திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 771 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 20 | கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே | பதவுரை Show / Hideமுன், Mun - அநாதிகாலமாக. வேலைநீர், Velaineer - ஸமுத்ரஜலத்திலே கூசம் ஒன்றும் இன்றி, Koosam Ondrum Inri - சிறிதும் கூசாதே மாசுணம், Masunam - திருவனந்தாழ்வானை படுத்து, Paduthu - படுக்கையாக விரித்து பேச நின்று தேவர் வந்து பாடக் கிடந்ததும், Pesa Nindru Thevar Vandu Paadak Kidandhadum - ஸ்தோத்தரம் பண்ணுவதற்கென்று அமைந்த ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பாடும்படி சமநித்தருளினபடியையும் அன்று, Andru - தேவர்களுக்காகக் கடல் கடைந்த அக்காலத்தில் பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா (என்று) ஏச நீ கிடந்த ஆறும், Paasam Nindra Neeril Vaalum Aamaiana Keshavaa Enru Aesa Nee Kidandha Aarum - “வருண பாசங்கள் கிடக்கிற கடலிலேவாழ்கின்ற ஆமையென்னும் க்ஷுத்ர ஜந்துவாகப் பிறந்த கேசவனே!” என்று (அவிவேகிகள்) ஏசும்படி கிடந்தபடியையும் தேற, Theera - அடியேன் நன்குதெரிந்து கொள்ளும்படி கூறு, Kooru - (எனக்கு) அருளிச் செய்யவேணும். |