திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 818 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 67 | சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி யுய்மினோ | பதவுரை Show / Hideசண்டன் மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று, Sandan Mandalaththinoodu Sendru Veedu Pettru - ஸூர்யமண்டல மத்யமார்க்கத்தாலே போய் வீடு பெற்று, Veedu Pettru - பரமபதத்தை அடைந்து (அவ்விடத்தில்) மேல்வீடு இலாத, Melveedu Ilaadha - பக்தியின் பயனான கைங்கர்ய காதல் இன்பம், Kaadhal Inbam - ஸுகத்தை நித்தியமாகப் பெற நாளும் கண்டு, Naalum Kandu - விருப்பமுடையவர்களே! எய்துவீர், Eyduveer - (முமுக்ஷுக்களே) புண்டரீக பாதன், Pundareeka Paadhan - தாமரைபோன்ற திருவடிகளையுடைனான பெருமானுடைய புண்ய கீர்த்தி, Punya Keerthi - பரிசுத்தமான திருப்புகழ்களை நும் செவி, Num Sevi - உங்களுடைய காதுகளிலே மடுத்து, Madhuthu - தேக்கி உண்டு, Undu - அநுபவித்து. நும் உறு வினை துயரும் நீங்கி உய்ம்மின், Num Uru Vinai Thuyarum Neengi Uymmin - உங்களுடைய ப்ரபல பாபங்களின் பலனை துக்கங்களின் நின்றும் நீக்கி உஜ்ஜிவித்துப்போங்கோள். |