திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 785 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
785ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 34
ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால் சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய் வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய் ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே
பதவுரை Show / Hide
ஆதி ஆதி ஆதி நீ, Aadhi Aadhi Aadhi Nee - மூன்று விதமான காரணமும் நீயே யாகிறாய்:
ஒரு அண்டம் ஆதி, Oru Andam Aadhi - அண்டத்துக்குட்பட்ட  ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமாகிறாய்;
ஆதலால், Aadhalal - இப்படியிருக்கையாலே
சோதியாத சோதி நீ, Sodhiyadha Sothi Nee - பரீக்ஷிக்கவேண்டாத பரம்பொருள் நீ நீயேயாகிறாய்;
அது உண்மையில், Adhu Unmaiyil - அந்த சோதியானது ப்ரமாணஸித்தாமகையாலே
விளங்கினாய், Vilanginai - (வேறொன்றாலன்றிக்கே) தானாகவே நீ விளங்குகின்றாய்;
வேதம் ஆகி, Vedham Aagi - வேதங்கட்கு நிர்வாஹகனாய்
வேள்வி ஆகி, Velvi Aagi - யஜ்ஞ்களாலே ஆராத்யனாய்
விண்ணினோடு மண்ணும் ஆய், Vinninodu Mannum Aay - உபய விபூதிக்கும் நியாமகனாய்
ஆதி ஆகி, Aadhi Aagi - இப்படி ஸர்வகாரண பூதனாயிருந்து வைத்த
ஆயன் ஆய மாயம், Aayan Aaya Maayam - இடையனாய்ப் பிறந்தாமயம்
என்ன மாயம், Enna Maayam - என்ன ஆச்சரியமோதான்.