திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 789 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
789ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 38
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே
பதவுரை Show / Hide
கடம் கலந்த, Kadham Kalantha - மதஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி, Van Kari - வலிய (குவலயாபீடமென்ற) யானையினுடைய
மருப்பு, Maruppu - கொம்பை
ஒசித்து, Osiththu - முறித்தெறிந்து
ஓர் பொய்கை வாய், Oor Poykai Vaai - ஓர் மடுவின் துறையிலே
விடம் கலந்த பாம்பின் மேல், Vidam Kalantha Paambin Mel - விஷமனான காளியநாகத்தின் மேல்
நடம் பயின்ற, Nadam Payindra - நர்ததனம் செய்தருளின
குடம் கலந்த கூத்தன் ஆய, Kudam Kalanda Koothan Aaya - குடக்கூத்தாடின
கொண்டல் வண்ண!, Kondal Vanna - காளமேகம் போன்ற கண்ணபிரானே!
தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப, Than Thuzhai Vadham Kalanda Maalai Maarba - குளிர்ந்த திருத்துழாய் வடத்தோடு கூடன மாலையை அணிந்த திருமார்பையுடையவனே!
காலநேமி காலனே!, Kaalanemi Kaalane - காலநேமியென்னும் அசுரனுக்கு ம்ருத்யுவானவனே! (என்று ஈடுபடுகிறார்.)