திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 820 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
820ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 69
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால் பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே
பதவுரை Show / Hide
காணிலும், Kaanilum - கண்டாலும்
உரு போலார், Uru Polaar - விகாரமான உருவத்தையுடையராயும்
செவிக்கு இனாத கீர்த்தியார், Sevikku Inadha Keerthiyar - காதுக்குக் கடூரமான சரித்திரங்களையுடையராயும்
பேணிலும், Penilum - (இப்படிப்பட்ட விகாரமான உருவத்தையும் ஹேமயமான சரிதையையும், கவனியாமல்) ஆச்ரயித்தாலும்
வரம் தர, Varam Thara - (ஆச்ரயித்தவர்கட்கு) இஷ்டத்தைக் கொடுக்க
மிடுக்கு இலாத, Midukku Iladha - சக்தியற்றவர்களாயுமுள்ள
தேவரை, Devarai - தேவதைகளை
ஆணம் என்று, Aanam Endru - சரணமென்றுகொண்டு
அடைந்து வாழும், Adaindhu Vazhume - அவற்றையடைந்து கெட்டுப்போகிற
ஆதர்கள், Aadhargal - குருடர்களே!
என் ஆதிபால், En Aathipaal - ஸர்வகாரணபூதனான எம்பெருமானிடத்து
பேணி, Peni - வழிபாடுகளைச் செய்து
நும், Num - உங்களுடைய
பிறப்பு எனும், Pirappu Ennum - ஸம்ஸாரமாகிற
பிணக்கு, Pinakku - பெரும்புதரை
அறுக்க கிற்றிரே, Arukka Kitrire - அறுத்தொழிக்க வல்லீர்களே?