திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 764 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
764ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 13
இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும் நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே
பதவுரை Show / Hide
இன்னை என்று, Innai Endru - ‘நீ இப்படிப்பட்டவன்’ என்று
சொல்லலாவது, Sollalavathu - சொல்லக்கூடியது
யாதும் இல்லை, Yaadum Illai - ஒரு படியுமில்லை;
உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர், Un Pinakku Unarnth Pettriyor - உன்னுடைய அவதாராதி விஷயங்களில் ஆச்ரிதர்க்கும் அநாச்சரிதர்க்கு முள்ள விவாதத்தை அறிந்திருக்கும் மஹான்கள் (உன்னை)
ஆதியும், Aadhiyum - (விக்ரக்ஷபரிக்ரக்ஷம் பண்ணினதற்குக்கு) காரணத்தையும்
நீர்மையால் நினைக்கில் (அல்லது), Neermaiyaal Ninaikkil Allathu - உன்னுடைய கிருபையினாலே நீ அறிவிக்க இறியுமதெழிய
இட்டிடை பின்னை கேள்வன் என்பர் நின்னை, Ittidai Pinnai Kelvvan Enbar Ninnai - நுண்ணிய இடையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு வல்லபனானகக் கூறுவர்கள்; உன்னுடைய
பின்னை ஆய கோல மோடு, Pinnai Aaya Kola Modu - ஸர்வவிலக்ஷணமான திவ்விய மங்கள விக்ரக்ஷத்தையும்
பேரும் ஊரும், Perum Oorum - திருநாமங்களையும் திவ்யஸ்தானங்களையும்
ஆர் நினைக்க வல்லர், Aar Ninaikka Vallar - (மற்றைப்படி) அறிய வல்லாரார்?