திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 768 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 17 | ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே | பதவுரை Show / Hideஆதி தேவனே, Aadhi Devaney - ஸர்வகாரண பூதனான பெருமாளே! ஏகமூர்த்தி ஆய், Ekamurthi Aay - (பரமபதநிலயனான) பரவாஸு தேவமூர்த்தியாய் மூன்று மூர்த்தி ஆய், Moondru Moorthi Aay - ஸங்கர்ஷண, ப்ரத்யம்ந, அநிருத்தர்களாகிற மூன்று மூர்த்தியாய் முதலாயிரம், Muthalayiram - திருச்சந்த விருத்தம் நாலு மூர்த்தி ஆய், Naalu Moorthi Aay - ப்ரதாநம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய் நன்மை சேர் போகம் மூர்த்தி ஆய், Nanmai Ser Pogam Moorthi Aay - விலக்ஷணமாய்ப் போகத்தக்கு அர்ஹமான மூர்த்தியாய் புண்ணியத்தின் மூர்த்தி ஆய், Punniyaththin Moorthi Aay - புண்யமே வடிவுகொண்டதொரு மூர்த்தியாய் எண் இல் மூர்த்தி ஆய், En Il Moorthi Aay - (இப்படி) எண்ணிறந்த (பல பல) மூர்த்தியாய் நலம் கடல், Nalam Kadal - நல்ல திருப்பாற்கடலில் நாகம் மூர்த்தி சயனம் ஆய் கிடந்து, Naagam Moorthi Sayanam Aay Kidandhu - திருவனந்தாழ்வானுடைய திருமேனியைப் படுக்கையாக வுடையவனாய்க் கண் வளர்ந்தருளி மேல், Mel - அதுக்குமேலே ஆக மூர்த்தி ஆய வண்ணம், Aaga Moorthy Aaya Vannam - அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சரவதாரமாய் அவதரித்த தன்மை என் கொல், En Kol - என்னாயிருந்தது. |