திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 780 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
780ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 29
பரத்திலும் பரத்தையாதி பௌவ நீர் அணைக் கிடந்தது உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது அன்றியும் நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி யாயினாய் ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே
பதவுரை Show / Hide
நாத, Naadha - ஸ்வாமிந்!
ஞானம் மூர்த்தி ஆயினாய், Gyaanam Moorthi Aayinai - ஜ்ஞாநஸ்வருபியானவனே!
பரத்திலும் பரத்தை ஆகி, Paraththilum Paraththai Aagi - பராத்பரனாயிராநின்றாய்.
ஒருத்தி தன்னை, Oruvthi Thannai - ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை
உரத்தில், Urathil - திருமார்பிலே
வைத்து, Vaiththu - பிரியாமல் அணையவைத்து
உகந்து, Uganthu - மகிழ்ந்து
பௌவம் நீர் அணை கிடந்து, Pauvam Neer Anai Kidandhu - திருவாற்கடலாகிய சயநத்திலே கண்வளர்ந்தருளி
அது அன்றியும், Adhu Anriyum - இப்படிகளாலே ஆச்ரிரக்ஷணம் செய்வது மல்லாமல்
நரத்திலும், Naraththilum - ஹேயமான மானிட சாதியிலும்
பிறத்தி, Piraththi - வந்து பிறக்கின்றாய்;
நினாது தன்மை, Ninaadhu Thanmai - உன்னுடைய அநுக்ரஹ ஸ்வபாவத்தை
ஒருத்தரும், Oruvtharum - யாராகிலும்
இன்னது என்ன வல்லரே?, Innadhu Enna Vallarai - இப்படிப்பட்டதென்று பரிச்சேததிக்க ஸமர்த்தர்களோ? (யாருமில்லை.)