திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 776 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 25 | வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே | பதவுரை Show / Hideவரத்தினில், Varathinil - (பிரமன் கொடுத்த) வரத்திலே சிரத்தை மிக்க, Sirathai Mikka - அதிகமான நம்பிக்கையுடையவனாய் வாள் எயிறு, Vaal Eiyiru - வாள் போன்ற (பயங்கராமன) கோரப்பற்களையுடையவனான மற்றவன், Mattravan - ஆச்ரித சத்ருவான இரணியனுடைய உரத்தினில், Urathinil - மார்விலே கரத்தை வைத்து, Karathai Vaiththu - திருக்கைகளை வைத்து உகிர்த்தலத்தை, Ukirthalathai - நகரங்களை ஊன்றினாய், Oondrinai - அழுத்திக் கொன்றாய்; நீ, Ni - இப்படிப்பட்ட நீ இரத்தி, Irathi - (ஒரு ஸயம் மாவலியிடத்தே சென்று) யாசிக்கிறாய்; இது என்ன பொய், Idhu Enna Poi - இது என்ன இந்திரஜாலம்! இரந்த மண், Iranda Mann - யாசித்துப்பெற்ற உலகத்தை வயிற்றுளே கரத்தி, Vayittrule Karathi - (ஒரு கால்) திருவயிற்றுக்குள்ளே ஒளித்து வைக்கிறாய்; உன் கருத்தை, Un Karuththai - (இப்படியெல்லாம், செய்கிற) உன்னுடைய கருத்தை யாவர் காண வல்லர், Yaavar Kaan Vallar - யார்கண்டறிவல்லார்! (யாருமில்லை.) |