திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 758 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
758ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 7
ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய் ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய் ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே
பதவுரை Show / Hide
ஒன்று இணர்டு மூர்த்தி ஆய், Onru Inartu Murtthi Ay - ப்ரதாநமான ஒரு மூர்த்தியும் அப்ரதாநமான இரண்டு மூர்த்தியுமாய்
உறக்கமோடு உணர்ச்சி ஆய், Urakkamotu Unarcci Ay - அஜ்ஞாநத்துக்கும் ஸத்ஜ்ஞானத்துக்கும் நியாமகனாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி, Onru Intu Kalam Aki - மூன்று காலங்களுக்கும் நிர்வாஹனாய்
வேலை ஞாம் ஆயினாய், Velai Nam Ayinay - கடல்சூழ்ந்த பூமண்டலத்துக்கு ப்ரவத்தகனாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி, Onru Intu Tiyum Aki - மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹனாய்
ஆயன் ஆய, Ayan Ay - கோபாலஸஜாதீயனாய் அவதரித்த
மாயனே!, Mayane - ஆச்சர்யபூதனான எம்பெருமானே!
ஒன்று இரண்டு கண்ணினாலும், Onru Intu Kanninalum - முக்கண்ணனான சிவபிரானும்
உன்னை, Unnai - உன்னை
ஏந்த வல்லனே, Enda Vallane - துதிக்க வல்லவனே!