திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 761 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
761ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 10
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல் நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும் நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே
பதவுரை Show / Hide
தன்னுள்ளே திரைத்து, Thannulle Thiraithu - தன்னிலே கிளர்ந்து
எழும், Ezhum - பரவுகின்ற
தரங்கம், Tharangam - அலைகளையுடைத்தாய்
வெண்தடம், Venthadam - வெளுத்த ப்ரதேசங்களையுடைத்தான
கடல், Kadal - கடலானது
தன்னுள்ளே  திரைத்து எழுந்து, Thannulle Thiraithu Ezunthu - தனக்குள்ளே கிளர்துலாவி
அடங்குகின்ற தன்மைபோல், Adanginru Thanmaipol - (மறுபடியும்) சாந்தமாவதுபோல.
நிற்பவும், Nirbavum - ஸ்தாவரஜங்கமரூபமான ப்ரபஞ்சமெல்லாம்
நின்னுள்ளே, Ninnulle - உன் ஸ்வரூபத்துக்குள்ளே
பிறந்து, Pirandhu - உத்பந்தமாய்
இறந்து, Irandhu - லாபமடைந்து
நின்னுள்ளே அடக்குகின்ற நீர்மை, Ninnulle Adakkinru Neermai - (இப்படி) உன் ஸ்வரூபத்துக்குள்ளேயே ஒடுங்கிப்பொருகைக்கு உரிய தன்மை
நின் கண்ணே நின்றது, Nin Kannae Nindrathu - உன் பக்கலில் தான் உள்ளது.