திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 811 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 60 | செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே | பதவுரை Show / Hideசெழும் கொழும் பெரும்பணி, Sezhum Kozhum Perumpani - இடைவிடாதே தாரைகளாய் விழுகிற கனத்த மூடுபனியானது. பொழிந்திட, Pozhindida - பொழிந்தவளவிலே உயர்ந்த வேய் விழுந்து, Uyarntha Vei Vizhunthu - முன்பு ஓங்கியிருந்த மூங்கிற்பணைகள் (அப்பணியின் கனத்தாலே) தரையிலே சாய்ந்து உலர்ந்து எழுந்து, Ularndhu Ezhunthu - (பிறகு ஸூர்யகிரணங்களாலே அப்பனி) உலர்ந்த பின்பு எழுந்து, Ezhunthu - (அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி விண் புடைக்கும், Vin Pudaiyum - விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய வேங்கடத்துள், Vengadaththul - திருவேங்கடமலையிலே நின்று, Ninru - நின்றருளி தேன், Then - வண்டுகளானவை எழுந்து இருந்து பொருந்து, Ezhunthu Irundhu Porundhu - மேலே கிளம்புவதும் கீழே படிந்திருப்பதுமான நிலைமைகளோ பொருந்தியிருக்கப் பெற்ற பூ பொழில், Poo Pozhil - புஷ்பங்கள் நிறைந்த சோலைகள் தழை கொழும், Thazhai Kozhum - தழைத்தோங்கா நிற்கப்பெற்றதாய் செழும்கடல், Sezhumkadal - செழுமை தங்கிய தடாகங்களையுடைத்தான் குடந்தையுள், Kudandhaiyul - திருக்குடந்தையிலே கிடந்த, Kidandha - திருக்கண்வளர்ந்தருளா நின்ற மால் அல்லையே, Maal Allaiye - பெருமாள் நீயிறே. |