திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 822 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 71 | வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே | பதவுரை Show / Hideவண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால், Vandu Ulaavu Kothai Maathar Kaaranathinaal - (மகரந்தத்திற்காக) வண்டுகள் உலாவப்பெற்ற பூமாலையை அணிந்திருந்த உஷையின் நிமித்தமாக வெகுண்டு, Vegundu - கோபங்கொண்டு இண்ட, Inda - செறித்துவந்த வாணன், Vaanan - பாணாகரனுடைய ஈர் ஐ நூறு தோள்களை, Eer Ainooru Tholgalai - ஆயிரந்தோள்களை துணித்தநாள், Thuniththa Naal - கழித்தபோது முண்டன் நீறன், Mundhan Neeran - மொட்டைத்தலையனாய் நீறு பூசினவனான ருத்திரனும் மக்கள், Makkal - அவனுடைய குமாரர்களும் வெப்பு, Veppu - ஜ்வரதேவதையும் மோடி, Modi - பிடாரியும் அங்கி, Angi - அக்நி தேவதையும் (மற்றுமுள்ளவர்களும்) ஓடிட, Oadida - (பாணாசுரனை வஞ்சித்துவிட்டு. தங்களுயிரைக் காத்துக் கொள்ள) ஓடிப்போன வளவிலே கண்டு, Kandu - பார்த்து நாணி, Naani - (இந்த முதுகுகாட்டிப் பயல்களோடு போர் செய்யவா நாம் வந்தோமென்று) வெட்கப்பட்டு வாணனுக்கு, Vaananukku - பாணாகரன் விஷயத்தில் இரங்கினான், Iranginaan - கிருபைபண்ணினவன் எம்மாயனே, Emmaayaney - ஆச்சரிய சக்தியுக்தனான எம்பெருமானேயாவன். (‘எம் ஆயனே’ என்று பிரிக்கவுமாம். ஆயன் கண்ணபிரான்.) |