திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 808 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 57 | சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே | பதவுரை Show / Hideசங்கு தங்கு முன் கை நங்கை, Sangu Thangu Mun Kai Nangai - (நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய கொங்கை, Kongai - திருமுலைத்தடத்திலே தங்கல் உற்றவன், Thangal Utravan - விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய) அங்கம், Angam - சரீரமானது மங்க, Manga - மாளவேணுமென்று அன்று சென்று, Andru Senru - முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி அடர்ந்து, Adarnthu - அவ்வூரை ஆக்ரமித்து எறிந்த, Erindha - (அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய். ஆழியான், Azhiyan - கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான் கொஞ்கு தங்குவார் குழல், Konju Thanguvar Kuzhal - நீண்ட கூந்தலையுடையவர்களான மடந்தையார், Madandaiyar - திவ்யஸுந்தரிகள் குடந்தை, Kudanthai - அவகாஹிக்கப்பெற்ற நீர், Neer - தீர்த்தமானது பொங்கு, Pongu - வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற தண் குடந்தையுள், Than Kudanthaiyul - குளிர்ந்த திருக்குடந்தையிலே கிடந்த, Kidandha - பள்ளிகொண்டிராநின்ற புண்டரீகன், Pundareekan - ஸுந்தராங்கன். |