திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 782 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
782ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 31
கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய் ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின் பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே
பதவுரை Show / Hide
காலநேமி காலனே!, Kaalanemi Kaalane - காலநேமியென்னும் அஸுரனதுக்கு யமனானவனே!
கணக்கு இலாத கீர்த்தியாய், Kanakku Ilaadha Keerthiyaai - எண்ணிறந்த புகழையுடையவனே!
பண்டு, Pandhu - முன்பொருகால் (ப்ரளய காலத்திலே)
ஞாலம் எழும் உண்டு, Njaalam Ezhum Undu - ஏழுலகங்களையும் அமுது செய்து
பாட்டு, Paatu - மின்னறதெயிற்றரக்கன் வீழ
ஓர் பாலன் ஆய, Oru Palaan Aaya - ஒரு சிறுகுழந்தைவடிவமெடுத்த
பண்பனே!, Panbanne - ஆச்சர்யபூதனே
வேலைவேவ, Velaiveva - கடல்நீர் வெந்து போம்படி
வில்வளைத்த, Vilvalaittha - வில்லை வளைத்த.
வெல் சினத்த  வீர!, Vel Sinaththa Veera - எதிரிகளை வென்றேவிடும்படியான சீற்றத்தையுடைய வீரனே!
நின்பாலர் ஆய பக்தர் சித்தம், Ninpaalar Aaya Bhakthar Siththam - உன்பக்கல் அன்பு பூண்டவர்களின் சித்தத்தின்படி
முத்தி செய்யும், Muththi Seyyum - (அவர்கட்கு) மோக்ஷம் தந்தருள்கிற
மூர்த்தியே!, Moorththiye - ஸ்வாமியே!