திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 826 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
826ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 75
ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம் நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய் சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய் அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே
பதவுரை Show / Hide
ஒன்றி நின்று, Onri Ninru - மனம் சலியாமல் நிலைத்து நின்ற
நல் தவம், Nal Thavam - விலக்ஷணமான தபஸ்ஸை (அதாவது  கர்மயோகத்தை)
ஊழி ஊழிதோறு எலாம் செய்து, Oozhi Oozhithoru Elam Seidhu - பலபல ஜந்மபரம்பரைகளிலே அநுஷ்டித்து
அவன் குணங்கள், Avan Gunangal - அப்பெருமானுடைய திருக்குணங்களை
நின்று நின்று உள்ளி, Ninru Ninru Ulli - ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுஸந்தித்து
உள்ளம் தூயர் ஆய், Ullam Thuyar Aay - கல்மஷமற்ற நெஞ்சை யுடையராய்
சென்று சென்று, Sendru Sendru - மேல்மேல் படிகளிலே ஏறி (ச்ரவணம்  மநநம் நிதித்யாஸதம் என்கிற பர்வங்களிற் சென்று)
உம்பர் உம்பர் உம்பர் ஆய் அன்றி தேவதேவர், Umbar Umbar Umbar Aay Andri Deevadevar - பரபக்தி யுக்தராய் பரஜ்ஞாந யுத்தராய் பரம பக்தியுந்தராய் இப்படி யெல்லா மானால்லது
தேவதேவர், Deevadevar - (மற்றபடி) தேவதேவராயிருந்தாலும்
எங்கள் செம் கண் மாலை, Engal Sem Kan Maalai - செந்தாமரைக் கண்ணாலே எம்மை விஷயீகரித்தருளும் பெருமானை
யாவர் காணவல்லர், Yaavar Kaanavallar - யார் காணக்கூடியவர்கள்.