திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 806 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
806ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 55
மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப் பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும் உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே
பதவுரை Show / Hide
மா மலர் மன்னு கிழத்தி, Maa Malar Mannu Kizhaththi - சிறந்த தாமரைப்பூவில் பொருந்திய பிராட்டுக்கும்
வையம் மங்கை, Vaiyam Mangai - ஸ்ரீபூமிப்பிராட்டிக்கும்
மைந்தன் ஆய், Maindhan Aayi - (விரும்பத்தக்க) யுவாவாய்,
பின்னும், Pinnum - மேலும்
ஆயர் பின்னை, Aayar Pinnai - (கோபாலரான ஸ்ரீகும்பருடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
தோள், Thol - தோளோடே
மணம் புணர்ந்து, Manam Punarndhu - ஸம்ச்லேஷித்து (விளங்குமவனாய்)
அது அன்றியும், Adhu Anriyum - அதுக்கு மேலும்
உன்ன பாதம், Unna Paatham - உன்னுடைய திருவடிகளை
என்ன சிந்தை, Enna Sindhai - என்னுடைய நெஞ்சினுள்ளே
மன்னை வைத்து, Mannai Vaiththu - பொருந்தவைத்து
கல்கினாய், Kalginai - அருள்செய்த பெருமானே!
பொன்னி சூழ் அரங்கம் மேய, Ponni Soozh Arangam Meya - (நீ) காவிரி சூழ்ந்த கோயிலிலே எழுந்திருளியிருக்கிற
புண்டரீகன் அல்லையே, Pundareekan Allaiye - தாமரைபோன்ற அவயங்களையுடைய தேவனன்றோ.