திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 831 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
831ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 80
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே
பதவுரை Show / Hide
வாசி ஆகி, Vaasi Aagi - (கோவேறு) கழுதையின் வடிவங்கொண்டு
நேசம் இன்றி வந்து, Nesam Inri Vandu - பக்தியற்றவனாய் வந்து
எதிந்த, Edhintha - எதிரிட்ட
தேனுகன், Thenughan - தேநுகாஸுரனை
நாசம் ஆகி நான் உலப்ப, Nasam Aagi Naan Ulappa - ஆயுள் ஸுமாண்டு அழிந்து போம்படியாக
மேல் நிமிர்ந்த தோளின், Mel Nimirtha Tholin - உயர்த்தூக்கப்பட்ட தோளாலே
நன்மை சேர் பணங்கனிக்கு வீசி, Nanmai Ser Pananganikku Veeci - அழகிய பணம்பழங்களின் மேலே தூக்கியெறிந்து
இல்லை ஆக்கினாய் கழற்கு, Illai Aakkinai Kazharku - (அவ்வசுரனை) ஒழித்தருளின தேவரீருடைய திருவடிகளுக்கு
ஆசை ஆமவர்க்கு அலால், Aasai Aamavarkku Alal - நேசிக்குவமர்களுக்கன்றி மற்றையோர்க்கு
அமரர் ஆகல், Amarar Aagal - நித்யஸூரிகளோடு ஒப்படைத்தல்
ஆகுமே, Agume - கூடுமோ?