திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 813 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
813ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 62
கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய் திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே
பதவுரை Show / Hide
கரண்டம் ஆடு பொய்கையுள், Karandam Aadu Poigaiyul - நீர்க்காக்கைகள் உலாவுகின்ற பொய்கையிலே
கரு பனை பெரு பழம், Karup Panai Peru Pazham - கரிய பெரிய பனம்பழங்களானவை
புரண்டு வீழ, Purandu Veezh - விழுந்துபுரள (அவற்றைக் கண்டு நீர்க்காக்கைகளாக ப்ரமித்து அஞ்சின)
வாளை, Vaalai - மீன்கள்
பாய், Paai - துள்ளியோடி யொனிக்கின்ற
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுக்குடியிலே எழுந்தருளியிருக்கிற
நெடுந்தகாய், Nedunthakai - மஹாதுபாவனே!
திரண்ட தோள், Thiranda Thol - திரண்டதோள்களையுடையவனான
இரணியன், Iraniyan - ஹிரண்யனுடைய
சினம்கொள் ஆகம் ஒன்றை, Sinamkol Aagam Ondrai - மாத்ஸர்யம் விளங்குகிற கடுமையின் அத்விதீயமான சரீரத்தை
இரண்டு கூறு செய்து, Irandu Koordu Seidhu - இருபிளவாகப் பிளந்து
உகந்த, Ugantha - மகிழ்ந்த
சிங்கம் என்பது, Singam Enbathu - நரஸிம்ஹ மூர்த்தியென்று சொல்வது
உன்னையே, Unnaiye - உன்னையோ? (ஸுகுமாரனானவுன்னை முரட்டுச் சிங்கமென்னத்தகுமோ?.)