான பஞ்சகவ்யமும் நீ; அவற்றுள் நின்ற தூய்மை நீ, Avatrul Nindra Thuymai Nee - அப்பஞ்ச கவ்யங்களுக்குள்ள பரிசுத்தியும் நீ ஸங்கல்பித்தது; வானினோடு மண்ணும் நீ, Vaaninodu Mannum Nee - நித்ய விபூதி லீலா விபூதியென்ற உபய விபூதியும் நீயிட்ட வழக்கும் வளம் கடல் பயனும் நீ, Valam Kadal Payanum Nee - அழகிய ஸமுத்திரத்திலுண்டான (அம்ருதம் ரத்னம் முலான) பிரயோஜனங்களும் நீ; யானும் நீ, Yaanum Nee - அடியேனு“ உன் அதீகன்; அது அன்றி, Adhu Andri - இப்படி பலவாறு பிரித்துச் சொல்வதல்லாமல் எம்பிரானும் நீ, Embiranum Nee - ஸர்வேச்வரனும் நீ காண். |
| 846 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 95 | அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை
துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ
விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும்
கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே | பதவுரை Show / Hideஎம் அண்ணலே!, Em Annale - எம்பெருமானே! அடக்க அரு, Adakka Aru - அடக்க முடியாத ஐந்து புலன்கள், Aindhu Pulankal - பஞ்சேந்திரியங்களை அடக்கி, Adakki - பட்டிமேயாதபடி நியமித்து ஆசை அரும் அவை, Aasai Arum Avai - விஷயந்தரப் பற்றுக்களை துடக்கு அறுத்து வந்து, Thudakku Aruththu Vandu - ஸவாஸகமாகத் தொல்லைத்து விட்டு வந்து நின் தொழில் கண், Nin Thozhil Kan - உன் கைங்கரியத்திலே நின்ற, Nindra - நிஷ்டனாயிருக்கிற என்னை, Ennai - அடையேனே விட கருதி, Vida Karuthi - உபேக்ஷிக்கத் திருவள்ளம்பற்றி மெய் செயாது, Mei Seyadhu - என் உஜ்ஜீவநார்த்தமான க்ருஷியை மெய்யாக நடத்தாமல் மிக்க ஓர் ஆசை ஆக்கிலும், Mikka Oru Aasai Aakilum - விஷயாந்தரப்ராவண்யத்தை அதிகரிப்பித்தாலும் கடல் கிடந்த நின் அலால், Kadal Kidandha Nin Alal - க்ஷீரஸாகர சாயியான உன்னையல்லது ஓர் கண் இலேன், Oru Kan Ilen - வேறொரு ஸ்வாமியையுடைய னல்லேன். |
| 847 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 96 | வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே | பதவுரை Show / Hideவரம்பு இலாத மாய, Varambu Iladha Maaya - அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே மாய!, Maaya - ஆச்சரியசக்தியுக்தனே! வையம் எழும், Vaiyam Ezhum - ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி) மெய்ம்மையே, Meimmaiye - மெய்யாகவே வரம்பு இல் ஊழி, Varambu Il Oozhi - பலபல கற்பகங்கள் வரையிலும் ஏத்திலும், Aeththilum - தோத்திரம் பண்ணினாலும் வரம்பு இலாத கீர்த்தியாய், Varambu Ilaadha Keerthiyaai - எல்லைகாண முடியாத புகழையுடையோனே! புண்டரீகனே, Pundareekane - புண்டரீகாக்ஷனே! (அடியேன்) வரம்பு இலாயா, Varambu Ilaayaa - முடிவில்லாமல் நேரக்கூடியவனான பல் பிறப்பு, Pal Pirappu - பற்பல ஜன்மங்களை அறுத்து, Aruththu - இன்றோடு முடித்துவிட்டு நின் கழல் வந்து, Nin Kazhal Vandu - உனது திருவடிகளைக் கிட்டி பொருந்தும் ஆ, Porundum Aa - அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி திருந்த, Thirundha - நன்றாக நீ வரம் செய், Nee Varam Sei - அநுக்ரஹித்தருள வேணும் |
| 848 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 97 | வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே !
ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே | பதவுரை Show / Hideவெய்ய ஆழி, Veyya Aazhi - (எதிரிகள்மேல்) தீக்ஷ்ணமான திருவாழியையும் சங்கு தண்டு வில்லும் வாளும், Sangu Thandu Villum Vaalum - திருசங்கையும் கதையையும் ஸ்ரீசார்ங்கத்தையும் நந்தகவாளையும் சேரும் மார்ப, Searum Maarba - நித்யவானம் பண்ணுகிற திருமார்பையுடைவனே! நாதனே, Nadhane - ஸர்வஸ்வாமியே! ஐயில் ஆய ஆக்கை நோய், Aiyil Aaya Aakkai Noi - சிலேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரமாகிய வியாதியை ஏந்து சீர் கைய!, Aendhu Seer Kai - தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே செய்யபோதில் மாது, Seyyapothil Maathu - செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி அறுத்து வந்து, Aruththu Vandu - தொலைத்து வந்து நின் அடைந்து, Nin Adaindhu - உன்னை அடைந்து உய்வது ஓர் உபாயம், Uyvadhu Oor Ubaayam - நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபாயத்தை எனக்கு, Enakku - அடியேனுக்கு நீ நல்கவேண்டும், Nee Nalkavendum - அருள வேணும். |
| 849 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 98 | மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே | பதவுரை Show / Hideமாய!, Maaya - ஆச்சரிய சக்தி யுக்தனான பெருமானே! மறம் துறந்து, Maram Thurandhu - கோபத்தை ஒழித்து வஞ்சம் மாற்றி, Vanjam Maatri - கன்னங்சுவடுகளைத் தவிர்த்து ஐம்புலன்கள் ஆசையும் துறந்து, Aimpulankal Aasaiyum Thurandhu - பஞ்சேந்த்ரியங்களினுடைய விஷயாந்தரப் பற்றையும் ஒழித்து நின் கண், Nin Kan - உன் பக்கலில் ஆசையே தொடர்ந்து நின்ற காயினேன், Aasaiye Thodarnthu Nindra Kaayinen - பக்தியே மேன்மேலும் பெருகி வரப்பெற்ற அடியேன் பிறந்து இறந்து, Pirandhu Irandhu - பிறப்பது இறப்பதுமான விகாரங்களையடைந்து கொண்டு பேர் இடர் கழிக்கண் நின்றும், Per Idar Kazhikkal Nindrum - மஹாதுக்க மண்டலான ஸம்ஸுரத்தில் நின்றும் நீக்கும் ஆ, Neekum Aa - நீங்கும் பிரகாரத்தையும் மற்று, Mattru - அதற்கு மேற்பட்டுப் பரமாநந்த மடையும் பிரகாரத்தையும் எனக்கு, Enakku - அடியேனுக்கு மறந்திடாது, Marandhidaadhu - மறவாமல் கல்க வேண்டும், Kalka Vendum - அருளவேணும் |
| 850 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 99 | காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே | பதவுரை Show / Hideபூவை வண்ணனே, Poovai Vannane - காயாம்பூப்போன்ற நிறமுடையவனே! பின்னைகேள்வ!, Pinnaikelva - ! நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனே நான் செய் வல்வினை காட்டி, Naan Sey Valvinai Kaatti - நான் செய்த பிரபலமான பாவங்களை எனக்கு ஞாபகப்படுத்தி பயன் தனில், Payan Thanil - அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில் மனம் தனை, Manam Thanai - எனது மநஸ்ஸை நாட்டி வைத்து, Naatti Vaiththu - துணியும்படி செய்வித்த நல்ல அல்ல, Nalla Alla - அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை செய்ய எண்ணினார், Seyya Enninara - செய்ய நினைத்திருக்கிறார்கள் என கேட்டது அன்றி, En Kaettathu Andri - என்று நான் கேட்டிருக்கிற படியாகையாமைக்காக உன்னது ஆவி, Unnathu Aavi - என்னுடைய ஆத்மாவை நின்னொடும் பூட்டிவைத்த என்னை, Ninnodum Poottevaitha Ennai - உன் பக்கலில் ஸமர்ப்பித்து நீர்ப்பரனாயிருக்கி என்னை |
| 851 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 100 | பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே | பதவுரை Show / Hideபெறற்கு அரிய மாயனே, Perarku Ariya Mayane - (ஒருவர்க்கும் ஸ்வயத்தக்கதாலே பெறுவதற்கு முடியாத எம்பெருமானே! பிறப்பினோடு பேர் இடர் கழிக்கன் நின்றும், Pirappinodu Per Idar Kazhikan Nindrum - பிறப்பு முதலிய பெருப்பெருத்த துக்கங்களை நினைக்கின்ற ஸம்ஸாரத்தில் நின்றும் நீங்கும் அஃது, Neengum Ahthu - நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள் இறப்ப வைத்த, Irappa Vaitha - மறந்தொழிந்த ஞான நீசரை, Gnaana Neesarai - ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை கரை கொடு, Karai Kodu - ஏற்றம் ஆ பெறற்கு அரிய, Perarku Ariya - துர்லபமான சின்ன பாதம் பத்தி ஆன, Chinna Paatham Pathi Aana - உன் திருவடிகளில் பக்தியாகிற பாசனம், Paasanam - மரக்கல (ஓட) த்தை எனக்கு நல்க வேண்டும், Enakku Nalka Vendum - அடியேனுக்கு அருளவேணும். |
