திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 759 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 8 | ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே | பதவுரை Show / Hideஆதி ஆன கால, Ati An Kala - ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனானவனே!. ஆதி ஆன, Ati An - ஜக்த்ஸ்ருஷ்டி முதலினவற்றுக்குக் கர்த்தாக்களான வானவர்க்கும், Vanavarkkum - (பிரமன் முதலிய) தேவதைகட்கும். அண்டம் ஆய அப்புறத்து ஆகி ஆன வானவர்க்கும், Antam Ay Appurattu Aki An Vanavarkkum - அண்டமென்று பெயர் பெற்ற அப்பரமபதத்திலுள்ள ப்ரதாநகர்களான நித்யஸூரிகளுக்கும் ஆதி ஆன, Ati An - நிர்வாஹகனான ஆதி, Ati - அதிபதி நீ, Ni - நீயாகிறாய்; ஆதி ஆன, Ati An - ஜகத்துக்குக் கடவர்களாக ஏற்பட்டிருக்கிற வானம் வாணர், Vanam Vanar - (பிரமன் முதலிய) மேலுலகத்தவர்களினுடைய அந்த காலம், Anta Kalam - முடிவு காலத்தை நீ உரைத்தி, Ni Uraitti - நீ அருளிச்செய்ய நின்றாய். ஆதி காலம ஆன நின்னை, Ati Kalam An Ninnai - ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனான உன்னை. யாவர் காணவல்லர், Yaavar Kaanavallar - பரிச்சேதிக்க வல்லார் யார்? |