திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 755 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
755ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 4
மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் மூன்று மூர்த்தியாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய் என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே
பதவுரை Show / Hide
மூன்று முப்பது, Moondru Muppathu - முப்பத்து மூன்று ஹல்லெழுத்துகட்கும்
ஆறினொரு ஒரு ஐந்தும் ஐந்தும், Aarinaroru Oru Aindhum Aindhum - பதினாறு அச்செழுத்துகட்கும்
ஐந்து, Aindhu - ளகாராதி பஞ்சாக்ஷரங்கட்கும்
ஆய், Aay - நிர்வாஹகனாய்
மூன்று மூர்த்தி ஆகி, Moondru Moorthi Aagi - ருக்கு, யஜுஸ், ஸரமம் னஎ“கிற வேதத்ரய ஸ்வரூபியாய்
மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய், Moondru Moondru Moondru Moondrum Aay - த்வாதசாக்ஷரீ ப்ரதி பாத்யனாய்
மூன்று தோன்று சோதி ஆய், Moondru Thondru Sothi Aay - மூன்று ட்அஷரமாகிய ப்ரணவத்திலே விளங்கும் ஜ்யோதிரிமயனாய்
துளக்கம் இல் விளக்கம் ஆய், Thulakkam Il Vilakkam Aay - என்று மழிவற்ற விளக்காகிய அகாரத்துக்கு வாச்யனாய்
எம் ஈசனே, Em Eesane - எமக்கு நிருபாதிக சேஷியாயிருப்பவனே!
என்று, Endru - (என் காரியங்களையெல்லாம் நீயே உன் தலைச்சுமையாக) ஏறிட்டுக்கொண்டு
என் ஆவியுள், En Aaviyul - என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே
புகுந்தது, Pugundhadhu - புகுந்திருப்பது
என் கொல்?, En Kol - என்ன நீர்மை!