திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 798 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
798ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 47
காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும் ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால் சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே
பதவுரை Show / Hide
காரொடு ஒத்த மேனி, Kaarodu Oththa Meni - காளமேகத்தோடு ஒத்த திருமேனியையுடையனாய்
நங்கள் கண்ண, Nangal Kanna - எங்களுக்கு அநுபால்யனான கண்ணனே!
விண்ணின் நாதனே, Vinnin Nadane - நித்யஸூரிகட்குத் தலைவனே!
நீர் இடத்து, Neer Idathu - (நீதி) திருப்பாற்கடலிலே
அரா அணை, Ara Anai - திருவனந்தாழ்வான் ஆகிறபடுக்கையிலே
கிடத்தி, Kidathi - பள்ளிகொண்டருளா நின்றாய்
என்பர், Enbar - என்று (ஞானிகள்) சொல்லுவார்கள்
அன்றியும், Anriyum - அது தவிரவும் (நீ)
ஓர் இடத்தை அல்லை, Oru Idaththai Allai - ஓரிடத்தை இருப்பிடமாகவுடையையல்லை.
எல்லை இல்லை, Ellai Illai - (நீ உறையுமிடங்கட்கு) எல்லை இல்லை.
என்பர், Enbar - என்றும் சொல்லுவார்கள்
ஆதலால், Aadhalal - இப்படி உன் இருப்பிடம் ஸுல பமல்லாமையாலே
காயினேன், Kaayinen - மிகவும் நீசனாகிய அடியேன்.
சேர்வு இடத்தை தெரிந்து, Servu Idathai Therinthu - ஆச்ரயிப்பதற்கு உரியஸ்தலத்தை (இன்னதென்று) தெரிந்துகொண்டு
இறைஞ்சும் ஆ, Iraichum Aa - ஆச்ரயிக்கலாம்படியை
சொல், Sol - அருளிச் செய்யவேணும்.