| 852 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 101 | இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே | பதவுரை Show / Hideஏமம் நீர் நிறத்து, Aemam Neer Nirathu - மஹாஜலமான கடல்போன்ற நிறத்தையுடைய அம்மா !, Amma - ஸ்வாமி! இரந்து உரைப்பது உண்டு, Irandu Uraippathu Undu - (தேவரீரை) யாசித்துச் சொல்லும் வார்த்தையொன்றுண்டு வாழி, Vaazhi - பல்லாண்டு பல்லாண்டு; மன்னு சீர்வரம் தரும் திருக்குறிப்பில், Mannu Seervaram Tharum Thirukkurippil - (சேதநர்க்குச் ) சிறந்த வரங்களையருள்வதே இயல்வான (தேவரீருடைய) திருவுள்ளத்தில் வைத்தது ஆகில், Vaithathu Aagil - அடியேனுக்கு ஏதாவது வரங்கொடுக்க நினைவுண்டாகில் (இந்த வரம் கொடுக்க வேணும்.) பரந்த, Paranda - கண்ட விடங்களில் அலைந்து திரிகிற சிந்தை, Sindhai - எனது நெஞ்சானது ஒன்றி நின்று, Onri Ninru - (தேவர் விஷயத்திலேயே) ஸ்திரமாயிருந்துகொண்டு நின்ன, Ninna - தேவரீருடைய பாதபங்கயம், Paadapangayam - திருவடித்தாமரைகளை நிரந்தரம், Nirantharam - இடைவிடாமல் நினைப்பது ஆக, Ninaippathu Aaga - தியானித்திருக்கும்படியாக நீ நினைக்க வேண்டும், Nee Ninaikka Vendum - தேவரீர் திருவுள்ள மிரங்க வேணும். |
| 853 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 102 | விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ தெழிக்கும் நீர்
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால்
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே | பதவுரை Show / Hideதெழிக்கும் நீர், Thezhikkum Neer - கொந்தளிக்கின்ற கடலிலே பள்ளி, Palli - சயனங்கொண்டிருக்கிற மாய, Maaya - ஸர்வேச்வரனே! பன்றி ஆய, Pandri Aaya - மஹாவராஹமாகக் திருவவதரித்த வென்றி வீர, Ventrivira - ஜயசீலனான வீரனே! துள்ளும் நீர், Thullum Neer - துள்ளின கடலிலே குன்றினால், Kundrinaal - மலைகளைக் கொண்டு உள்ளு வேனது, Ulluvendathu - (அத்திருவடிகளையே தஞ்சமாக) அநுஸந்தித்திருக்கிற என்னுடைய ஊனம் நோய், Oonam Noi - சரீர சம்பந்தமான நோய்களை வரம்பு செய்த, Varambu Seitha - அணைகட்டின தோன்றல், Thonral - ஸ்வாமியே! யிலவு இலாத காதலால், Yilavu Iladha Kaadhalal - நீக்கமில்லாத அன்பினால் விளங்கு பாத போதில் வைத்து, Vilangu Paath Podhil Vaiththu - (உனது) விளங்குகின்ற பாதாரலிங்கத்திலே (நெஞ்சை) வைத்து ஒழிக்கும் ஆ, Ozhikkum Aa - ஒழிக்கும் வழிகளில் ஒன்று, Ondru - ஒருவழியை சொல்லிவிடு, Sollividu - அருளிச் செய்க |
| 854 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 103 | திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே | பதவுரை Show / Hideதிரு கலந்து சேரும், Thiru Kalandu Serum - பெரிய பிராட்டியார் நித்யஸம்ச்லேஷம் பண்ணி வாழப்பெற்ற மார்பு, Marbu - திருமார்பையுடையனே! தேவர் தேவர் தேவனே, Thevar Thevar Devane - ப்ரஹ்மாதிகளிற் காட்டிலும் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் தலைவனே! இருக்கு கலந்த வேதம் நீதி ஆகி நின்ற, Irukku Kalandha Vedham Neethi Aagi Nindra - (பலவகைப்பட்ட) ருக்குக்கன் சேர்ந்திருக்கிற வேதங்களால் பிரதி பாதிக்கப்படுகையை ஸ்வபாவமாகவுடையனான நின் மலா, Nin Mala - பரிசுத்தனே கரு கலந்த, Karhu Kalandha - பொன்னோடு சேர்ந்த காளமேகம் மேனி, Kaalamegam Menni - காளமேகம்போன்ற திருமேனியையுடைய ஆய, Aaya - கண்ணபிரானே! நின் பெயர், Nin Peyar - உன் திருநாமஙக்ளை ஒழிவு இலாது, Ozhivu Iladhu - நிரந்தரமாக உரு கலந்து உரைக்கும் ஆறு, Uru Kalandha Uraikkum Aaru - திவ்யமங்களவிக்ரஹத்தோடு சேர்ந்து அநுஸந்திக்கும் வகையை உரைசெய், Uraichai - அருளிச் செய்யவேணும். |
