திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 769 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 18 | விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந் தழல்
விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப்
படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே | பதவுரை Show / Hideவேலை வண்ணனே, Vela Vannane - கருங்கடல் வண்ணனான எம்பெருமானே! விடத்த, Vidath - விஷத்தையுடைத்தான ஒரு ஆயிரம் வாய், Oru Aayiram Vaai - ஓராயிரம் வாய்களினின்றும் இரு ஆயிரம் கண், Iru Aayiram Kan - ஈராயிரம் கண்களினின்றும் வெம் தழல், Vem Thazhal - வெவ்விய தழலை விடுத்து, Viduthu - புறப்படவிட்டுக்கொண்டு, வீழ்வு இலாத போகம், Veelvu Iladha Pogam - ஒரு காலும் விச்சேதமில்லாத பகவநறுபவத்தையுடையனாய் மிக்க சோதி, Mikka Sothi - மிகுந்த ஜ்யோதிஸ்ஸையுடையனாய் விதானம் ஆய், Vidhanam Aay - மேற்கட்டிபோன்ற படங்களினுடைய மேல், Mel - மேற்புறத்திலே தொக்க, Thokka - திரள்திரளாயிருக்கிற சீர், Seer - அழகை தொடுத்து, Thoduthu - தொடுத்து பௌவம் நீர், Pauvam Neer - ஸமுத்ரஜலத்திலே படுத்த, Padutha - படுக்கையாக அமைந்த அரா அணை பாயல் பள்ளி கொள்ளது, Ara Anai Paayal Palli Kollathu - திருவனந்தாழ்வானாகிய சயகத்திலே பள்ளிகொண்டருளும் தன்னை என் சொல், En Sol - எத்திறம்! |