திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 792 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
792ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 41
ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய் மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும் மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே
பதவுரை Show / Hide
மாய !, Maaya - ஆச்சரியபூதனே. (நீ)
அயன் ஆகி, Ayan Aagi - இடப்பிள்ளையாய்ப் பிறந்து
ஆயர் மங்கை, Aayar Mangai - இடைப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினுடைய
வேய தோள், Veya Thol - வேய்போன்ற தோள்களை
அம்பரத்தோடு இம்பராய், Ambaraththodu Imbarai - மேலுலகத்தவர்களும் இவ்வுலகத்தவர்களுமா யுள்ளவர்களில்
யாவர், Yaavar - யார்தான்
நின்னை ஆயவல்லர், Ninnai Aayavallar - உன் ஸ்வரூபத்தை ஆராய்ந்து அறியவல்லர்? (யாரும் அறிய கில்லார்.)
மாயம் மாயை கொல்!, Maayam Maayai Kol - (இப்படி அறியமாட்டாதது) பிரகிருதியைப் பற்றின அஜ்ஞாகத்தலல்ல. (ஸர்வஜ்ஞராயிருந்தாலும் உன் ஸ்வரூபம் அறியமுடியாததே.)
அது அன்றி, Adhu Andri - அது அப்படியிருக்கட்டும்;
நீ, Ni - ஸர்வசக்தனான நீ
வகுத்தலும், Vaguththalum - (உன்னை வணங்கி வழிபடுவதற்கு உறுப்பாகக் கரணகளே பராதிகளை) உபகரித்திருக்கச் செய்தேயும்.
மாய, Maaya - (சேதகர்கள் அவற்றைக்கொண்டு நல்வழியில் புகாமல்) மாய்ந்துபோக
மாயம் ஆக்கினாய், Maayam Aakkinai - (இவரக்ளை ஸம்ஹரிப்பதே க்ஷேமமென்று) ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்;
உன் மாயம் முற்றும், Un Maayam Muttrum - உன்னுடைய ஸங்கல்பமெல்லாம்
மாயமே, Maayame - ஆச்சரியமாயிருக்கின்றன.