| 855 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 104 | கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை
இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்றி யங்கு போது நின்ன பொற் கழல்
தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே | பதவுரை Show / Hideகடு, Kadu - க்ரூரனான கவந்தன், Kavandhan - கபந்ததென்ன வக்கரன், Vakkaran - தந்தவக்த்ரனென்ன கரன், Karan - கரனென்ன முரன் சிறை அவை, Muran Sirai Avai - முரனென்ன (இவர்களுடைய தலைகளை இடந்து கூறு செய்த, Idandhu Koora Seitha - சிந்நபிந்நமாக்கினவனும் பல்படை தடகை, Palpadai Thadakai - பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான மாயனே, Maayaney - பெருமானே! கிடந்து இருந்து நின்று இயங்குபோதும், Kidandhu Irundhu Nindru Iyangu Bodhum - படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும் நின்ன, Ninna - தேவரீருடைய பொன்கழல், Ponkazhal - அழகிய திருவடிகளையே தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி, Thodarnthu Veelvu Iladhu Oru Thodarchi - இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை நலக் வேண்டும், Nalak Vendum - தந்தருளவேணும். |
| 856 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 105 | மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே | பதவுரை Show / Hideமண்ணை உண்டு, Mannai Undu - பூமியைப் பிரளயகாலத்திலே திருவயிற்றில் வைத்து நோக்கியும் பின் உமிழ்ந்து, Pin Umizhndhu - பிரளயம் கழிந்த பிறகு வெளிப்படுத்தியும் இரந்துகொண்டு, Irandhukondu - (மஹாபலியிடத்தில்) பிக்ஷையேற்றுப் பெற்று அளந்து, Alandhu - அளந்துகொண்டும். மண் கண்ணுள் அல்லது இல்லை என்று, Mann Kannul Allathu Illai Endru - ‘இவ்வுலகமானது நமது கடாக்ஷத்தாலன்றி ஸத்தை பெற்றிருக்கமாட்டாது’ என்று திருவுள்ளம்பற்றி வென்று, Vendru - (அவ்வுலக முழுவதையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்டும் போந்த காலம் ஆயினும், Kaalam Aayinum - ஸர்வகால நிர்வாஹகனே! பண்ணை வென்ற இன்சொல் மங்கை, Pannai Vendra Insoll Mangai - பண்களைத் திரஸ்கரித்த இனிமையான பேச்சையுடைய பிராட்டியினுடைய கொங்கை, Kongai - திருமுலைத்தடத்திலே தங்கு, Thangu - பிரியாது வாழ்கிற பங்கயக்கண்ண, Pangayakkann - புண்டரீகாக்ஷனே! நின்ன வண்ணம் அல்லது, Ninna Vannam Allathu - உன் வடிவழகுதவிர எண்ணும் வண்ணம் இல்லை, Ennum Vannam Illai - தியானிக்கக்கூடிய வடிவு மற்றொன்றுமில்லை. |
| 857 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 106 | கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்னொரு காலத்து கறுத்து எதிர்ந்த காலநேமி, Karuthu Edhirntha Kaalanemi - கோபித்து எதிரியிட்ட காலநேமியானவன் காலனோடு கூட, Kalanodu Kooda - யமலோகம் போய்ச்சேரும்படியாக அறுந்த, Arundhu - அவன் தலையை அறுத்த ஆழிசங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய், Aazhisangu Thandu Villum Vaalum Aendhinai - பஞ்சாயுதாழ்வார்களை ஏந்தினாய், Aendhinai - திருக்கையிலே அணிந்து கொண்டிருக்கும் பெருமானே! தொறு கலந்த ஊனம் அஃது, Thoru Kalandha Oonam Ahthu - பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை அன்று ஒழிக்க, Andru Ozhikka - அப்போதே போக்குவதற்காக முன், Mun - எல்லாருடையவும் கண்முன்னே குன்றம் பொருத்த நீ, Kundram Poruththa Nee - கோவர்ததனமலையை (குடையாகத்) தூக்கினெயேடுத்த தேவரீருடைய புகழ்க்கு அலால், Pugazhkkal Ahaal - திருக்குணங்களுக்குத் தவிர (மற்றெவ்விஷயத்திலும்) நெஞ்சம், Nenjam - எனது நெஞ்சுக்கு ஓர் கேசம் இல்லை, Oru Kesam Illai - சிறிதும் ப்ரதியில்லை. |
