திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 823 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 72 | போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே | பதவுரை Show / Hideபோதில் மங்கை, Pothil Mangai - பூமகளான லக்ஷிமியும் பூதலம் கிழத்தி, Poothalam Kizhaththi - பூமிப்பிராட்டியும் தேவி, Devi - தேவிமாராவர்; அன்றியும், Anriyum - மேலும் போது தங்குநான் முகன், Pothu Thangunaan Mughan - பூவிலே பொருந்திருப்பவனான பிரமன் அவன் மகன், Avan Magan - பேரனாயிரா நின்றான்; என்று, Endru - இவ்வண்ணமாக வேதம்நூல், Vedhamnool - வேத சாஸ்த்ரம் ஓதுகின்றது, Odhugindrathu - உரைப்பதானது உண்மை, Unmai - ஸத்யம் மகன், Magan - புத்திரனாயிரா நின்றான்; சொலில், Soliil - மேலும் சொல்லப்புக்கால் மாது தங்கு கூறன், Maathu Thangu Kooraan - ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய் ஏறு அது ஊர்தி, Aeru Adhu Oorthi - எருதை வாஹனமாக வுடையனான சிவன் மற்று, Mattru - இங்ஙனன்றிக்கே அல்லது, Allathu - இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை) உரைக்கில், Uraikkil - (சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில் இல்லை, Illai - அது அஸத்யம் |