திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 760 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 9 | தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே | பதவுரை Show / Hideதாது உலாவு, Thaadu Ulaavu - தாதுகள் உலாவுகின்ற கொன்றை மாலை, Konrai Maalai - கொன்னைப்பூ மாலையையும் துன்னு செம் சடை, Thunnu Sem Sadai - நெருங்கிய சிவந்த சடையையுடைய சிவன், Sivan - ருத்ரன் நீதியால், Neethiyaal - முறைமைப்படி வணங்கு, Vanangu - வணங்கப்பெற்ற பாத, Paadha - திருவடிகளையுடையவனே! நின்மலா!, Ninmalaa - நிர்மலஸ்வரூபியே! நிலாய சீர்வேதம் வாணர், Nilaaya Seerveedham Vaanar - நிரம்பிய குணங்களையுடைய வைதிகர்களென்ன கீதம், Geetham - வேள்வியார் நீதி ஆன கேள்வி யார், Neethi Aana Kelpvi Yaar - சிரமப்படி ச்ரவண மநநங்களை ச் செய்கிற மஹான்களென்ன (இவர்கள்) நீதியால், Neethiyaal - சாஸ்த்ரவிதிப்படி வணங்கு நின்ற நீர்மை, Vanangu Nindra Neermai - வணங்குகைக்கு உரிய தன்மை. நின் கண்ணே நின்றது, Nin Kannae Nindrathu - உன் பக்கலில்தான் உள்ளது. |