| 858 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 107 | காய் சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே | பதவுரை Show / Hideஎம் ஈசனே, Em Eesane - எம்பெருமானே! காய் சினந்த காசிமன்னன், Kaai Sinantha Kaasimanthan - மஹா கோபியான காசிராஜாவும் வக்கரன், Vakkaran - (ருக்மினி விவாஹ காலத்தில் வந்து போர் செய்த) தந்தவக்த்ரனும் பவுண்டிரன், Pavundiran - பௌண்ட்ரக வாஸுதேவனும் மா சினந்த மாலி, Maa Sinantha Maali - அதிகோபிஷ்டனான மாலியும் மா கமாலி, Maa Kamali - மஹானான ஸுலிமாலியும் கேசி, Kesi - (குதிரை வடிவங்கொண்டு கொல்ல வந்த) கேசியும் தேனுகன், Thenughan - தேநுகாஸுரனும் நாசம் உற்று வீழ, Naasam Utru Veezh - துக்கத்தையநுபவித்து மாண்டு போம்படியாக நாள் கவர்ந்த, Naal Kavarndha - (அவர்களுடைய) வாழ்நாளை முடித்த நின், Nin - தேவரீருடைய கழற்கு அலால், Kazharppu Ahaal - திருவடிகளுக்குத் தவிர எத்திறந்தும், Eththirandhum - வேறு எவ்விஷயத்திலும் நேச பாசம், Nesa Paasam - ஆசாபாசத்தை வைத்திடேன், Vaiththidein - வைக்கமாட்டேன் |
| 859 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 108 | கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே | பதவுரை Show / Hideகேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன், Kaedu Il Seer Varaththan Aam Ayan - அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன கெடும் வரத்து அரன், Kedum Varathu Aran - எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய) நாடினோடு கூட, Naadinoodu Kooda - நாடுகளோடு கூட கூடும் ஆசை அல்லது, Koodum Aasai Alladhu - எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர நாட்டம் ஆயிரத்தன் நாடு, Naattaam Aayiraththan Naadu - ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும் கண்ணீரும், Kannirum - அடையப்பெறுவதாயிருந்தாலும் வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும், Veedu Aanadhu Pogam Eydhi Veetirundha Podhiyilum - மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும் ஒன்று குறிப்பில் கொள்வனோ, Onru Kurippil Kolvanon - மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ. |
| 860 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 109 | சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் | பதவுரை Show / Hideசுருங்குவாரை இன்றியே, Surunguvaarai Indriye - சுருங்கச்செய்வதற்கு ஹேதுவான கருமமம் முதலியவை ஒன்றுமில்லாமலே சுருங்கினாய், Surunginaai - (ஸ்ரீவாமனாகச்) சுருங்கின பெருமானே! சுருங்கியும் பெருக்கு வாரை இன்றியே, Surungiyum Perukku Vaarai Indriye - அப்படிக் குறுகினபின்னும் பெருகச் செய்வதற்கு ஹேதுவான கருமம் முதலியவை ஒன்றுமில்லாமல் பெருக்கம் எய்து, Perukkam Eydhu - (த்ரிவிக்ரமனாகத்) திருவளர்த்தி பெற்றியோய், Petriyoiy - பெற்ற பெருமானே செருக்குவார்கள், Serukkuvargal - அஹங்காரிகளாய்த் திரிந்த மஹாபலி போல்வாருடைய தீ குணங்கள், Thee Gunangal - அஹங்கார மமகாரங்களாகிற தீயகுணங்களை தீர்த்த, Theertha - தொலைத்தருளின என்று, Endru - இவ்வாறு பல ஸம்போதகங்களையிட்டு இருக்குவாய் முனி கணங்கள் ஏந்த, Irukkuvaai Muni Kanangal Aentha - வேதமோதும் வாயையுடையரான மஹரிஷிகளின் திரள் துதிக்க (அதைக்கண்டு) யானும் ஏத்தினேன், Yaanum Aeththinaen - அடியேனும் துதித்தனித்தனை. |
| 861 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 110 | தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே | பதவுரை Show / Hideகரும்பு உலாவு, Karumbu Ulaavu - வண்டுகள் உலாவப்பெற்ற தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய மாய!, Maaya - ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே! நாயினேன், Naayinenn - நீசனான அடியேன் தூயனாயும், Thuyanaayum - பரிசுத்தனாகவோ அன்றியும், Anriyum - பரிசுத்தனல்லாதவனாகவோ நின்னை, Ninnai - தேவரீரை வணங்கி, Vanangi - ஸேவித்து வேலை நீர் பாயலோடு, Velaai Neer Paayalodu - திருப்பாற்கடலாகிற படுக்கை யோடுங்கூட பக்தர் சித்தர், Bhakthar Sidhthar - பக்தர்களுடைய ஹ்ருதயத்திலே மேய, Meya - குடியிருக்கின்ற வேலைவண்ணனே!, Velaivannaney - கடல்வண்ணனே! வாழ்த்தும் இது எலாம், Vaazhthum Idhu Elam - துதிப்பதாகிற இதனையெல்லாம் நீயும், Neeyum - (ஸர்வஸஹிஷ்ணுவான) தேவரீரும் நின் குறிப்பினில் பொறுத்து, Nin Kurippinil Poruthu - திருவுள்ளத்திலே க்ஷமித்திருள் நல்கு, Nalku - அநுக்ரஹம் செய்ய வேணும். |
