திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 774 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 23 | வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊனிறத் துகிர்த் தல மழுத்தினாய் உலாய சீர்
நானிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கி
பால் நிறக் கடல் கிடந்த பத்ம நாபன் அல்லையே | பதவுரை Show / Hideவால் திறந்து, Vaal Thirandhu - வெளுத்த நிறத்தையுடைய ஓர் சீயம் ஆய், Oru Seeyam Aayi - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாயவதரித்து வளைந்த வாள் வயிற்றினன், Valainda Vaal Vayittrinann - வளைந்தும் ஒளிபெற்றுமிருக்கிற பற்களையுடையனான இரணியனுடைய ஊன் நிறத்து, Oon Nirathu - சரீரத்தில் மர்ம ஸ்தானத்திலே உதிர் தலம் அழுத்தினாய், Uthir Thalam Azhuthinai - கை நகங்களை அழுத்தினவனே! உலாய சீர், Ulaaya Seer - உலகமெங்கும் உலாவுகின்ற சீர்மையையுடைய கால் நிறத்த வேதம், Kaal Niraththa Vedham - உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம்,ப்ரசயம் எனகிற நால்வகை ஸ்வரங்களையுடைய வேதங்களை நாவர், Naavar - நாவிலே உடையவர்கள் (ச்ரோத்ரியர்கள்) நல்ல யோதினால், Nalla Yothinaal - விலக்ஷணமான உபாயத்தினாலே வணங்கு, Vanangu - வணங்குவதற்கு இடமான பால்நிறக் கடல், Paalnirak Kadal - திருப்பாற் கடலிலே கிடந்த, Kidandha - பள்ளிகொண்டருளின பற்பநரபன் அல்லையே, Parpanarapan Allaiye - பத்மநாபன் நீயேயன்றோ |