திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 788 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
788ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 37
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால் ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின் பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா
பதவுரை Show / Hide
காய்ந்த, Kaayndha - காய்கள் நிறைந்ததும்
நீள், Neel - உயர்த்தியையுடையதுமான
விளங்கனி, Vilangani - (அஸுராவிஷ்டமான) விளாமரத்தின் கனிகளை
உதிர்த்து, Uthirthu - உதிரச்செய்து (அவ்வசுரனைக் கொன்று)
எதிர்த்த பூ குருந்தம், Edhirtha Poo Kuruntham - எதிரிட்ட வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்து
சாய்த்து, Saaythu - முடித்து
மா பிளந்த, Maa Pilantha - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்த
கைத் தலத்த, Kaid Thalaththa - திருக்கைகளையுடைய
கண்ணன் என்பர், Kannan Enbar - கண்ணன் என்று (உன்னை அறிவுடையார்) சொல்லுவார்கள்.
ஆய்ச்சி பாலை, Aaychchi Paalai - யசோதைப் பிராட்டியினுடைய முலைப்பாலை
உண்டு, Undu - அமுது செய்து
வெண்ணெய் உண்டு, Vennaiy Undu - நவநீதத்தை அமுத செய்து
பேய்ச்சிபாலை உண்டு, Peychchipaalai Undu - பூசதனையினுடைய முலைப்பாலை உண்டு
பின், Pin - கல்ப்பத்தின் முடிவில்
மண்ணை, Mannai - பூமியை
உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்து
பண்டு, Pandhu - கல்பத்தின் ஆதியிலே
ஓர் ஏனம் ஆய, Oor Aenam Aaya - ஒப்பற்ற வராஹருபியாய் அவதரித்த
வாமனா, Vaamana - வாமந மூர்த்தியே!