திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 810 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 59 | சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே | பதவுரை Show / Hideசாலிவேலி, Saliveli - செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய தண் வயல் தடம் கிடங்கு, Than Vayal Thadam Kidangu - குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன தண், Than - குளிர்ந்ததான குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே கோவலா, Kovalai - க்ருஷ்ணனே! காலநேமி, Kalanemi - காலநேமியென்ன வக்கரன், Vakkaran - தந்தவக்ரனென்ன பூபொழில் கோலம் நீடு மாடம், Poopozhil Kolam Needu Maadam - புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய் கரன் முரன், Karan Muran - கொடியவனான முரனென்ன இவர்களுடைய சிரம் அவை, Siram Avai - தலைகளானவை காலனோடு கூட, Kalanodu Kooda - யமலோகம் போய்ச் சேரும்படியாக வில்குனித்த, Vilkuniththa - வில்லை வளைத்த வில் கை, Vil Kai - அழகிய திருக்கையையுடைய வீரனே, Veerane - தனி வீரனே! (என்று ஏத்துகிறார்) |