திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 779 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 28 | படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே | பதவுரை Show / Hideபௌவம் நீர், Pauvam Neer - (அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை படைத்து, Padaiththu - ஸ்ருஷ்டித்து படைத்த, Padaitha - (பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட பார், Paar - பூமியை இடந்து, Idandhu - (ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து அளந்து, Alandhu - (த்ரிவிக்ரமனாய்) அளந்து உண்டு, Undu - (ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி உமிழ்ந்து, Umizhndhu - (ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும். பௌவம் நீர், Pauvam Neer - (இலங்கைக்கு அழகான) கடலை அடைத்து, Adaiththu - ஸேதுகட்டித் தூர்த்து. முன் அதில் கிடந்து, Mun Athil Kidandhu - முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி கடைந்த, Kadaindha - (ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின பெற்றிபோய்!, Petri Poy - (இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே! மிடைத்த, Midaiththu - செருக்கி வந்த மாலி, Maali - மாலி என்றகிற ராக்ஷஸனென்ன விலங்கு மான் மாலி, Vilangu Maan Maali - அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள் காலன் ஊர் புக, Kaalan Oor Puga - யமலோகம் போய்ச் சேரும்படியாக படைக்கலம் விடுத்த, Padaikalam Vidutha - ஆயுதங்களை ப்ரயோகித்தருளின பல் படை தடகை மாயனே!, Pal Padai Thadakai Maayane - பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது) |