திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 775 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 24 | கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர்
மங்கை மன்னு வாழு மார்ப வாழி மேனி மாயனே | பதவுரை Show / Hideகங்கை நீர், Gangai Neer - கங்கா தீர்த்தத்தை பயந்த, Payandha - உண்டாக்கின பாத பங்கயத்து எம் அண்ணலே, Paadha Pankayaththu Em Annale - தீருவடித் தாமரையையுடைய எம்பெருமானே! அம் கை, Am Kai - அழகிய திருக்கையிலே ஆழி சங்கு தண்டும் வில்லும் வாளும், Aazhi Sanghu Thandum Villum Vaalum - பஞ்சாயுதாழ்வாரக்ளை ஏந்தினாய் !, Aendhinai - ஏந்திக் கொண்டிருப்பவனே! சிங்கம் ஆய, Singam Aaya - நரஸிம்ம மூர்த்தியாயவதரித்த தேவ தேவ!, Deva Deva - தேவாதி தேவனே; தென் உலாவும் மெல்மலர் மங்கை, Then Ulaavum Melmalar Mangai - தேன் பொருந்திய ஸுகுமாரமான தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டி மன்னிவாழும் மார்ப, Mannivaazhum Maarba - (அப்பூவை விட்டு வந்து) பொருந்தி வாழும்படியான திருமார்பையுடையவனே! ஆழி மேனி, Aazhi Meeni - கடல் போன்ற திருமேனியையுடைய மாயனே, Maayaney - ஆச்சர்ய பூதனே! (என்று ஈடுபடுகிறார்.) |