திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 816 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 65 | நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே | பதவுரை Show / Hideஅற்புதன், Arputhan - (ஞானம் சக்தி முதலியவற்றால் ஆச்சரியபூதனும் அனந்த சயனன், Anantha Chayanan - அரவணைமேற் பள்ளி கொள்பவனும் ஆதிபூதன், Aadhipoothan - ஜகத்காரணபூதனும் மாதவன், Maadhavan - ச்ரியாபதியுமான பெருமான் ஓர் வெற்பு அகதது நிற்பதும் வீண், Oru Verppu Agathathu Nirpadum Veen - விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நின்றருள்வதும் பரமாகாசமென்னும் திருநாட்டிலே இரும்பும், Irumbum - வீற்றிருப்பதும் நல் பெருதிரை கடலுள் கிடப்பதும், Nal Peruthirai Kadalul Kidappadum - நல்ல பெரிய அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சாய்ந்தருள்வதும், நான் இலாத முள் எலாம் :, Naan Ilaadha Mul Elam - நான் முறையறியாதே அனத்தாய்க் கிடந்த காலத்திலேயாம்; (இப்பொழுதோவென்றால்) |