திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 794 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 43 | வெஞ்சினத்த வேழ வெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே | பதவுரை Show / Hideவெம்சினந்த, Vemsinanth - உக்ரமான கோபத்தையுடைய வேழம், Vezham - குவலயாபீட மென்னும் யானை யினுடைய வெண் மருப்பு, Ven Maruppu - வெண்ணிறமான தந்தத்தை ஒசித்து, Osiththu - ஒடித்து (அந்த யானையை முடித்து) உருத்த, Uruththa - கோபிஷ்டனாயும் மா, Maa - பல்ஷ்டனாயுமிருந்த கஞ்சனை, Kanjanai - கம்ஸனை கடிந்து, Kadinthu - வதைசெய்து வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி, Vanjanaththu Vanda Paeychchi Aavi - வஞ்சனையால் வந்த பூதனையின் உயிரை பாலுன் வாங்கினாய், Paalun Vaanginai - முலைப்பாலுண்கிற பாவனையினால் ஆகர்ஜித்தவனே! மண் அளந்து கொண்ட காலனே!, Man Alandhu Konda Kaalane - (த்ரிவிக்ரமனாய்) பூமியெல்லாமளந்துகொண்ட திருவடியையுடையவனே! நீ. அஞ்சனந்த வண்ணன் ஆய, Anjanandha Vannaan Aaya - மைபோன்ற காந்தியையுடையனான ஆதிதேவன் அல்லையே, Aadhithevan Allaiye - ஆதிபுருஷனன்றோ? |