திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 756 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 5 | நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே | பதவுரை Show / Hideநின்று, Ninru - ஸ்தாவரமாயும் இயங்கும், Iyankum - ஜங்கமமாயுமிருக்கிற ஒன்று அலா ருக்கள் தோறும், Onru Ala Rukkal Thorum - பலவகையான சரீரங்கள் தோறும் ஆவி ஆய், Aavi Aay - ஆத்மாவாய் ஒன்றி, Onri - பொருந்தி உள் கலந்து நின்ற, Ul Kalandu Ninra - பரிஸமாப்ய வர்த்தியாநின்ற நின்ன, Ninna - உன்னுடைய தன்மை, Thanmai - ஸ்வபாவம் இன்னது என்று, Innadhu Endru - இத்தகையதென்று என்றும், Endrum - எக்காலத்திலும் யார்க்கும், Yaarkkum - எப்படிப்பட்ட ஞானிகட்கும் எண் இறந்த, En Irandha - சிந்திக்க முடியாதிருக்கிற ஆதியாய், Aadhiyai - ஆதிகாரணபூதனனான எனம்பெருமானே! (நீ) அன்று, Andru - முற்காலத்திலே நின் உந்திவாய், Nin Undivai - உனது திருநாபியில் நான் முகன், Naan Mughan - சதுர்முகப்ரஹ்மாவை பயந்த, Payandha - படைத்த ஆதிதேவன் அல்லையே, Aadhithevan Allaiye - முழு முதற் கடவுளல்லையோர். |