திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 790 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 39 | வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே | பதவுரை Show / Hideவெற்பு எடுத்து, Verpu Eduthu - மந்தர பர்வதத்தைக்கொண்டு வேலை நீர், Velai Neer - கடல் நீரை கலக்கினாய், Kalakkinaai - கலங்கச் செய்தாய் அது அன்றியும், Adhu Anriyum - அதுவு மல்லாமல் வெற்பு எடுத்து, Verpu Eduthu - மலைகளைக்கொண்டு வேலை நீர், Velai Neer - (தெற்குக்) கடலிலே வரம்பு கட்டி, Varambu Katti - திருவணையைக்கட்டி வேலைசூழ், Velaisool - கடலாலே (அகழாகச்) சூழப்பட்டதாயும் வெற்பு எடுத்த இஞ்சி சூழ், Verpu Edutha Inji Soozh - மலையான மதினாலே சூழப்பட்டதாயுமுள்ள இலங்கை, Ilankai - லங்கையினுடைய கட்டு, Kattu - அரணை அழித்த, Azitha - அழியச் செய்த நீ, Ni - தேவரீர் வெற்பு எடுத்து, Verpu Eduthu - கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்து மாரி காத்த, Maari Kaatha - மழையைத் தடுத்த மேகம் வண்ணன் அல்லையே, Megam Vannan Allaiye - காளமேக நிபச்யாமரன்றோ! |