| 862 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 111 | வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே | பதவுரை Show / Hideநின்னை வைது, Ninnai Vaithu - தேவரீரை நிந்தித்து வல்லஆ பழித்தவர்க்கும், Vallaa Pazhithavarkkum - சக்தியுள்ளவரைக்கும் அபவாதங்களை சொன்ன சிசுபாலாதிகளுக்கும் மாறு இல்போர் செய்து, Maaru Ilpor Seythu - ஒப்பில்லாத யுத்தம்பண்ணி நின்ன செற்றும், Ninna Settrum - தேவரீருடைய தீயில், Theeiyil - கோபாக்நியில் வெந்தவர்க்கும், Venthavarkkum - வெந்துபோன வாலி முதலானோர்க்கும் உனைவந்து எய்தல் ஆகும் என்பர், Unnaivandu Eydhal Aakum Enbar - தேவரீரைக் கிட்ட உஜ்ஜீவிக்கப்பெறலாகுமென்று (மஹரிஷிகள்) சொல்லாநின்றனர்; ஆதலால், Aadhalal - ஆகையாலே எம் மாய!, Em Maaya - எம்பெருமானை! ஞானம் நாதனை, Gnanam Nadhanai - ஸர்வலோக ஸம்ரக்ஷகனே! நாயினேன், Naayinenn - அடியேன் பண்ணின செய்த குற்றம், Seytha Kuttram - குற்றங்களை நற்றம் ஆகவே கொள், Nattram Aagave Kol - குணமாகவே கொள்ளல் வேண்டும். |
| 863 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 112 | வாள்களாக நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே | பதவுரை Show / Hideநாள்கள், Naalgal - தினங்களானவை வாள்கள் ஆகி செல்ல, Vaalgal Aagi Sella - (நமது ஆயுளை அறுக்கும்) வாள்கள்போன்று கழிய நோய்மை, Noymai - பலவகை வியாதிகளாலே குன்றி, Kundri - உடல் பலக்குறைபட்டு மூப்பு எய்தி, Mooppu Eydhi - கிழத்தனமும் வந்து சேர்ந்து மாளும் நாள் அது, Maalum Naal Adhu - மரணமடைவதோர் நாள் நெருங்கிவிட்டது; ஆதலால், Aadhalal - ம்ருத்யுகாலம் குறுகிவிட்டபடியால் என் நெஞ்சமே, En Nenjamai - எனது மனமே! ஆனது நன்மை ஆகும் என்று, Aanathu Nanmai Aakum Endru - எம்பெருமானுக்கு ஆட்பட்டிருப்பதே நன்மையென்று நன்கு உணர்ந்து, Nanru Unarndhu - த்ருடமான அத்யவஸாயங்கொண்டு வணங்கி வாழ்த்து, Vanangi Vazhthu - (அவ்வெம்பெருமானைத்) தொழுது ஏத்துவாயாகா; அது அன்றியும், Adhu Anriyum - அதற்கு மேலே மால பாதமே, Maala Paathame - அப்பெருமானுடைய திருவடிகளே மீள்வு இலாத போகம், Meelvu Ilaadha Pogam - மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகத்தை நல்க வேண்டும், Nalka Vendum - அளிக்கக்கடவது |
| 864 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 113 | சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே | பதவுரை Show / Hideநெஞ்சமே!, Nenjame - என்மனமே வாழி, Vaazhi - உனக்குப் பல்லாண்டு, (நான் சொல்வதைக் குறிக்கோள் சலம் கலந்த செம்சடை, Salam Kalanda Semsadha - கங்கை நீரோடு வடின சிவந்த ஜடையையுடைவனும் கறுத்த கண்டன், Karutha Kandan - (விஷத்தினால்) கறுத்த கழுத்தையுடையனும் புலன் கலங்க, Pulan Kalanga - ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு வெண்தலை, Venthala - வெளுத்துப்போன கபாலத்திலே உண்ட, Unda - பிச்சைவாங்கியுண்டு ஜீவித்த பாதகத்தான், Paadhakaththaan - கோரமாதகியுள்ள சிவபிரானுடைய வன்துயர்கெட், Vanthuyarket - வலிதான துக்கம் தீரும்படி அலங்கல், Alangal - திருத்துழாய் மாலையையணிந்த மார்வில், Maarvil - திருமார்பினின்றும் வாசம் நீர், Vaasam Neer - திவ்யபரிமளமான தீர்த்தத்தை கொடுத்தவன், Koduththavan - அவனுக்கு ப்ரஸாதித்தருளி அடுத்த சீர், Adutha Seer - என்றும்விட்டு நீங்காத திருக்கல்யாண குணங்களையுடைய நலம்கொள் மாலை, Nalamkol Maalai - ஆநந்தமயனான எம்பெருமானை கண்ணும் வண்ணம், Kannum Vannam - அணுகும் வழியாகிற அவனது திருவருளையே எண்ணு, Ennu - அநுஸந்தித்து |
