திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 821 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
821ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 70
குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள் பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள் அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே
பதவுரை Show / Hide
குந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள், Kundhamodu Kulam Velkgal Thomarangal Thandu Vaal - ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட)
பந்தம் ஆன தேவர்கள், Pandham Aana Devargal - கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள்
பரந்து, Parandhu - (பல திக்குகளிலும்) சிதறிப் போய்
வானகம் உற, Vaanagam Ura - தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர
வந்த வாணன், Vandha Vaanan - (பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய
ஈர் ஐநூறு தோள்களை, Eer Ainooru Tholgalai - ஆயிரந்தோள்களை
துணிந்த நாள், Thunindha Naal - அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்)
அந்த அந்த அகுலம், Andha Andha Akulam - வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை
அமரரே அறிவர், Amararai Arivar - (நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.)