திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 773 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
773ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 22
பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும் உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப் புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே
பதவுரை Show / Hide
பண்டும் இன்றும் மேலும் ஆய், Pandhum Indrum Maelum Aayi - மூன்று காலங்களிலும் கைவிடாதே நின்று ரக்ஷித்தருளுமவனாகையாலே
ஞானம் எழும், Gnanam Ezhum - உலகங்களையெல்லாம்
மண்டி உண்டு, Mandi Undu - (ப்ரளய வெள்ளம் கொள்ளாதபடி) விரும்பி அமுது செய்து
ஓய் பாலன் ஆகி, Oy Palan Aagi - ஒப்பற்ற சிறு குழந்தையாய்
ஆலிலை துயின்ற, Aalilai Thuyindra - ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின
ஆதிதேவனே !, Aadithevaney - மூல புருஷனே!
வண்டு, Vandu - வண்டுகளானவை
கிண்டு, Kintu - (மதுவுக்காக வந்து) குடையும்படியான
தண்துழாய் அலங்கலாய், Thanthuzhai Alanghalai - குளிர்ந்ததிருத்துழாய் மாலையை அணிந்தவனே!
சீர் கலந்த புண்டரீக பாவை சேரும்மார்ப!, Seer Kalanda Pundareeka Paavai Serummaarpa - அழகு சேர்ந்த தாமரை மலரிற்பிறந்த பெரிய பிராட்டியார் வந்து புணரும்படியான திருமார்பையுடையவனே!
பூமி நாதனே!, Bhoomi Naadhane - பூமிப்பிராட்டிக்கு நாதனே! (என்று ஈடுபடுகிறார்.)