திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 815 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
815ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 64
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம் அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே
பதவுரை Show / Hide
எந்தை, Endhai - எம்பெருமான்
ஊரகத்து, Ooragaththu - திருவூரகத்திலே
நின்றது, Nindrathu - நின்றருளினதும்
பாடகத்து, Paadakaththu - திருப்பாடகத்திலே
இருந்தது, Irundhadhu - வீற்றிருந்ததும்
வெஃகனை, Veghkanai - திருவெஃகாவில்
கிடந்தது, Kidandhadhu - திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்)
என் இலாத முன் எலாம், En Ilaadha Mun Elam - நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து
அன்று, Andru - அப்போது
நான் பிறந்திலேன், Naan Piranthilein - நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை
பிறந்தபின், Piranthapin - அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு)
மறந்திலேன், Marandhilein - மறக்கவில்லை
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே, Nindrathum Irundhathum Kidandhathum En Nenjule - ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர்.