திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 819 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 68 | முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ | பதவுரை Show / Hideமூத்திறந்து, Mooththirandhu - மூன்று வகைப்பட்ட (ஸாத்வீக, ராஜஸ, தாமஸங்களான) பல்களுக்குள்ளே இரண்டில், Irandil - (ஸாத்விகமொழிந்த) மற்றையிரண்டு பலன்களில் ஒன்றும், Ondrum - விருப்பமுடையரான நீசர்கள், Neesargal - நீசரான மனிசர்கள் அதில் இட்டு, Adhil Ittu - அந்த லோகத்திலே அந்தக் கரும பலன்களையொழித்து இறந்து, Irandhu - அவற்றை யநுபவிப்பதற்காகப் பூண்டுகொண்ட சரீரத்தை முடித்து போந்து, Pondhu - (மறுபடியும் கர்ப்பவான வழியாலே) பூலோகத்தில் வந்து மத்தர் ஆய், Maththar Aay - “தேஹமே ஆத்மா” என்கிற ப்ரமத்தையுடையராய் மயங்குகின்றது, Mayangugindrathu - மோஹித்துப்போவார்கள்; (அப்படிப்பட்டவர்கட்கு) உய்வது ஓர் உபாயம், Uyvadhu Oor Ubaayam - உஜ்ஜீவ்நோபாயம் எத்திறத்தும் இல்லை, Eththiraththum Illai - எவ்வழியாலுமில்லை, (மேலேறுவதும் கீழிறங்குவதுமாய்த் திரித்லொழிய நிலைநின்ற புருஷார்த்தம்பெற விரகில்லை) உய்குறில், Uykuril - (உங்களுக்கு) உஜ்ஜீவிக்க விருப்பமுண்டாகில் கொத்து இறுத்த, Koththu Iruththa - கொத்துக்கொத்தாகச் செறிந்த தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையனான நம் மாலை, Nam Maalai - பரமபுருஷனை வாழ்த்தி, Vazhthi - துகித்து வாழ்வின், Vazhvin - உஜ்ஜீவித்துப் போங்கோள். |