திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 793 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
793ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 42
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக் கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே
பதவுரை Show / Hide
கூசம் இன்றியே சென்று ஏறு அடர்ந்த ஈச, Koosam Indriye Sendru Eru Adarntha Eesa - கூசாமல் சென்று (நப்பின்னைப் பிராட்டிக்காக) எருதுகளை வலியடக்கின பெருமானை!
வேறு, Veru - வேறாக
இசைக்க, Isaiyakka - ஸம்ஹாரத்தொழிலுக்குத் தகுதியான
செக்கர் மேனி, Chekkar Meeni - சிவந்த உடலையுடையனாய்
நீறு அணிந்த, Neeru Anindha - பஸ்தாரியாய்
புண் சடை கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த, Poon Sadai Keeru Thingal Vaiththavan Kai Vaithth - ஹேயாமன ஜடையிலே சந்திரகலையை வைத்துக் கொண்டிருப்பவனான ருத்திரன்
கை வைத்த, Kai Vaithth - தன்கையில் வைத்துக் கொண்டிருந்த
வல் கபால் மிசை, Val Kapal Misai - வலிதான கபாலத்தை
ஊறுசெம் குருதியால், Ooruchem Kuruthiyal - உள் திருமேனியிலே ஊறா நின்றுள்ள சிவந்த ரத்தத்தாலே
நிறைந்த காரணம்தனை, Niraindha Kaaranamthaanai - நிறைந்த காரணத்தை
பேசு, Pesu - அருளிச் செய்யவேணும்.
பாட்டு, Paatu - பாலினீர்மை