திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 832 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 81 | கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ | பதவுரை Show / Hideகடைந்த, Kadaindha - (கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட பால் கடல், Paal Kadal - திருப்பாற்கடலிலே கிடந்து, Kidandhu - கண்வளர்ந்தருளியும் காலநேமியை, Kaalanemiyai - காலநேமியென்னுமசுரனை கடிந்து, Kadinthu - ஒழித்தருளியும் உடைந்த, Udaindha - நடுங்கிக் கிடந்த உதவ, Udhava - உபகாரம் செய்ய இராமன் ஆய் வந்து, Iraman Aayi Vandu - இராமபிரானாய் வந்து தோன்றி மிடத்தை, Midathai - ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த ஏழ் மரங்களும், Ezha Marangalum - ஸப்தஸால வ்ருக்ஷங்களையும் அடங்க, Adanga - ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும் எய்து, Eythu - பாணத்தாலே துளைபடுத்தி வேங்கடம் அடைந்த, Vengadam Adaindha - திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான மால, Maal - எம்பெருமானுடைய பாதமே, Paadame - திருவடிகளையே நாளும், Naalum - நாள்தோறும் அடைந்து, Adaindhu - ஆச்ரயித்து உய்ம்மின், Uymin - உஜ்ஜிவியுங்கள் |