திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 817 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 66 | இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே | பதவுரை Show / Hideநின்று சாதல், Ninru Saadal - சிலகாலமிருந்து செத்துப் போவதோ அன்றி, Andri - இவ்விரண்டத்தொன்று தவிர யாரும், Yaarum - மேன்மக்களான ப்ரஹ்மாதிகளும் வையகத்து, Vaiyagaththu - இந்நிலத்திலே ஒன்றி நின்று, Onri Ninru - சிரஞ்சீவியாயிருந்து வாழ்தல் இன்மை கண்டும், Vaazhdhal Inmai Kandum - வாழ முடியாதென்பதை ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும் நீசர், Neesar - அறிவில்லாதவர்கள் அன்று பார் அளந்தபாதபோதை உன்னிசென்று, Andru Paar Alandhapathapothai Unnisendru - முன்பு பூமி முழுவதையும் அளந்தருளின பாதாரவிந்தத்தைச் சிந்தித்து சென்று, Sendru - அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று வானின்மேல் சென்று, Vaaninmel Sendru - பரமபதத்தேறப் புகுந்து தேவர் ஆய் இருக்கிலாத வண்ணம் என் கோல், Thevar Aay Irukkilaadha Vannam En Kol - நித்யஸூரிகளோடொக்க இராதது ஏனோ? |