திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 762 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
762ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 11
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே
பதவுரை Show / Hide
சொல்லினால், Sollinaal - வேதாந்த சாஸ்த்ர முகத்தாலே
தொடர்ச்சி நீ, Thodarcci Nee - (ஏகாந்திகளுக்கு) உறவை உண்டு பண்ணுமவன் நீ;
சொலப்படும் பொருளும் நீ, Solappadum Porulum Nee - (சில புராணாதிகளில் ஆச்ரயணீயராகச்) சொல்லப்படுகிற தேவாதி பதார்த்தங்களுக்கு அந்ராத்மா நீ;
சொல்லரினால் சொல்லப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால், Sollarinaal Sollappadadhu Thondruginra Sothi Nee Sollinaal - நீ காட்டிக்கொடுத்த வேதத்திற் சொல்லியபடி
படைக்க, Padaikka - (உலகங்களை) உண்டாக்குவதற்காக
நீ படைக்க வந்து தோன்றினார், Nee Padaikka Vandu Thondrinaar - உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டு வந்து பிறந்தவர்களான ப்ரஹ்மாதிகன்
சொல்லினால், Sollinaal - சப்தங்களைக் கொண்டு
சுருங்க, Surunga - சுருக்கமாவாவது
நின் குணங்கள், Nin Gunangal - உனது கல்யாண குணங்களை
சொல்லவல்லரே., Sollavallarai - வர்ணிக்க சக்தர்களோ? (அல்லர்.)