திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 824 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
824ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 73
மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச் சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான் வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும் நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே
பதவுரை Show / Hide
முன் ஓர் நாள், Mun Oor Naal - முன்னொரு காலத்திலே
மரம் பொத, Maram Potha - ஸம்பஸாலவ்ருஹங்கள் துளைபடும்படியாக
சரம் துரந்து, Saram Thurandhu - அம்பைப் பிரயோகித்து (அதற்குப் பிறகு)
வாலி வீழ, Vaali Veezha - வாலியானவன் முடியும்படியும்
உரம் பொத, Uram Potha - அவனது மார்பிலே பொத்தும் படியும்
சரம் துரந்த, Saram Thurandha - பாணத்தைப் பிரயோகித்த
உம்பர் ஆளி எம் பிரான், Umbar Aali Em Piraan - தேவாதி தேவனான எம்பெருமான்
வரம் குறிப்பில், Varam Kurippil - (தன்னுடைய) சிறந்த திருவுள்ளத்திலே
வைத்தவர்க்கு அலாது, Vaithavarkku Aladhu - யாரை விஷயீகரிக்கிறானோ அவர்கட்குத் தவிர;
வானம் ஆளினும், Vaanam Aalinum - மேலுலகங்கட்கு அதிபதிகளாயிருந்தாலும்
யார்க்கும், Yaarkkum - மற்றவர்கட்கும்
நிரம்பு நீடு போகம், Nirambu Needu Pogam - சாச்வதமாய்ப் பர்பூர்ணமான கைங்கர்யஸுகம்
எத்திறத்தும், Eththiraththum - எவ்வழியாலும்
இல்லை, Illai - கிடைக்கமாட்டாது.