| 865 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 114 | ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே | பதவுரை Show / Hideஎன் நெஞ்சமே, En Nenjamai - எனது மனமே ஈனம் ஆய, Eenam Aaya - (அறிவுக்குக்) குறைவை விளைக்கவல்ல எட்டும், Ettum - அவித்யை. கருமம், வாஸகா, ருசி, பிரகிருதி ஸம்பந்தம், தாப த்ரயம் ஆகிய எட்டையும் நீக்கி, Neekki - போக்கி ஏதம் இன்றி, Edham Inri - ஸம்ஸார துக்கங்களெல்லாம் போய் மீது போய், Meethu Poi - (அர்சிராதி மார்க்கத்தாலே லீலா விபூதிக்கு) மேலே சென்று வானம், Vaanam - பரமபதத்தை ஆளவில்லை நூல், Aalavillai Nool - அநுபவிக்க வேண்டியிருந்தாயாகில் ஞானம் ஆகி, Gnanam Aagi - ஆத்மஞானத்தை யளிப்பவனாயும் ஞாயிறு ஆகி, Gnayiru Aagi - ஸூரியனைப்போலே இந்திய ஞானத்தை அளிப்பவனாயும் ஏனம் மூர்த்திஆய், Enam Moorthiyaai - மஹா வராஹமூர்த்தியாய் ஞாலம் முற்றும், Gnaalam Muttum - பூமி முழுவதையும் ஓர் எயிறு, Oru Eiyiru - ஒரு கோட்டினாலே இடந்த, Idandha - அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து ரக்ஷித்த எந்தை, Endhai - எம்பெருமானது பாதம், Paatham - திருவடிகளை எண்ணி, Enni - சிந்தித்து வணங்கி, Vanangi - நமஸ்கரித்து வாழ்த்து, Vazhthu - துதிக்கக்கடவை |
| 866 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 115 | அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே | பதவுரை Show / Hideமுத்தனார், Muththanar - ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவரும் முகுந்தனார், Mukundanar - மோக்ஷபூமியை அளிப்பவருமான பெருயாமன்; ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து, Othu Ovaadha Pal Pirappu Ozhithu - ஞானமுடைமையால் ஒத்தும் யோநிபேதத்தால் ஒவ்வாமலுமிருக்கிற பலவகைப்பட்ட பிறவிகளைப்போக்கி நம்மை ஆட்கொள்வாள், Nammai Aadkolvai - நம்மை அடிமை கொள்வதற்காக அத்தன் ஆகி, Aththan Aagi - பிதாவாயும் அன்னை ஆகி, Annai Aagi - மாதாவயும் ஆளும் எம்பிரானும் ஆய், Aalum Empranaanum Aayi - அடிமைகொள்ளும் ஸ்வாமியாயும் நம்முன், Nammun - நம்மிடத்திலே புகுந்து மேவினார், Pugundhu Mevinar - புகுந்து ஒரு நீராகப் பொருந்தினார்; (ஆனபின்பு) ஏழை நெஞ்சமே, Ezha Nenjame - மதிகெட்ட மனமே எத்தினால், Ethinai - எதுக்காக இடர் கடல், Idar Kadal - துக்கஸாகரத்திலே கிடத்தி, Kidathi - அழுந்திக் கிடக்கிறாய். |
| 867 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 116 | மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே | பதவுரை Show / Hideமாறு செய்த, Maaru Seitha - எதிரிட்ட வாள் அரசர்கள், Vaal Arasarkal - ஆயுதபாணியான இராவணனுடைய நாள் உவப்ப, Naal Uvappa - வாழ்நாள் முடியும்படியாக அன்று, Andru - முற்காலத்து இலங்கை, Ilankai - லங்காபுரியை சென்று, Sendru - அடைந்து நீறு செய்து, Neeru Seidhu - நீறாக்கி கொன்று, Konru - அவனைக் கொன்று வெற்றி கெணண்ட, Vettri Kenanda - ஜயம்பெற்ற வீரனார், Veeranaar - மஹாவீரரான பெருமாள் என்னை, Ennai - அடியேனை தம்முள் வேறு செய்து வைத்திடாமையால், Thammul Veru Seidhu Vaithidamaiyaal - தம்மில் வேறுபடுத்தி வைக்காமையினால் (என்னை அந்தரங்க பூதனாகக் கொண்டருளினபடியால் ) (இனி) நமன், Naman - யமனானவன் கூறுசெய்து கொண்டு, Koora Seidhu Kondu - (என்னை அம்பெருமானிடத்தினின்றும்) பிரித்து இறந்த குற்றம், Iranda Kutram - நான் செய்து கழித்த பாவங்களை என்ன வல்லனே, Enna Vallanai - நெஞ்சாலும் நினைக்கக் கடவனோ. |
| 868 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 117 | அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே | பதவுரை Show / Hideஅச்சம், Acham - பயமென்ன நோயோடு அல்லலி, Noyodu Allali - வியாதியோடு கூடின மகோ வியாதியென்ன அவாயம் மூப்பு, Avaayam Moopu - அபாயங்களுக்கு இடமான கிழத்தனமென்ன பல் பிறப்பு, Pal Pirappu - பலவகைப் பிறப்புகளென்ன இவை, Ivai - ஆகிய இவற்றையும் வைத்த சிந்தை, Vaitha Sindhai - இவற்றை யனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும் வைத்த ஆக்கை, Vaitha Aakkai - கீழ்சொன்னவற்றுக்கு ஆச்ரமாகக் கண்ட சரீரத்தையும் மாற்றி, Maatri - போக்கடித்து வானில், Vaanil - (நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்ப்பவன் (ஆரென்னில்) அச்சுதன், Achuthan - அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும் அனந்த கீர்த்தி, Anantha Keerthi - எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும் ஆதி அந்தம் இல்லவன், Aadhi Andham Illavan - முதலும் முடிவும் மில்லாதவனும் நஞ்சு நாக அணை கிடந்த நாதனை, Nanju Naaga Anai Kidandha Naadhanaik - (விரோதிகள்மீது) விஷத்தை உமிழ்கின்ற ஆசிதேஷனாகிற சயனத்திலே கிடந்தருளும் ஸ்வாமியும் வேத கீதம், Veda Geetham - வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டதுமான பெருமானாம் |
