திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 812 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
812ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 61
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம் கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே
பதவுரை Show / Hide
விலங்கு, Vilangu - நீர் பெருகவொண்ணாதபடி    தடையாயிருக்கிற
மால் வரை, Maal Varai - பெருப்பெருத்த மலைகளையும்
கரம், Karam - பாலைநிலம் முதலிய அருவழிகளையும்
கடந்த, Kadandha - (வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற
கால் பரந்த, Kaal Parandha - விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய
காவிரி, Kaaviri - திருக்காவேரி நதியினுடைய
கூரை, Kooraik - கூரைமீது
குடந்தையும், Kudandhaiyum - திருக்குடந்தையிலே
கிடந்த ஆறு, Kidandha Aaru - திருக்கண் வளர்ந்தருளுகிறபடியானது
நடந்த கால்கள் நொந்தவோ, Nadandha Kaalgal Nondhavo - உலகளந்த திருவடிகள் நொந்ததனாலோ? (உலகளந்த வீடாய் தீரவோ?)
ஞாலம், Njaalam - பூமிப்பிராட்டியானவள்
நடுங்க, Nadunga - (பாதாளத்திலே உருமாய்ந்து நம்மை யெடுக்க வல்லார் ஆருமில்லையே’ என்று) நடுங்கிக் கிடந்த காலத்து)
ஏனம் ஆய், Enam Aay - மஹாவராஹமூர்த்தியாகி
இடந்த, Idandha - அப்பூமியை அண்டபித்தியில் நின்றும் விடுவித்து உத்தரிப்பித்த
மெய், Mei - திருமேனி
குலுங்கவோ?, Kulungavo - ச்ரமப்பட்டதனாலோ? (ஏனமாய் உலகிடந்த விடாய்தீரவோ?)
கோனே, Kone - கோவனே!
எழுந்திருந்து போ, Ezhunthirundhu Po - (எந்தவிடாய் தீரக் கிடக்கிறாயென்பதை) எழுந்திருந்து அருளீச்செய்க;
வாழி, Vaazhi - இக்கிடையழகு என்றும் வாழ்க.