திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 763 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 12 | உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே | பதவுரை Show / Hideஉலகு தன்னை, Ulaku Thannai - லோகங்களை நீ படைத்தி, Nee Padaiththi - நீ ஸ்ருஷ்டியாகின்றாய்; உள் ஒடுக்கி வைத்தி, Ul Odduki Vaiththi - (நித்யஸநமித்திகாதி ப்ரளயாபத்துக்களிலே அவ்வுலகங்களைத்) திருவயிற்றினுள்ளே ஒடுங்கவைத்து நீயே நோக்கா நின்றாய். மீண்டு, Meendu - அதுமன்றியில் உலகு தன்னே, Ulaku Thanne - இவ்வுலகத்தினுள்ளே பிறத்தி, Piraththi - வந்து அவதரியா நின்றாய்; ஓர் இடத்தை அல்லை, Oru Idaththai Allai - ஓரிடத்தை இருப்பிடமாகவுடையை என்று நிர்ணயிக்க முடியாதவனாயிரா நின்றாய்; உலகு, Ulaku - ப்ரபஞ்சம் முழுதும் நின்னொடு ஒன்றி நிற்க, Ninnodu Onri Nirka - (சரீரியான) உன்னோடு (சரீரமாய்) அணைந்து நிற்க வேறு நிற்றி, Veeru Nittir - அஸாதாரண விக்ரஹகத்தோடு கூடி வ்யாவ்ருத்தனாயிரா நின்றாய்; உலகில், Ulagil - லோகத்திலே குழல் உள்ள நின்னை, Kuzhal Ulla Ninnai - ஆச்சரியமான படிகளையுடைய உன்னை யாவலர் உள்ள வல்லவர், Yaavalar Ulla Vallar - அறியவல்லாரார்? |