| 869 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 118 | சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே | பதவுரை Show / Hideவல்லி நாள் மலர் கிழத்திநாத!, Valli Naal Malar Kizhaththinadha - படர்ந்த செவ்வித் தாமரைப்பூவிலே பிறந்த பிராட்டிக்கு நாதனே! உள்ளம், Ullam - எனது நெஞ்சானது சொல்லினும், Sollinum - வாக்கிலும் தொழில் கணும், Thozhil Kanum - காயிகவ்யபாரங்களிலும் தொடக்கு அறாத அன்பினும், Thodakku Aradha Anbinum - பிச்சேதமற்ற அன்பிலும் (ஒருபடிப்பட்டு) அல்லினோடு ஆன மாலையும், Allinodu Aana Maalayum - ராத்ரியோடு கூடின ஸாயம்ஸக் த்யையிலும் நல் பகவினோடு ஆன காலையும், Nal Bhagavinoodu Aana Kaalaiyum - நல்ல அஹஸ்ஸோடு கூடிய ப்ராதஸ் ஸந்த்யையிலும் (ஆக ஸர்வகாலங்களிலும்) பாதம் பொதினை, Paadham Pothinai - உன்னுடைய திருவடித் தாமரையை புல்லி, Pulli - அனைத்து விளைவு இலாது, Vilaimu Iladhu - (ஒரு நொடிப்பொழுதும்) விச்சேதமில்லாமல் பூண்டு, Poondhu - அத்திருவடிகளையே மேற்கொண்டு மீண்டதில்லை, Meendathillai - நிலைத்து நிற்கின்றது. |
| 870 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 119 | பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே | பதவுரை Show / Hideஅரங்கம், Arangam - திருவரங்கத்திலே பொன்னிசூழ், Ponnichool - காவிரிசூழ்ந்த மேய, Meya - நித்யவாஸம் செய்தருள்கிற பூவை வண்ண, Poovai Vanna - காயம்பூப்போன்ற திருமேனியையுடைய மாய!, Maaya - ஆச்சர்யபூதரான பெரிய பெருமானே! கேள், Keel - (இவ்விண்ணப்பத்தைக்) கேட்டருள வேணும்; என்னது, Ennathu - என்னுடையது ஆவி என்னும், Aavi Ennum - ஆத்மா என்கிற வல்வினையினுள், Valvinaiyinul - வலிய பாபராசியிலே கொழுந்து எழுந்து உள்ள, Kozhundhu Ezhunthu Ulla - (தேவரீர் விஷயமான அநுராகமாகிற) கொழுந்து கிளர்ந்து உள்ள தேவரீருடைய பாதழ் என்ன நின்று, Paathazh Enna Nindru - திருவடியென்கிற ஒண்சுடர் கொழுமலர், Onchudar Kozhumalar - அழகிய சுடர்மிக்க புஷ்பத்திலே மன்னவந்து பூண்டு, Mannavandhu Poondhu - ஸ்திரமாக வந்து படிந்து எங்கும், Engum - தேவரீருடைய விபூதிகள் எல்லாவற்றிலும் வாட்டம் இன்றி நின்றது., Vattam Inri Nindrathu - குறையாமல் வியாபியா நின்றது |
| 871 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 120 | இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே | பதவுரை Show / Hideஉயக்கொள், Uyakkol - (நம்போல்வாரை) உஜ்ஜீவிக்கச் செய்பவனான மேகவண்ணன், Megavannan - காளமேக நிபச்யாமனான பெருமான் இன்று, Indru - இன்றைக்கு (நிர்ஹேதகமாக) இயக்கு அறாத பல் பிறப்பில், Iyakku Aradha Pal Pirappil - தொடர்ச்சிமாறாமல் நெடுகச் செல்லும்படியான பலவகைப் பிறப்புகளினின்றும் என்னை, Ennai - அடியேனை மாற்றி, Maatri - மாற்றுகைக்குத் திருவுள்ளம் பற்றி வந்து நண்ணி, Vandhu Nanni - இங்கேயெழுந்தருளி நெருங்கி தன்னில் ஆய என்னுள், Thannil Aaya Ennul - தன்னோடு அவிகாபூதமான என்னுள்ளே தன், Than - தன்னுடைய மன்னுசோதி, Mannuchothi - நித்ய ஜ்யோதிர்மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை மயக்கினான், Mayakkinaan - ஸம்ச்லேஷிப்பித்தான்! ஆதலால், Aadhalal - இப்படி புரையாறக் கலந்தருளுகையாலே என் ஆவி தான், En Aavi Than - எனது ஆத்ம வஸ்துவானது இயக்கு எல்லாம் அறுத்து, Iyakku Ellam Aruththu - ஒன்றோடொன்று இணைந்து கிடந்த அவித்யாதிகளை வேரறுத்து அறாத இன்பம் வீடு:, Aradha Inbam Veedu - ஒருநாளும் முடியாத இன்பமாகிய மோக்ஷஸுகத்தை பெற்றது, Pettrathu - பெற்றாதயிற்று |